புலம்பெயர் புலம்பல் [ஆக்கம்:அகிலன் தமிழன்]


தாய் மண்ணை  நினனத்து
மனம் உருகி
 கண்ணீர் வடிக்கிறோம் 
காலம் செய்த கோலமோ 

நாடு இழந்து விதி செய்த விளையாட்டோ 
உரிமை இழந்து
 உணர்வு இழந்து 
சடப்பொருளாக  
உலகம் எங்கும் 
அலைகிறோம் ஏதிலிகளாக 
கரையைஅடைய 
முயலும் அலைபோல
 எங்கள் மனமும் 
உனை நோக்கி 
அலை பாய்கிறது 

தாய் மண்ணே உயிர் தந்து வளர்த்த 
நீ தந்த சுகம் 
இங்கு இல்லையே!  
உறவுகளின் 
பந்தம், பாசம் மறந்தோம் 
இயந்தி மனிதன் ஆனோம் 
வெளிநாட்டு வாழ்கையில்....

1 comment:

  1. ஊரில் உள்ளவர்களுக்குப் புரியுமா எங்கள் புலம்பல்!

    ReplyDelete