தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
மீண்டும் பங்குனி இதழினூடாக உங்கள் மனங்களில் வலம் வருவதில் மகிழ்வடைகிறோம்.
தீபத்தின் வெளியீடுகளில்பல தலைப்புக்கள் பிரபல்யங்களை நோக்கி படையெடுப்பது கண்டு பிரமிப்பதோடு அதன் எழுத்தாளர்களுக்கு உங்கள் சார்பில் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
உலகில் ''மனிதப்பிறவி மகத்தானது'' என சான்றோர் கூறுவதும். மாணிக்க வாசகர் வாசகத்தில் ''புல்லாகிப் பூடாகி புழுவாய் மரமாகி பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாமனிதரா'' என புவி வாழ்வதனுள் மனிதனை உயர்வாகக் காட்டுவதையும்
என் நண்பன் என்றைக்கும் இக்கருத்தினை ஏற்றுக்கொண்டதில்லை. ஏனெனில் பறவைகள் விலங்குகள் முதலான அனைத்து உயிரினங்களிலும் ஏதாவது சில கெட்டகுணங்கள் இருப்பது வழக்கம் எனினும் அது தன இனத்தினை அழிக்கவோ காட்டிக்கொடுக்கவோ முனைவதில்லை. மத,சாதி பேதங்களை,மோதல்களை அவைஉருவாக்கவில்லை. பேராசை க்கடலில் மூழ்கவில்லை. புவியின் அழிவுக்கு வித்திட்டதில்லை.அவை செய்யாத கெட்ட செயல்கள் எல்லாம் மனிதன் செய்கின்றான். அவை தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றியது கிடையாது.ஆனால் மனிதன் காணும் அனைத்தையும் விழுங்கத் தயாராகிவிட்டான். அதனால் பல புதிய நோய்களையும் சம்பாதித்து விட்டான்.விழுங்கும் ஆவலில், அவசரத்தில் [பறவைகள் விலங்குகள்] அவைக்கும் தம் இரசாயன பதார்த்தங்களை திணித்து அவைகளையும் நோயாளிகளாக்கி தானும் ஆயுளைக் குறைத்துக் கொண்டிருக்கிறான். ஆமாம் இவ்வுலகம் எங்கே போய் முடியப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்பதற்கு எம்மையும் இந்த விண்ணாணம் விட்டால்தானே!
No comments:
Post a Comment