ஒளிர்வு:62- மார்கழி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ;2015

 தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
வாசகர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உலகில் பெரும் யுத்த அழிவுகளும் ,எதிர்பாரா இயற்கை சீற்றங்களும் தாங்கொணா உயிர் இழப்புக்களும் கொண்டு கடந்து முடிந்த 2015, யாவரும் மறக்கமுடியாத அனுபவங்களாகும்.இனிவரும் 2016 இல் அனைவரும் நலம் கொண்டு அமைதியுடன் இனிதே வாழ,வளர  வேண்டி வாழ்த்துகிறோம்.
மனிதனால் கண்டறியப்படும் விஞ்ஞானத்தின் விந்தைகள் இயற்கைச் சமநிலைச் சீர்கேடுகளுக்கு காரணமாக  இருந்த   போதிலும்,அதற்குரிய மாற்று  திட்டங்கள் 100% அமுல் படுத்தப் படாமையும்  மேற்படி இயற்கை அனர்த்தங்களுக்கு காரணமாக இருக்கலாம். வளர்ச்சி அடையாத நாடுகள் அத்திட்டங்களை முறையாக  அமுல் படுத்த இயலாத நிலையினையும்  வளர்ந்த நாடுகள்  புரிந்துகொல்லாமலில்லை. எல்லாமே  அரசியல் நோக்கோடு அணைக்கப்படுவதே உண்மை என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை.
                                                      

No comments:

Post a Comment