ஓட்ஸ் (Oats-காடைக்கண்ணி) உணவு அளிக்கும் பெரும் பயன்கள்


ஓட்ஸ் சாப்பிடுவதால் உடை எடை குறையுமா?

காலை உணவு வேளையில் ஓட்ஸ் சாப்பிடுவது மிகவும் பிரபலமாகி வருகிறது. ஓட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
ஆமாம். இது நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை. உங்கள் உணவில் தினசரி 100 கிராம் ஓட்ஸ் சேர்த்துக் கொண்டால் 2 மாதத்தில் ஒன்றரை
 கிலோ வரை எடை குறைய வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியில் நிரூபணம் ஆகியுள்ளது.
ஓட்ஸ் சமைக்கும் பொழுது அதனுடன் அதிக கொழுப்புத் தன்மை உடைய எதையும் சேர்க்காதீர்கள். வெறும் நீரில் அரை உப்பு சேர்த்து
 வேகவைத்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

அதிக ஆற்றல் கொண்டது : கரையக் கூடிய நார்ச்சத்து இருப்பதனால் ஓட்ஸட ஜீரணமாக நேரம் ஆகிறது.  எனவே இதில் ஆற்றலானது
 நீண்டநேரம் மெதுவாக வெளியாவதால் உடல் அளவிலும் மூளை அளவிலும் நீண்ட நேரம் ஆற்றல் அளிக்கக்கூடியது.

இதய நோயிலிருந்து பாதிப்பு குறைவு : இதில் கரையக்கூடிய நார்ச்த்து இருப்பதால் இதில் குறைந்த அளவெ எல்.டி.எல் (குறைந்த
அடர்த்தி லிப்போ புரதம்) தீங்கு விளைவிக்கக் கூடிய கொழுப்பு உள்ளது.  குறையாத எச்.டி.எல் அதிக அடர்த்தி கொண்ட லிப்போ
 புரதம் (நன்மை செய்யும் கொழுப்பு) உள்ளதால் இது இதய நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.  ஓட்சுடன் அதிக அளவு
பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்தளவு கொழுப்பு சத்து கொண்ட பால் பொருட்கள் உட்கொள்வதால் இரத்த அழுத்த பாதிப்பில்
இருந்து விலகலாம்.

இன்சுலின் அளவை கட்டுப்படுத்துகிறது : கரையக்கூடிய நார்சத்து
இருப்பதால் உணவு உண்டவுடன் உயரக்கூடிய குளுக்கோஸ் அளவை
 கட்டுப்படுத்துகிறது.  இதனால் சர்க்கரை வியாதி சமாளிக்க ஏற்றதாகும்.

ஓரே மாதிரி உருவ அமைப்பு () உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க : ஓட்ஸில்  கரைக்கூடிய நார்ச்த்து இருப்பதால் இது நீரை உறிஞ்சு
 அளவில் பெரிதாகின்றன. எனவே இதனை உட்கொண்டால் வயிறு நிறைந்து காணப்படுவதுடன் நீண்ட நேரம் வராமல் சமாளிக்கப்படுகிறது.
ஓட்ஸ் கஞ்சி தயாரிக்க வெந்நீர் அல்லது குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட பாலுடன் சேர்த்து சமைத்து அதனுடன் பழங்கள், கொட்டை
 வகைகள் மற்றும் வாசனை பொருட்கள் சேர்த்து உட்கொள்ளலாம். ஓட்ஸ் மற்ற பொருட்களுடன் சேர்த்தும் சப்பாத்தி, புரோட்டா அல்லது
தோசை, இட்லி அல்லது ஊத்தப்பம் மாவுடன் சேர்த்தும் சமைக்கலாம்.
ஓட்ஸ்  கரையக்கூடிய நார்சத்து
ஓட்ஸ் ஒட்டியுள்ள மேலுறை (தவிடு) இது சாப்பிடும்போது (குறைந்த அளவு) குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புச்சத்து கொண்ட கொழுப்பு
 இதில் உள்ளதால் இதய நோய் குறைகக்க கூடியது.  முழுமையான ஓட்ஸில் 0.75 கிராம் கரையக் கூடிய  நார்ச்சத்து ஒரு முறை உண்ணும்போது
 நமக்கு கிடைக்கிறது.  பி-டி குளுக்கோன் என்னும் பாலி சாக்கரைடானது முழு ஓட்ஸில் கரையக்கூடிய நார்சத்து கொண்டதாகும்.
பி-டி குளுக்கோன் பொதுவாக பி-குளுக்கோன்ஸ் கரையாத பாலி சர்க்கரையாக தானியத்திலும், பார்லி, ஈஸ்ட், பாக்டீரியா, ஆல்கா மற்றும்
காளனிச் உள்ளது.  ஓட்ஸ், பார்லி மற்ற தானியங்களில் இது பொதுவாக என்டோஸ்பெர்ம் ஒட்டியுள்ள செல் சுவரில் உள்ளது.


0 comments:

Post a Comment