ராமர் பாலம் என்று கூவும்
கோஷ்டிகளுக்கு முதலில் ஒரு கேள்வி. சீதையை மீட்டெடுப்பதற்காக, ராமேஸ்வரத்தில் இருந்து ராமரும், லட்சுமணரும், இன்னபிற வானர சேனைகளும், இலங்கைக்கு பயணப்படுவதற்காக அமைக்கப்பட்டதுதான், இந்த ராமர் பாலம் என்பது உங்கள் வாதம். ரொம்பச் சரி. முதலில், ராமரும், அவரது சகோதரர் லட்சுமணனும், வானர சேனைகளும் ராமேஸ்வரத்தை அடைந்தது எப்படி? அதை விளக்குவீர்களா?
ராமேஸ்வரம் பற்றி முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். ராமேஸ்வரம் என்பது
ஒரு தீவுப்பகுதி. சகலபுறங்களும் கடலால் சூழப்பட்ட தீவுப்பகுதி. மதுரையில் இருந்து ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்பவர்கள் கவனித்திருக்கலாம். மண்டபம் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டரைக் கடந்தால், கடல் வந்து விடும். அந்தக் கடலை கடக்க ரயில் பாலமும், அடுத்ததாக பஸ் பாலமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக்கரையில் இருந்து அந்தக்கரை வரை கடலின் நீளம் 2.7 கிலோ மீட்டர். கடலின் நடுப்பகுதி ஆழமானது. சிறிய ரக கப்பல்கள் இன்றும் கூட இந்தக் கடல்பகுதியை கடந்து சென்றும், வந்தும் கொண்டிருக்கின்றன என்பதில் இருந்து இது ஆழ்கடல் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.
இப்போது விஷயத்துக்கு வருவோம். ராமர் அண்ட் கோ இலங்கைக்கு போனது அப்புறம். முதலில் படை, பரிவாரங்களுடன் அவர் எப்படி ராமேஸ்வரம் போனார்? குறிப்பாக, அந்த 2.7 கிலோ மீட்டர் நீளமுடைய கடல் பகுதியை அவர் கடந்தது எப்படி? அவருடன் சென்றவை பெரும்பாலும் வானரசேனைகளே என்றாலும், ஏறக்குறைய 3 கிலோ மீட்டர் நீளமுடைய அந்த கடலை அத்தனை வானரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக தாவிக் குதித்து கடப்பதெல்லாம் கஷ்டம். கார்ட்டூன் படம் எடுத்தாலும் கூட இவ்வளவு பெரிய ‘லாங் ஜம்ப்’ சாத்தியமில்லாத விஷயம். வானரங்களே கடக்க கஷ்டபடுகின்றன என்றால், ராமர், லட்சுமணன் போன்ற ராஜகுமாரர்களுக்கு அது ரொம்பவும் கஷ்டம்.
ஆகவே, அந்த கடற்பரப்பை கடந்து அவர்கள் ராமேஸ்வரம் சென்றடைந்திருக்கவேண்டுமானால், நிச்சயமாக இப்போது பாம்பன் பாலம் இருக்கிற இடத்திலும் அவர்கள் ஒரு பாலம் அமைத்திருக்கவேண்டும். இல்லையா? பாலம் அமைந்திருந்தால் மட்டுமே கடலைக் கடந்து ராமேஸ்வரம் அடைந்திருக்க முடியும். ஆக, ராமர் முதன்முதலாக இந்தக் கடல் பகுதியில்தான் பாலத்தைக் கட்டியிருக்கவேண்டும். அப்படியாயின் அப்பாலம் இராமர் பாலம் என அழைக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படிக் கட்டித்தான் இராமேஸ்வரம் போனார்கள் என்று எக்குறிப்பும் எந்த இராமாயணமும் கூற வில்லையே!
அப்படியாயின் இராமாயணம் ?
No comments:
Post a Comment