ஏன் தெரியுமா இந்தக் கொலை வெறி? (பாகம் 2)


                                  (தீபம் மார்ச் 2015 இதழில் வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி)

முஸ்லிம் மக்களில் சில தீவிரவாதிகள்தத்தம் நாட்டு எல்லைகளையும் தாண்டி,உலகளாவிய ரீதியில் ஆயுதமெடுத்துப் 'புனிதப் போர்என்று கூறிக்கொண்டுபல பயங்கர வாத நடவடிக்கைகைகளினால்  ஈவிரக்கமற்ற அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டிருகிறார்களேஇது ஏன் தெரியுமாஇப்படிச் செய்யும்படி கடவுள்தான் ஆணையிட்டார் என்று எழுதிவிட்டுஅதை  ஒருவிதமான மறுப்புமின்றி நம்புவது மட்டுமல்லஇந்த ஐரோப்பிய சமூகமும்இதர கிறீஸ்தவ மக்களும் இஸ்லாமைத் தங்கள் சமயமாக ஏற்றுக்கொள்ள ஏன்தான் மறுக்கின்றார்கள் என்ற ஆத்திரம்  வெறியாக மாறி வெடிப்பதும் இன்னுமொரு காரணமாகும்.

இவ்வாறு போரில் மடியும் முஸ்லிம்களுக்கு அதிஉயர்வான சொர்க்கம் காத்திருக்கின்றது என்று எழுதிவிட்டுஅதை அப்படியே நம்பியும் விடுகின்றார்கள். அத்தோடுநபி இதை மேலும் விளக்குகையில் பின்கண்டவாறு  சொல்லுகிறார்:

"அந்தச் சொர்க்கத்தில் பின்வரும் (ஆகக்குறைந்த) வசதிகளாவது இருக்கும். புனிதப்போருக்காக இறக்கும் ஒவ்வொரு முஸ்லிம் மனிதனுக்கும் அங்கு70 சொர்க்க நகர்களில்நவரத்தினக் கற்கள் பதித்த 70 ஆடம்பர மாளிகைகளில் 70 கண்கவர் கட்டில்களில் உள்ள வண்ணமிகு 70 சொகுசுக் மெத்தைகளில்கன்னி கழியாத பேரழகுகருவிழி இளம்பெண்கள் 72 பேரும்பருவமடையாத கட்டிளம் காளைகளான பையன்கள் 24 பேரும்80,000 அடிமைகளும்பின்விளைவுகள் எதுவும் தராத உயர்தர வைன் வகைகளும்தேன்போல் இனிக்கும் பழ வகைகளும்சளைக்காத ஆண்மையும்ஓயாத வீரியமும் நித்தமும் கொடுத்துஇராஜ போக வாழ்வு வழங்கப்படும்". (புரியாத விடயம் என்னவென்றால்போரில் மடியும் பெண்களுக்கும் இப்படி 72 ஆண் அழகன்கள்24 சிறுமிகள் என்று ஏதாவது வசதிகள் உள்ளனவா என்பதே!)

இந்தப்  கதைகளை நம்பித்தான்இல்லாத ஒன்றைப் பிடிக்கத்தான்இறந்தபின் என்னவோஏதோதெரியாத ஒன்று போய்ச் சொர்க்கத்தில் இன்புற்று இருக்கப் போகும் அதுதாங்கள்தான் என்று கனவு  கண்டுதான் இங்குள்ள வாழ்வை நரகமாக்கிக்கொண்டு அலைகின்றார்கள். அவர்கள்எவ்வளவுக்கு எவ்வளவு தம் சமயத்தைப் பரப்புகின்றார்களோ அவவளவுக்கு அவ்வளவு சொர்க்க வசதிகள் அதிகரிக்கப்படும் என்று  நம்பிதீவிரமாகச் செயல் படுகின்றார்கள்.
2000 ஆண்டுகளுக்கு முன்புஎங்கோ ஒரு மத்திய கிழக்கு மூலையில் இருந்த ஜெருசலேம் என்ற ஊரில் பிறந்த ஒருவர் சொன்னதை இந்த ஐரோப்பியர்கள் நம்பித் தொலைத்தார்களே! ஏன் ஓர் 600 ஆண்டுகளுக்குமுன்னர் இதே இடத்தில் இருந்து வந்த இன்னொருவர் சொன்னதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள்?

