கவலை..கவலையே


தெளிவான வானத்தை 
மறைக்கும் கரு மேகம் போல
 சந்தோஷ வாழ்வை 
மறைக்க செய்ய 
வந்து கொண்டு இருக்கும்
  கவலையே!

ஓடி கொண்டு இருக்கும் 
 மனித வாழ்க்கையில்  
பசை போல 
ஒட்டி கொள்ள நினைப்பதும்
 இந்த  கவலையே!

முயச்சி செய்து 
தோல்வி வரும் போது 
 அனுமதி இன்றி  
ஒட்டி கொள்ள வருவதும்  
கவலையே!


மனிதர்கள் ஒருவருக்கு 
ஒருவர் தன்னில் 
மோதி  விளைவிக்க 
முயல்வது
 இந்த கவலையே!
மாந்தர்கள் 
மறைக்க நினைத்தாலும் 
மறைக்கமால் இருப்பதும் 
 கவலையே! 

முரண்பாடுகள் உருவாகாமல் 
தத்துவங்கள் உருவாகுவதில்லை 

கவலைகளும் வராவிடின் 
 தெளிவு  உருவாகுவதில்லை!
 ஆக்கம்:அகிலன்,தமிழன் 

No comments:

Post a Comment