எள் எனும் அருமருந்து

 ஒரு சிறு செடியின் விதை இது. வெள்ளை எள், செவ்வெள், கரு எள் என மூவகைப் படும். வெள்ளை எள்ளில் எண்ணெய் அதிகம். கறுப்பு எள், அதன் எண்ணெய் அதிகம் உணவுப் பொருளாகவும், மருந்து பொருள்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. சுவையில் லேசான கசப்பு துவர்ப்புடன் கூடியது, ஜீரண நிலையில் இனிப்பாக மாறும் தன்மையுடன் கூடியது. உடலைக் கனக்கச் செய்யும். தோலுக்கும் பற்களுக்கும், தலைமுடிக்கும் உறுதி தரக்கூடியது.

எள்ளையும் கருஞ்சீரகத்தையும் கஷாயமாக்கிச் சாப்பிட உதிரச் சிக்கல் வலி
குறைகிறது. எள்ளுருண்டை, எள்ளும் உளுந்தும் சேர்ந்த கொழுக்கட்டை இவற்றைத் தொடர்ந்து கொடுக்க பூப்பு சீக்கிரம் ஏற்படுகிறது. எள்ளின் கஷாயத்தால் இடுப்பு அடி வயிறுகளில் ஒத்தடம் கொடுக்க, சூதகக் கட்டு வலி நீங்கும். பனைவெல்லம், எள், கருஞ்சீரகம் இம்மூன்றும் மாதவிடாய் காலத்திலேயே, வலி கடுப்பு உதிரச் சிக்கல் நீங்க மிகவும் பயன்படுகின்றது. எள் மூன்று வகைகளாக இருந்தாலும் கறுப்பு எள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுவதில் சிறந்தது. வெள்ளை எள் மத்தியமானது. எள் விரைவில் செரிப்பதில்லை. அதனால் அதை அளவுடன் பயன்படுத்துவதே சிறந்தது. கப, பித்த தோஷங்களை அதன் அதிக அளவிலான உபயோகம் செய்வதால் கப, பித்த நோயாளிகள் அதை அதிகம் பயன்படுத்தக் கூடாது.

1 comment:


  1. ஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,
    சென்னை - மதுரை - திருச்சி - பாண்டிச்சேரி - கரூர்

    சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் ஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,

    சர்க்கரை, சொரியாசிஸ், மூட்டு வலி, பக்கவாதம், ஆஸ்துமா, உடல் பலவீனம்,
    ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, பால்வினைநோய்கள், விறைப்பின்மை
    விந்து முந்துதல், உயிரணுக்கள் குறைபாடு, பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய்கோளாறுகள்
    நீர்க்கட்டி,சினைப்பைக்கட்டி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவ ஆலோசனை பெறலாம்...

    எங்களது சித்த மருந்துகளை வாங்க http://www.drarunchinniah.in/

    தொடர்புக்கு:
    ஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,
    சென்னை - மதுரை - திருச்சி - பாண்டிச்சேரி - கரூர்

    +91.8608400035, +91.8608400041
    Aadhavan Siddha Groups +91.8754473544


    ReplyDelete