ஒன்றும் புரியவில்லைடா தம்பி!



 நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பலர்தெரிந்தும் தெரியாமலும்ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான பல நடவடிக்கைகளில் ஈடுபடும்போது ஏன்தான் இவ்வாறு செய்கின்றார்கள் என்று காரணம் கண்டுபிக்க முனைந்தால் மூளையே கலங்கிப் போய்விடும்.
அப்படியான சம்பவங்களில் ஒரு சிலவற்றை இங்கு நோக்குவோம்.
பயங்கரவாதத் தாக்குதலாலேயோபுயல்வெள்ளம்நில நடுக்கம் போன்ற இயற்கை அனர்த்தங்களினாலோ ஆயிரக்கணக்கில் மனித உயிர்கள் (இறைவன் சித்தத்தினால்பறிக்கப்படும் போதுஇறந்தவர்களுக்காக இறைவனை நோக்கி வழிபடுவதும்பயங்கர வாதிகள் தாங்கள் இறக்கும்போது கடவுள்தான் பெரியவர் என்று ஓலமிடுவதும் என்ன பலனை நோக்கி என்று புரியவே இல்லை!

நோயுற்று இறந்துகொண்டிருக்கும் கடவுள் கான்கள்,  தூதர்கள்,  அவதாரங்கள்,  பிரதிநிதிகள் எல்லோரும் விரைவில் நலம் பெறவேண்டும் என்று பக்தர்கள் கடவுளை மன்றாடுவதும்பின்னர் அவர்கள் இறந்ததும்,திரும்பவும் இறந்தவர்களுக்காக கடவுளை வேண்டுவதும் என்ன விளையாட்டுகள் என்று புரியவே இல்லை!

இறைவனிடம் பிரார்த்தனை செய்பவர்கள்உலகில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் கேட்பதாகச் சொல்கின்றார்கள்இவர்கள்முன் கடவுள் தோன்றி ஒரு பத்து ரூபாவை என்னிடம் கொடுத்துவிடும்படி கேட்டுக்கொண்டார் என்றால்அதை என்னிடம் உண்மையில் கொண்டுவந்து ஒப்படைப்பார்களா என்று புரியவே இல்லை!

தமிழ் பேசும் நாட்டிலேதமிழ் பேசும் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ஆங்கிலேயப் பெயர்களும் வைத்துஆங்கிலத்திலேயே நாய்களுக்குக் கட்டளைகள் இடுகிறார்களேஏன்தான் என்று புரியவே இல்லை!

தமிழர் மட்டுமே வசிக்கும் வீட்டுக்குத் தமிழர் ஒருவரை அழைக்குபோது 'அவர் இருக்கிறாரா ' - 'அவருடன் கதைக்கலாமாஎன்பவற்றை ஆங்கிலத்தில் கேட்பதும்ஆங்கிலத்தில் செய்தி விட்டுச் செல்வதும் எந்தச் சீமைக்காரனுக்கு என்று புரியவே இல்லை!

இரண்டு தமிழர் சந்திக்கும்போது தமிழே தெரியாதவர்கள் போலமுழுமுழு தமிழ் ஊர்கள்பொருட்கள் எல்லாவற்றிற்கும் ஆங்கில வார்த்தைகளைவில்லங்கத்திற்கு தேடித் பிடித்து உபயோகித்துபோட்டிக்குப் போட்டி ஆங்கிலத்திலே சம்பாஷிப்பது ஏன்தான் என்று புரியவே இல்லை!

*நாம் வீதியில் செல்லும்போது வெள்ளைக்காரர்தெரியாதவர்களாய் இருந்தாலும் வணக்கம் சொல்லி நம்மை வாழ்த்தும்போதுஅதே வழியில் வரும் நம்மவர்களுக்கு மட்டும் எங்களை அவர்கள் கண்களுக்குப் புலப்படுவது இல்லையேஏன் என்று புரியவே இல்லை!

வீட்டிலேயே தண்ணீர்க் குவளைகளை -பாவித்தபின் எறியக்கூடியவைகளாக இருந்தாலும்அவை கிழிந்து போகும்வரை கழுவிக் கழுவிப் பாவிப்பவர்கள்ஆனால்கோவில் தண்ணீர்ப் பந்தலில் மோர் எடுத்துக் குடிக்கும்போதுமட்டும் ஒவ்வொன்றாக எடுத்துக் குடித்துஎறிந்து 5 - 6 குவளைகளை ஒருநேரத்திலேயே விரயமாக்குவதில் உள்ள மனப்பாங்கு என்னவென்று புரியவே இல்லை!

