எந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் செங்கல்பட்டு போலாகுமா?

(ஆங்கிலம்:Chengalpattu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்
செங்கழுநீர்ப் பூ
அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் செங்கல்பட்டு வட்டத்தின் தலைமையகமான ஒரு நகராட்சி ஆகும். செங்கல்பட்டு சென்னையின் புறநகர் பகுதியாகும். இது சென்னையின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது.

பெயர் மூலம்  
முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப்
பூக்கள் நிறைந்திருந்தன என்பர். எனவே, செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டது. அது மருவி செங்கல்பட்டு என அழைக்கப்படலாயிற்று.

வரலாறு
விஜயநகரப் பேரரசு மன்னர்கள் அவர்களின் தலைநகராக செங்கல்பட்டு குறிப்பிட்ட காலத்திற்கு இருந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். விஜயநகர மன்னர்கள் கட்டிய செங்கல்பட்டு கோட்டையும் செங்கல்பட்டில் இருக்கிறது. காலனி ஆட்சிகால வரலாற்றை இது பொக்கிஷமாக வைத்து இருக்கிறது.

புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12.7°N 79.98°E ஆகும்கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 36 மீட்டர் (118 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,579 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்இவர்களில் 30,982 ஆண்கள், 31,597 பெண்கள். செங்கல்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். செங்கல்பட்டு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கல்வி
இந்நகரில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிலையங்கள் உள்ளன.

போக்குவரத்து
தமிழ்நாட்டின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் செங்கல்பட்டின் வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
செங்கல்பட்டு ஒரு தொடருந்து சந்திப்பாகும். முக்கிய அகலப் பாதையைக் கொண்டுள்ள இவ்வூரில் தமிழ்நாட்டின் தெற்கு நோக்கிச் செல்லும் தொடருந்துகள் நின்றுசெல்லும்.
                                                       

1 comment:

  1. மேற்கூறிய தலைப்பில் மாதாந்தம் ஆரம்ப நாட்களில் நம்மவர் ஊர் தொடர்பான கட்டுரை வெளியிடப்படும்.உங்கள் ஊரின் பெருமைகளையும் வரலாற்றினையும் எழுதி அனுப்புங்கள்.மகிழ்வுடன் வெளியிடுவோம்.மேலும் உங்கள் ஊர் தொடர்பாக நாமும் எமது வாசகர்களும் கற்றுக்கொள்வோம்.
    ---நன்றி [ஆசிரியர்]

    ReplyDelete