இவ்வளவுக்கும்இனத்தால்மொழியால்நிறத்தால்கலாச்சாரத்தால் முற்றிலும் வேறுபட்ட ஒருவர் சொன்னதை இந்த ஐரோப்பியர்கள் எல்லாம்  தேவ வாக்காக எடுத்து முற்றும் முழுதுமாய் கிறீஸ்தவர்களாக மாறினார்களே! ஏன் இப்பொழுது மட்டும் இயலாதாம்?

அப்போதுஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் வெவ்வேறு கலாச்சாரங்களுக்கு ஒப்ப பலவிதமான சமயங்களும்நம்பிக்கைகளும் மிகவும் வேரூண்டி இருந்தன. கிரேக்கஉரோமஜெர்மானியஸ்கண்டிநேவிய,  செல்டிக்கஸ்லாவிக்கரூசிய பிராந்தியங்களில் மிகவும் பழைமை வாய்ந்தபலம் கொண்ட சமய நம்பிக்கைகள் மலிந்து இருந்தன. இவற்றில் அநேகமானவை காற்றுமழைசூரியன்சந்திரன் முதலிய இயற்கைகளை கடவுள்களாக்கி வணங்கினார்கள்.

இப்படிப் பரவலாக வேரூண்டித் தழைத்திருந்த சகல சமயங்களையும் தகர்த்தித் தவிடுபொடியாக்கிகிறீஸ்தவ சமயம் எல்லா ஐரோப்பிய சமூகத்தினரையும் அடியோடு தன்பால் முற்றாக இழுத்துக்கொண்டது. அதுமட்டும் அல்லகிறீஸ்தவ சமய நம்பிக்கையில் ஈர்க்கப்பட்டஅந்நாடுகள்அக்கால வல்லரசுகளாய் இருந்த காரணத்தினால்உலகின் எட்டுத் திக்கிலும் சென்று பிடித்த நாடுகளில் எல்லாம் இந்தச் சமயத்தைப் பரப்பியும் விட்டார்கள்.

இன்றைய காலச் சூழ்நிலையில் அந்தக் காலங்களைப் போல் சமயத்தைப் பரப்புவது என்பது ஓர் இயலாத காரியம். அதுவும்கடின உழைப்பினாலும்சீரிய கல்வி முறைகளினாலும் வளர்ச்சியடைந்துநாகரீகத்தில் மேம்பாடடைந்து,  வாழ்க்கைத் தரத்தில்  உயர்வடைந்திருக்கும் ஐரோபிய நாடுகளை 'சொர்க்கத்துக்குப் போக மதம் மாறுங்கோஎன்று கேட்டால் எள்ளித்தான்  நகைப்பார்கள்.

இந்த தீவிர மதமாற்ற முயற்சி எடுபடாமைக்குப் பல காரணங்கள் உள்ளன.

வாழ்க்கைத்தரம் கூடிய நாடுகளில் மக்கள் பெருபாலும்,
* கடவுளிலும் பார்க்க உழைப்பை கூடுதலாக.நம்புகின்றார்கள்..
* சொர்க்கம் என்பது இங்கு நாமே நமக்கு உண்டாக்குவதுதான் என்கிறார்கள்.
* கோவில் செல்லும் பழக்கத்தைப் குறைத்து விட்டார்கள்.
* மனித வாழ்வுக்கு கடவுள் தேவை இல்லை என்று கருதுகின்றார்கள்.
* கடவுள்கடவுள் என்று தினமும் பல தடவையும் வணங்குபவர்கள் நாடுகளில் கொடூரமானகேவலமான வாழ்க்கைதனை நேரில் பார்க்கிறார்கள்.
*இஸ்லாமில் ஒரு காலத்திற்கும் பொருந்தாத பெருவாரியான பிற்போக்குவாத கட்டுப்பாடுகள் நிறைந்திருப்பதைப்  பார்க்கின்றார்கள்.

