ஒளிர்வு:64- மாசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ,2016

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
'முயற்சி திருவினை ஆக்கும்' என்பது ஆன்றோர் வாக்கு.உலகத் தமிழர்களின் மத்தியில் மாதாந்த சஞ்சிகையாக மலர்ந்த தீபம்  வாசகர்களினது ஊக்குவிப்புகளின் பலனாக நாளாந்த புதுப்பித்தல்களுடன் மேலும் வாசகர்களினை உள்வாங்கிக் கொள்ளும் நிலையில்  பல்வேறு நாடுகளிலும் வாழ் தமிழ் பேசும் வாசகர்களினை பெற்றுக்கொள்ளும் தகமையினை பெற்றுக்கொண்டது எமக்கு மிகவும் மகிழ்ச்சியினை அளிப்பதுடன் அனைவருக்கும் பயன் உள்ளவாறு எமது பக்கங்களை மேலும்  உருவாக்க நேரம் இல்லாத சூழ்நிலையிலும் கூட, உழைக்க உற்சாகம் அளிக்கிறது.நன்றி,நன்றி,நன்றி.
பாடசாலை வசதியிலா ஒரு ஊரில் ஒருவன் மட்டும் வெளியூர் சென்று படித்து வைத்தியராகிவிட்டான்.ஆனால் பழைமையில் ஊறிப்போன அவனது ஊர் அவனது வைத்தியங்களை ஏற்காது அவனுக்கு பைத்தியக்காரன் பட்டத்தை அளித்துவிட்டது. வெளியூரிலும் படியாதோர் வாழும் அவனது ஊரினை கூற வெட்கப்பட்டான். அதனால் வெளியூரிலும் அவன் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை ஏன் குறிப்பிடுகிறேன் எனில் 
தனித்து ஒருவன் வளர்ந்துவிட முடியாது.பார்வையில் ஒருவன் வளர்ந்ததாக தெரியலாம்.அது உண்மையான வளர்ச்சியல்ல.நாமும் வளர்வதோடு எமது சமுதாயமும் வளரவேண்டும்.

ஒரு சமுதாய வளர்ச்சியே அவனுக்கு போகுமிடமெலாம் பெருமை.அதன் அடிப்படையிலேயே நாம் ஆக்கபூர்வமான ஆக்கங்களுடன் அனைவரையும் அணைத்தே வம் வருகிறோம். 
    please click 'like' on theebam magazine-thanks 

0 comments:

Post a Comment