காதல் உணர்வும்
ஒருமுறை தான் வரும் அன்பே
உன்னை கண்டதால்
அது உருவாகி-உன்னில்
உறைந்து போகுது
உன் அழகில்
இயல்பாக இருந்த - என் மனம்
பறி போனதால்
என் மனம்
என்னிடம் இல்லை
நீ யார் என்று அறிந்து
உன்னை தரிசிக்க
என் கண்ணும் ஏங்குது
உன் கண்ணில்
என்னை பார்க்க
தரிசனம் கொடுப்பியா
ஒரு முறை!
நீ வந்தால்- நான்
சந்தோஷ வானில்
வட்டமிடுவேன்
இல்லை எனின்
உன் ஏக்கத்தில்
நானும் சிறை ஆவேன்
No comments:
Post a Comment