இருமுகன் திரைப் படத்தில் திருநங்கை ஆகும் விக்ரம்

''10 எண்றதுக்குள்ள'' படத்தை அடுத்து தற்போது ''இருமுகன் ''என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். அரிமா நம்பி பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில் விக்ரம் ஜோடியாக, நயன்தாரா, நித்யா மேனன் இருவரும் நடித்து வருகின்றனர். இருமுகன் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு மலேஷியாவில் நடைப்பெற்று முடிந்தநிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. புலி படத்தின் தயாரிப்பளரான ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் இருமுகன் படத்தில் விக்ரம் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ரா உளவுப் பிரிவு ஏஜெண்ட்டாகவும், திருநங்கையாகவும் மாறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார் விக்ரம். தற்போது தாடி வளர்த்துள்ள விக்ரம், இந்த கெட்டப்பில்தான் ரா உளவுப் பிரிவு ஏஜெண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரா உளவுப் பிரிவு ஏஜெண்ட் கதாபாத்திரத்திற்கான காட்சிகளை மட்டுமே படமாக்கி வருகிறார்கள். அதில் பிரம்மாண்டமானதொரு சண்டைக்காட்சியும் அடக்கம்.

இந்த போர்ஷன்களை படமாக்கிய பிறகு, திருநங்கை கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கும் காட்சிகளை எடுக்க உள்ளனர். முதன்முறையாக திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால், திருநங்கைகளின் உடல் அசைவுகள், அவருடைய பேச்சு மொழி உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொண்டு வருகிறார் விக்ரம். கந்தசாமி படத்தில் பெண் வேடம் போட்ட விக்ரம் இருமுகன் படத்தில் திருநங்கையாகவும் கலக்குவார் என்பது நிச்சயம்.
                                                                                                             

No comments:

Post a Comment