அந்தக் காலத்தில் உலகெங்கும் திரிந்து மதம் பரப்பியவர்கள்அந்த மதத்தை இப்போது முக்கியமான ஒன்றாகப் போற்றாமல்அதை ஒரு பக்கத்தில் ஒதுக்கி வைத்து விட்டார்கள். அவர்களால் மாற்றப்பட்டவறுமைப்பட்டமூன்றாம் உலக மக்கள்தான் இப்பொழுது கடுமையான அக்கறையுடன் தவறாது தேவாலயம் செல்கிறார்கள்.. (வெள்ளைக்காரன் சமயம் அல்லவா!)

ஆதலால்இஸ்லாமியர்களின் தீவிர மதமாற்றப் போர் இந்தக் காலத்தில் மேலை நாடுகளில் செல்லுபடி ஆகப் போவது இல்லை! வேண்டுமானால்வெளி உலகம் அறியாத சில இருண்ட ஆபிரிக்க நாடுகளின் மூலைகளில் இயலக் கூடும்!

இஸ்லாலிய மதமே உயர்ந்ததுஅது காட்டும் வாழ்க்கை முறையே சிறந்ததுஅது மட்டுமே உலகெல்லாம் பரவி இருக்கவேண்டும் என்று தீவிரமாகச் செயல்படும் இவர்கள்உயர்தரமான வாழ்வை வேண்டிதங்கள் இஸ்லாமிய நாட்டை விட்டு இன்னொரு இஸ்லாமிய நாட்டுக்கு விரும்பி ஓடாதுஏன்தான் கிறீஸ்தவ நாடுகளுக்குப் கும்பல்களாகப் படை எடுத்துச்  செல்கிறார்களோ தெரியாது! எங்காவது கிறீஸ்தவ நாட்டு மக்கள் ஓர் இஸ்லாமிய நாட்டை நோக்கி நல்வாழ்வு தேடி இடம்பெயர்ந்தமை பற்றிக் கேள்வியே பட்டதில்லையே!

இல்லாத ஒன்று கிடைக்கும் என்று பேராசையில் மூழ்கியிருக்கும் இக்கூட்டம்,இருட்டில் இருந்து வெளிவருவது என்பது இலகுவில் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது. கடவுள் சொன்னார் என்று கூறிக்கொண்டுதொடர்ந்து துர் போதனைகளை மக்களிடம் விதைத்துஅவர்களை தொடர்ந்து மூளைச்சலவை செய்துகொண்டே இருக்கின்றார்கள்.

அவர்களும் சுயமாகச் சிந்திக்கவும் மாட்டார்களாம்!
சிந்தித்தால், (இறந்தபின்) நரக நெருப்பினுள் தூக்கி வீசப்படுவார்கள் என்ற பயமுமாம்.

நான் இறந்தபின்அந்த என்னை விட்டுப் போகும் அந்த அதுவோ,எதுவோ அல்லது ஒன்றுமே இல்லாத ஒன்றோஅதற்கு என்ன நடந்தாலும் எனக்கென்ன வந்தது?எனக்கென்ன கவலை என்று நானே மகிழ்ச்சியோடு இருக்கும்போதுஎனக்காகஅந்த இல்லாத ஒன்றுக்காக  மதம் மாற்றப் போர் புரியும் உவர்களுக்கு ஏன் இந்தத் தேவையற்ற கொலைகளும்அழிப்புகளும்?

ஓர் அர்த்தமும் இல்லை! ஒன்றும் புரியவும் இல்லை!
       ..............................................................ஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன்

No comments:

Post a Comment