தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
அதிகம் பேசுபவர்களைவிட அதிகம் செவிமடுப்பவர்களை உலகம் விரும்புகின்றது. சிலர் தங்களுடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் மிகச் சிறப்பான முறையில் மற்றவர்களுக்குச் சொல்வதற்கு நாவன்மையும் சொல்வளமும் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். எனினும் அவர்களை மற்றவர்களின் கருத்துக்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செவிமடுக்க முடியாதவர்களாக இருக்கும் பட்சத்தில் நாளடைவில் அவர்களை மக்கள்/உறவுகள் புறக்கணிக்க தலைப்படுவார்கள்.
ஒரு குழந்தை பிறக்கு முன்னரே செவிமடுத்தல் ஆரம்பமாகிவிடுகின்றது என்பது அதிசயத்தக்க உண்மை.
ஒரு குழந்தை பிறக்கு முன்னரே செவிமடுத்தல் ஆரம்பமாகிவிடுகின்றது என்பது அதிசயத்தக்க உண்மை.
கேட்டல் செவிமடுத்தல் இரண்டும் ஒரு அர்த்தத்தைத் தருவதாகத் தோன்றினாலும் இவ்விரு பதங்களுக்கிடையே இமாலய வேறுபாடு உண்டு. கேட்டல் எனும் போது நாம் விரும்பியோ வெறுத்தோ எம்மை அறியாமல் எம் காதுகளை வந்தடையும் ஒலிகளை கிரகிப்பதைக் குறிக்கும். செவிமடுத்தல் எனும்போது உன்னிப்பாகவும் அவதானத்துடனும் ஒலிகளுக்கு எம் செவிகளை வழங்குவதைக் நல்ல செவிமடுப்பவர்களாக இருப்பது நல்ல வாழ்க்கைத் துணைகளாக இருப்பதற்கும் சிறந்தபெற்றோர்களாக,பிள்ளைகளாக இருப்பதற்கு மட்டுமல்லாது வாழ்கையில் பல துறைகளிலும் தனித்துவமான முத்திரை பதிக்க நிச்சயமாகத் துணைபுரியும்.
எனவே அடுத்தவர் குரலினை செவிமடுக்க இன்றே ஆரம்பியுங்கள். நல்லுறவு விருத்தியடையும்.
No comments:
Post a Comment