பெண்னே உன் அன்பு இன்றி
என் இளமை அழகு பெறுமா?
கடல் அலையும் பொங்காவிடின்
கடலும் அழகு பெறுமா?
உன் அன்பினால் நானும்
உன் அன்பு கடலில் மூழ்கி
முத்தை எடுத்து கொள்ளலாம் என
உன் நிஜத்தில் நானும்
என்னை மெய் மறக்கிறேன்
உன் ஓசை ஒலி கேட்கும்
ஓவ்வொரு நிமிடமும்
இதயத்திலும் சந்தோஷ
மலர் பூக்கிறது
இதனால் என் மனமும்
பூரிப்பு அடைந்து
உன் பற்றிய கனவு சுமந்து
உன் முகத்தை தேடி
வானத்தில் பறக்கிறேன்
அங்கே நிலாவுடன்
உன்னை பற்றி
ஆயிரம் கதை சொல்லி
என் உணர்வை பகிர்ந்து
மகிழ்வு கொள்கிறேன்.
No comments:
Post a Comment