FOOD HABITS OF TAMILS//PART:25[

((Compiled by: Kandiah Thillaivinayagalingam))
[Food Habits Of present Tamils-continuing]
Puttu is a very popular breakfast dish of steamed cylinders of ground rice layered with coconut.This referred to as Pittu in Sri Lanka.In old times puttu was steamed in a bamboo tube with a pierced disc at the bottom, fixed tightly over the mouth of a pot in which water was boiled.These days instead of using bamboo tubes for steaming,puttu is cooked in metal tubes fitted over a pot or pressure cooker.In Tamil Nadu the sweet version of puttu,made with jaggery is a food offering during the nine day Navarathri festival.Sweet puttu was also made in old days when a girl child attained puberty,and the coconut palm blossomed for the first time.Other popular,morning meal,Idiyappam, fresh
steam-cooked fine rice noodles are traditionally made by soaking and grinding rice into a very fine batter.Then the batter is mixed with salt and a tablespoon of oil and cooked over medium heat to remove all water.It is stirred constantly so that no lumps form.After a few minutes it thickens and come together into a ball of soft dough.It is cooled and then either pressed through a wooden or metal press with many small holes at the bottom and then steamed,or first steam the dough and then squeeze the noodles using the press.The noodles are squeezed out in a circular pattern onto a steamer plate with small holes at the bottom (same is used for steaming idli) They
are then steamed for about five to eight minutes.dosa is another favoured item for either breakfast or dinner.A Vijaynagar inscription[Kannada] details the proportions as being equal measures of rice and Ulundu.Moving from dishes more popular to others less popular is today’s kitchen, we come to the sweet called Kummayam. Periyazhwar mentions this in the Divya Prabhandam.This dish is still served in a few Vishnu temples rarely. It is made of rice,Gram dhal[ Payaru Paruppu], cow’s ghee, curd, banana and sugar.This recipe is from the 10 th century AD.The inscription also adds, that by equating the sugar measure to the rice, Chakkarai Pongal can be made.Many inscriptions chiselled on the walls of temples reveal how food habits and religious practices became intertwined. Nowadays,food eating culture is depending on tongue’s taste and hence many people eat food whenever they like thereby inviting many diseases.So, it is important to know the food eating method with these delicious taste to lead a healthy life forever.

Onion, Tomatoes, green chilly,cloves,refined oil,sugar etc., were
not available in sangam age.Today we can’t imagine the cooking without the above said ingredients and sweets without sugar.Peppercorns,coriander seeds,Black Jaggery,Tender coconut,Honey,ginger,Turmeric,Tamarind,Mustard seeds,ghee are the ingredients used on early days.In 15 & 16th century, many ingredients were introduced for the cooking through trade. After the introduction of groundnut oil in Vijayanagara dynasty that produced more deep fried foods.India has many cuisines to offer but our Tamil
food is the premiere cuisine.Even the famous biriyani had its origin in South India, not from anywhere. According to Tamil works  Pathitruppathu and Purananuru etc,which vastly describes the food and fermentation method done in ancient days,-the warriors / soldiers were fed with “Oonthuvaiadishil [ஊன்துவை அடிசில்]” or “Oonsoru[ஊன்சோறு]” (means boiled rice with meat) by the King before they were going to warfront and also this biriyani were served to soldiers whenever there were victories at war.

"You dined in the company of your warriors,
men who did not run away from battles,
feeding them abundant meat and rice
cooked together[biriyani]."-[Pathitruppathu  45,lines 13-17]

Here,the line "சோறு வேறு என்னா *ஊன் துவை அடிசில்",clearly indicate that "inseparable meat mixed rice".

PART :26 WILL FOLLOW.........                   

