சிந்து சம வெளியில் இயற்கை
ஒன்றி இவன் இருந்தான்
குந்து வைத்து பல மாடி கட்டி
நன்று இவன் வாழ்ந்தான்
வந்து ஏறு குடிகள் ஆரியராம்
வென்று இவன் தாழ்ந்தான்
தந்து மயக்கி மனு தர்மத்தால்
அன்று இவன் சூத்திரனானான்
புராணங்கள் பொய் புரட்டுகள்
இன்று இவன் மூழ்கிவிட்டான்
காரணங்கள் சான்று உண்மைகள்
இன்று இவன் விலக்கிவிட்டான்
தோரணங்கள் ஆலாத்தி அபிசேகங்கள்
இன்று இவன் பழகிவிட்டான்
சரணங்கள் எம்தமிழ் தாயே
என்று இவனை காப்பற்றுவாய்?
👉--[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
ReplyDelete