சித்திரை மகளே விரைந்து வருக ! [ஆக்கம்:அகிலன் தமிழன்]

சித்திரை தமிழ் வருடமே 
  புது தென்றலாக வருக!
 நிம்மதி இழந்து இருக்கும்
    உறவுகளின் கனவுகள் 
            நிறைவேறி 
  அவர்கள் வாழ்விலும்
   ஆனந்த அலை வீச 
   புத்தாண்டே வருக!


இனங்களுகிடையில்
ஒற்றுமைக்குத் தடையாக 
இருக்கும் இனவாதம் ஒழிந்து
சமத்துவம் ஏற்பட்டு எங்கும்
அமைதி பரவி 
நாடு செழிமை பெற
புத்தாண்டே வருக!

எழைகளின் வறுமை நீங்கி
 நிறைந்த வாழ்வு பெற்று 
     ஏற்ற தாழ்வு நீங்கி 
வலு இழந்தோர் மனதில்
நல்ல சிந்தனைகளைத் தூவி 
   அவர்களின் வாழ்விலும்
     மகிழ்வை கொடுக்க 
      புத்தாண்டே வருக!
          
ஊருக்கே 
 உணவளிக்கும்  விவசாயிக்கு
 நல்ல விளைச்சலை கொடுத்து 
 அவன் மனம் குளிர்ந்து 
 வாழ்வில் சிறந்து வாழ 
  விரைந்து வருக புத்தாண்டே
 விரைந்து வருக!

                                                     ஆக்கம்:அகிலன்  தமிழன்        

No comments:

Post a Comment