நாடுவிட்டு நாடு படை எடுக்கும் வண்ணாத்திப் பூச்சிகள்

வண்ணத்துப் பூச்சிகள் இலைகளில் முட்டைகளைப் போடும். அவை 3-12 நாட்களில் கட்டர்பிலர்களாக வெளி வரும். இவை இலைகளை உண்டு வளரும். இரு வாரங்களின் பின் கம்பளிப் புழுவாக வளர்ந்து திரியும். மயிர்கொட்டி, மசுக்குட்டி என்றும் அழைப்பார்கள். கம்பளிப் புழுக்கள் இலைகளின் அடிப்புறம் ஒட்டிக் கொண்டு இருந்து தலை கீழாகத் தொங்கும். அது தோலை சிறிது சிறிதாகக் கழற்றி கூட்டுப் புழுவாக மாறிவிடும்.
இவையே இரு வாரங்களின் பின் வண்ணத்துப் பூச்சிகளாக வெளிவருகின்றன. பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும். உணவு உற்பத்திக்கு வழிகோலும் ஒரு அழகிய உயிரினம். இவை வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் இயல்புடையன. சூழலுக்கு ஏற்றதுபோல தமது வண்ணங்களை மாற்றிக் கொள்ளும்.மீண்டும் பழைய வர்ணத்திற்குத் திரும்பும் என்கிறார்கள் இதன் ஆராச்சியாளர்கள்.
இவற்றின் வண்ணங்களுக்கு நிறமிகள் அல்ல. அவற்றின் கலங்களின் அமைப்புத்தான் காரணம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
பறவைகள் பருவ காலங்களில் கண்டம் விட்டுக் கண்டங்களுக்குச் செல்வதுபோல வண்ணத்துப் பூச்சிகளிலும் சில இனங்கள், குறிப்பாக மோனார்ச் Monarch இனங்கள் நீண்ட நாட்கள் வாழும் இயல்புடையவை. 4000- 4800 கிலோ மீற்றர் தூரம் வரை நீண்ட தூரங்கள் பறந்து செல்லும் வல்லமையுடையன.
வசந்தம் வந்ததற்கு அறிகுறியாக சில மாதங்களுக்கு முன் மெக்சிகோ நாட்டில் பெரும்தொகையான வண்ணத்துப் பூச்சிகள் ஒன்று கூடியிருக்கின்றன. அதைப் பல நாட்டினரும் சென்று கண்டு களித்திருக்கிறார்கள். வண்ணத்துப் பூச்சிகளில் காடுகளில் வசிப்பவையில் சில விஷமுள்ளவை. வண்ணத்துப் பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகை இனங்கள் உள்ளன என்கிறார்கள். தென்னிந்தியாவில்
315 வகைகள் இருக்கின்றனவாம். இலங்கையில் சிவனொளிபாத யாத்திரை காலத்தில் பெரும்தொகையான வண்ணத்துப் பூச்சிகள் கூட்டமாக அப் பகுதியில் சிறகடித்துப் பறந்து செல்வதைக் காணலாம்.வண்ணத்துப்பூச்சி சரணாலயம் தெஹிவல மிருகக் காட்சிச் சாலையில் இயற்கையொடு இசைந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல இன வண்ணத்துப் பூச்சிகளைக் கண்டு களிக்கலாம். இப்பொழுது கொலம்பியாவில் வீட்டுவளர்புப் தொழிலாகவும் வண்ணத்துப்பூச்சிகளை வளர்க்கிறார்கள். வண்ணத்துப்பூச்சிகளின் ஆராச்சிகள் விரிவடைந்திருப்பதால் வளர்ப்பும் அதிகரித்து இருப்பதாகச் சொல்கிறார்கள். சிங்கப்பூரில் ஷாங்கி விமான நிலையத்தில் பட்டாம் பூச்சிப் பூங்கா அமைத்து இனங்கள் அழியாமல் காத்து வருகிறார்கள்.
3500 வருடங்களுக்கு முன்பிருந்தே எகிப்தில் வண்ணத்துப் பூச்சிகள் வர்ணம்
தீட்டப்பட்டிருக்கினறன. பெரும்பாலும் ஆலயங்கள் கட்டிடங்களில் செதுக்கப்பட்டிருப்பதும் காண முடிகிறது. இப்பொழுதும் ஆடை ஆபரண அணிகலங்களில் வண்ணத்துப் பூச்சிகள் முதலிடம் பிடித்து வருவதைக் காணலாம்.
சிறுவர்கள், இளம் வயதினர், பெரும்பாலும் விரும்பி அணிந்திருப்பதைக் காணலாம்.
மரங்களை அழிப்பதால் அமர்வதற்கே இடமின்றி அலைந்து திரிகின்றன வண்ணத்துப் பூச்சிகள். ஆனால் தபால் முத்திரையிலும் தேசங்கள் கடந்து பறந்து திரிகிறது.
வண்ணத்துப்பூச்சிகளை கவர்ந்து இழுக்கக் கூடியதாக தோட்டங்கள் அமைத்தால் அவற்றைப் பாதுகாக்கலாம். அவற்றின் உணவுக்காக மலர்த் தோட்டங்களை அமைப்பதுடன் கவரும் வகையில் செடிகள் கொடிகள் அமைத்தால் அவற்றின் இனவிருத்திக்கும் வழிவகுக்கும் என்கிறார்கள். பூக்கள் இருக்கும் அனைத்துச் செடிகளிலும் தேனை அருந்தாது தனக்குப் பிடித்த செடியின் பூவை மட்டும் பருகும். அடர் சிவப்பு நிறப் பூக்கள் வண்ணத்துப்பூச்சிக்குப் பிடித்தமானவை. செம்பருத்திப் பூக்கள்,
சூரியகாந்தி, டெய்சி, பெடூனியா இனங்கள் சில வகை அல்லிப் பூக்கள், மஞ்சள் கூம்பு மலர்கள் பிடித்தமானவை எனச் சொல்கிறார்கள்.
வீட்டில் தோட்டம் அமைப்பதின் மூலம் அழியும் இனத்தைப் பாதுகாக்கலாம்.. உங்களைச் சுற்றியும் அழகிய வண்ணக் கூட்டத்தினர் சிறகடித்துப் பறப்பர். நீங்களும் இரு கைகளையும் விரித்து  அவையுடன் சேர்ந்து மகிழ்ச்சியாகப் பறக்கலாம்.

 நன்றி:மாதேவி

மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?