அஜித் குமார், (பி. MAY 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல வெற்றிப் படங்களில் அஜித்குமார் நடித்துள்ளார். அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்"
என்றும் "தல" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியப்படுகின்றார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012ஆவது ஆண்டு பட்டியலில் அஜித் குமாருக்கு 61ஆவது இடம் கிடைத்தது. 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார். மேலும் 2013-வது ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகராக வலம் வருகிறார்.
வாழ்க்கைச் சுருக்கம்
அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு சிந்தி தாயிற்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.[6] இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேச கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்நிலைக் கல்வியைப் பூர்த்தி செய்யாமலே கல்வியை இடைநிறுத்தினார்.
திரை வாழ்க்கை
தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992 இல் பிரேம புஸ்தகம்
என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. இதன் பின்னரே அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது.
அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் ஆசை திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரண் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
சர்ச்சைகள்

உதவி
பல நல்ல காரியங்களுக்கு உதவிகள் செய்துள்ள இவர் 2014ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்பவர்கள் 12 பேருக்கும் வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார்.
இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்
2013 ஆவது ஆண்டில் சென்னையில் தனது BMW S1000RR ரக துள்ளுந்தில் அமர்ந்திருக்கும் அஜித் குமார் பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார்.
விருதுகள்

1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதையும், சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார்.
2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார்.
2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
தென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.
2011 ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் அவார்ட்ஸின் சிறந்த வில்லன் மற்றும் விருப்பமான நாயகன் என இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழக அரசு திரைப்பட விருதுகள்-வென்றவை
தமிழக அரசு சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருது - பூவெல்லாம் உன் வாசம் (2001)
தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட விருது - வரலாறு (2006)
பிலிம்பேர் விருதுகள்-வென்றவை
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வாலி (1999)
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வில்லன் (2002)
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - வரலாறு (2006)
பரிந்துரைக்கப்பட்டது
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - பில்லா (2007)
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - மங்காத்தா (2011)
விஜய் விருதுகள்-வென்றவை
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - வரலாறு (2006)
விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்) - மங்காத்தா (2011)
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - மங்காத்தா (2011)
பரிந்துரைக்கப்பட்டது
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - பில்லா (2007)
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - ஏகன் (2008)
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - அசல் (2010)
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - ஆரம்பம் (2013)
பிற விருதுகள்-வென்றவை
சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - வாலி (1999)
சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - சிட்டிசன் (2001)
சிறந்த தமிழ் நடிகருக்கான சென்னை டைம்ஸ் விருது - மங்காத்தா (2011)
நடித்துள்ள திரைப்படங்கள்
0 comments:
Post a Comment