இந்தோனேசியா பல தீவுகளை உள்ளடக்கிய நாடு. அங்குள்ள தீவுகளில்
பலவித கலாசாரங்களுடன் கூடிய ஆதிவாசிகள், பூர்வக்குடி மக்கள் வாழ்கின்றனர்.
அவர்களில் சுமத்ரா தீவில் மென்டாவை என அழைக்கப்படும் அபூர்வ ஆதிவாசிகள் வாழ்கின்றனர். இவர்கள் தங்கள் உடல் முழுவதும் பச்சைக் குத்திக் கொள்கின்றனர். மேலும் நாடோடிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
அதில் விசேஷம் என்னவென்றால் நாடோடிகளாக வாழும் இவர்கள் தாங்கள்
குடியிருக்கும் இடங்களில் வேட்டையாடும் விலங்குகளின் மண்டை ஓடு மூலம் வீடு அமைத்து
வாழ்கின்றனர்.
இவர்கள் வெளிஉலக தொடர்பின்றி ஒதுங்கியே வாழ்க்கை நடத்துகின்றனர்.
செடி, கொடி உள்ளிட்ட அனைத்துக்கும் ஆத்மா இருப்பதாக நம்புகின்றனர். மெண்டாவை இன மக்கள்
சுமார் 64 ஆயிரம் பேர் உள்ளனர்.
இவர்கள் குறித்து மலேசியாவில் கெலடன் பகுதியை சேர்ந்த முகமது
சாலேபின் டோலாஹ் என்பவர் வீடியோவை வெளியிட்டார். புகைப்பட துறையில் ஆர்வமுடைய இவர்
இந்தோனேசியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்
சூழலை போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
No comments:
Post a Comment