இரவிரவாய் வேலை செய்துபகலிலும் மாடாய் உழைத்து பணம் சேர்த்துஅதை அனுபவிக்க நேரமில்லாமல் நோயுற்று ஒடுங்கிப்போய் இருக்கும் மனிதரின் நோக்கம்தான் என்னவென்று புரியவே இல்லை!

பஸ் வண்டி அதன் முதல் தரிப்பிடத்திற்கு வரும்போது சைகை காட்டியும்அதன் கடைசி தரிப்பிடத்தை அணுகும்போது மணி அடித்தும் 'நிற்பாட்டிஉதவி செய்யும் பயணிகள் இல்லையெனில் நாம் எங்கெங்கு அலைந்திருப்போம் என்று புரியவே இல்லை!

*கோடிகோடியாய் உழைத்து பணம் சேர்க்கும் நடிகநடிகைகளின் சினிமாவில் வரும் பொய் வேஷங்களை நம்பிஅவர்கள்பால் வெறிபிடித்து அலைந்துபாலாபிஷேகமும் செய்யும் முட்டாள் கூட்டத்திற்கு என்னதான் தலைக்குள் இருக்கின்றது என்று புரியவே இல்லை!

சின்னத்திரையிலும்பெரிய திரையிலும் நடிப்பவர்கள் என்ன அனுபவசாலிகளாய் இருந்தாலும் சரி,முன்னுக்கு வருபவரைப் 'பார்க்கும்காட்சியை எடுக்கும்போதுசும்மா நேரிலே பார்க்காதுஎதோ முன்னுக்கு ஒரு மரம் நின்று மறைப்பது போலதலையை ஓர் ஓணான் சிலுப்புச் சிலுப்பிப் 'பார்ப்பதுஎப்போது நிற்குமோ,புரியவே இல்லை!

இதே நடிகர்கள் கார் வண்டியை ஓட்டி நடிக்கும்போதுஸ்டியரிங்கை அப்படியும்இப்படியும் சுழற்றுகிறார்களேஅது எப்படி நேராகப் போய்க்கொண்டு இருக்கிறது என்று புரியவே இல்லை!

அவர்கள்பள்ளத்தாக்கு ஒன்றில் கயிறு நுனியில் தூங்கிக்கொண்டு இருக்கும்போதுஅவர்கள் முழங்கைகள் எப்போதும் மடிந்தபடி இருப்பது எப்படி என்று புரியவே இல்லை!

ஒரு சில உதவிகளை பிறந்த நாட்டில் கஷ்டப் படுபவர்களுக்குச் செய்துவிட்டுஅங்கு அவர்களை பார்த்துத் தாங்கள்தான் அந்த கொடையாளிகள் என்று காட்டுவதற்குநாகரீக உடை அணிந்துகுடும்பமாக உல்லாச வாடகை வண்டியில்,-சாரதியுடன்ஆளுக்கு ஒரு ஆகப் பிந்திய ஐபோனுடன் சென்றுபடம் பிடித்து கொண்டு வந்து 'காட்டுவதில்என்ன சுகமென்று எனக்குப் புரியவே இல்லை!

-இறுதியாகஇப்படி இன்னும் பலவிதமான சம்பவங்கள் நம்மைச் சுற்றி நாளாந்தம் நடந்துகொண்டு இருக்கும்போதுவெறுமனே வாய்கண்காது எல்லாவற்றையும் மூடிக்கொண்டு 'சும்மாஇருக்காதுஏன்தான் தேவை இல்லாமல் இவற்றை எல்லாம் நானும் பெரிது படுத்தி எழுதிமன உளைச்சலுக்கு ஆளாகின்றேன் என்று எனக்குப் புரியவே இல்லை!

இது ஒவ்வொருவருக்கும் -என்னையும் சேர்த்துதான்-, ஒவ்வொரு 
வித்தியாசமான நோயாக இருக்கும் என்றுதான் எனக்குப் புரிகின்றது!!
                                                                                                                           ஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன்                                                       

No comments:

Post a Comment