சந்திக்கு வராத சங்கதி-- சோகக்கதை.


எம்.ஜி.ஆருக்கு மண்,பொன்,பெண் என்ற கோட்பாடெல்லாம் அவருக்கு கிடையாது. 1940-ல் தங்கமணி என்ற பெண்ணை எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு குழந்தையில்லை. மிகுந்த வறுமையில் இருந்ததால் தங்கமணியை அவரின் பெற்றோர்கள் சொந்த ஊருக்கே அழைத்துப் போய்விட்டனர். வறுமை காரணமாக தங்கமணி இறந்துவிட எம்.ஜி.ஆர் வந்து பார்ப்பதற்கு முன்னரே புதைத்தும் விட்டனராம்.

1942-ல் எம்.ஜி.ஆருக்கு இரண்டாம் திருமணம் சதானந்தவதியுடன் நடந்தது. இதயக் கோளாறு, குறைப்பிரசவம், காச நோய் போன்ற காரணங்களால் சதானந்தவதியும் இறந்து போனார்.

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணி போன்றவை உட்பட 25 பிரபலமான படங்களில் நடித்தவர் கணபதி பட். இவர் தான் ஜானகி அம்மையாரின் கணவன். இவருக்கும் ஜானகிக்கும் சுரேந்திரன் என்ற மகனும் இருந்திருக்கிறான். இருப்பினும் 1950- இல் வெளிவந்த ‘ மந்திரி குமாரி ‘ என்ற படத்தில் கணேஷ் பட்டும் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் படப் பிடிப்பின் போதுதான் எம்ஜியாருக்கும் ஜானகிக்கும் காதல் உண்டாகியிருக்கிறது. உடனே , கணபதி பட்டை விவாக ரத்து செய்து விட்டு எம்ஜியாருடன் வாழத் தொடங்கியிருக்கிறார் ஜானகி.

இரண்டு புதியதாக தெரிந்த செய்திகளை இங்கு சொல்லியிருக்கிறேன். இது போல பல தலைவர்கள் வாழ்க்கையில் வெளிச்சத்திற்கு வராத பக்கங்கள் அதிகம் இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது

0 comments:

Post a Comment