நீடிக்கும் ராஜீவ்காந்தி மர்மம்

முன்னாள் இந்திய முதன்மை அமைச்சர், நவீன இந்தியாவின் சிற்பி. ஆசியாவின் வளர்ந்து வரும் நாடுகளிலேயே உலககுக்கே ஒரு உதாரணமாக தன்னை காட்டி வளர்ந்து வந்த நாடு. தன்னிறைவு பெற்ற வளர்ச்சி. இளைய சமுதாயம் நாட்டின் முன்னேற்றத்தை மனதில் வைத்து தொழில்களை நாட்டின் பல்வேறு திசைகளில் பெருக்கி தானும் முன்னேறி நாட்டையும் முன்னேற்றிய காலம் இவரது கால இந்தியா.


ஐந்து வயது சிறுமிக்கு இவர் அனுப்பிய பதில் கடிதத்தை பற்றி எங்களது வகுப்புகளில் ஆசிரியர்கள் புகழ்ந்த விதம் இன்னமும் மனதில் பசுமையாகவே இருக்கிறது. வி பி சிங்கும், கலைஞரும் இவரையும் இவரது பஞ்சாயத்து இராசியத்தை பற்றி அடித்த கிண்டல்களும் கேலிகளும் இன்னமும் மனதை விட்டு மறையவே இல்லை.

கிராமத்தில் தான் சந்தித்த உழவனிடம் பச்சை மிளகாய் விலை அதிகமா, சிகப்பு மிளகாய் விலை அதிமா என்று கேட்டு தெரிந்து கொண்டு, பிறகு சிகப்பு மிளகாயே பயிரிட வேண்டியது தானே ஏன் பச்சை மிளகாய் பயிரிடுகிறீர்கள் என்று கேட்டதை அப்பாவி தனமாக பார்த்த உழவனும், அதையே குறும்பாக அதை ரொட்டி இல்லை என்றால் கேக்கு சாப்பிடுங்கள் என்று சொன்ன பிரஞ்சு அரசி சொன்ன வாசகங்களுக்கு ஈடு என்று எழுதிய தினமணியின் தலையங்கமும் இன்னமும் மனதை விட்டு அகலவில்லை.

தனக்கு இருக்கும் தனி பெருன்பான்மையை கொண்டே ஆட்சி அமைக்கும் உரிமை கோரும் வாய்ப்பு இருந்தும், பரவாயில்லை வி பி சிங் ஆட்சி அமைக்கட்டும் என்று இருந்ததுன் இன்னமும் நினைவில் இருக்கிறது.
மேலே சொன்னவைகள் எல்லாம் இராச்சீவை பற்றி தெரிந்த பொதுவான செய்திகளே. அவரது தனிப்பட்ட செய்தியாக தெரிய வந்தது எல்லாம், விமானம் தரையிரங்கும் போது தாறுமாறாக ஆட்டம் கண்டால், விமானி வாங்கிக்கட்டிக்கொள்வது. போப்போர்சு பீரங்கி வாங்கியதில் நடந்த ஊழல் (இது தொல்கி பதிவு பத்திர ஊழலில் நடந்த பணத்தோடு ஒப்பிடும் போது, ஒரு சிறிய தொகை), இன்னமும் சில செயல்கள் தாம் வருமே தவிற சுப்பிரமணி சாமியின் மேல் சுமத்தப்படும் எண்ணிக்கை இல்லா குற்றங்கள் போல் வராது. இது அனைவரும் ஒத்துக்கொள்ள கூடிய ஒரு செய்தி.
இந்த மனிதன் இந்தியாவின் மா மனிதனாகத்தான் உலகம் பார்த்தது, இன்னமும் அப்படி தான் நினைவு கூறுகிறது. அந்த மா மனிதனின் வாழ்க்கை முடிவுக்கு வந்த நிகழ்வை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விடுவதற்கு இல்லை தான்.

சென்னை விமான நிலையத்தில் என்று மாறா அந்த புன்னகையுடன் கொடுத்த நேர்காணலில் இந்த தேர்தலில் வெல்லப்போவது கட்டாயம் நாங்கள் தான், இது யாராலும் மாற்றமுடியாத ஒன்று என்றும். தமிழகத்துக்கு வருவது எப்போதும் தனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு செயல் என்றும் புகழ்ந்து திருபெரும்புதூருக்கு சென்றார்.

அங்கே போகும் போது தேர்தல் செலவுக்கு என்று ஒர் 200 கோடி ரூபாய்க்கள் வரை பணமாக உடன் எடுத்து சென்றார் என்று பரவலாக பேசப்படுகிறது.
பல்லாயிரம் தொண்டர்களுக்கு முன் சில நூறு தமிழக பேராய தலைவர்களுடன் உரையாற்றும் விதமாக அங்கே சென்ற இராச்சீவின் அகோர மறைவு எந்த ஒரு தனி மனிதனாலும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத ஒன்றாத அங்கே நிகழ்ந்தேறியது.

அருகே இருந்த மக்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலரது உடலங்கள் எங்கும் சிதறி போர்த்தாக்குதலுக்கு ஆளான ஒரு பூமியாக கலவரப்பட்டு நின்றது அன்று. இந்தியர்கள் மட்டும் அல்லாது, உலகத்தோர் அனைவரது மனதையும் வாட்டி எடுத்த நிகழ்வு அது.

தனது தாய்யின் படுகொலையின் ஈரம் கூட காயாத நிலையில், அவரை அகோரமாக கொன்ற சீக்கியனின் மா நிலத்தில் இந்திராவின் மறைவை தீபாவளியாக கொண்டாக்கொண்டு இருகிறார்கள் என்ற செய்திகள் எல்லாம் காதில் விழுந்து கொண்டிருக்கும் வேளையில், நாட்டின் தேவையை கருதி. நாட்டின் நலனுக்காக அந்த இக்கட்டான கட்டத்தில் கட்சியின் தலைவர் பதவியையும், முதன்மை அமைச்சர் பதவினையும் ஏற்றுக்கொண்டவருக்கு இப்படி ஒரு அகோர முடிவு. அந்த குடும்பத்தின் அடுத்த பலி. இவ்வளவு சின்ன வயதில், தன்னை பற்றியும் தனது நாட்டை பற்றியும் பல கனவுகளை சுமந்து வந்த அந்த மா மனிதன் செயலலிதா கலைஞரை தீபாவளிக்கு மக்கள் என்ன செய்வார்கள் என்று சொன்னதை போல அடையாளம் தெரியாமல் உருகுலைக்கப்பட்டார்.

இந்த மறக்க முடியா மரணம் நிகழ்ந்து நீண்ட நாளுக்கு பிறகும் அவர் ஏன் கொல்லப்பட்டார் என்று இது வரையில் யாருக்கும் தெரியவில்லை. எதற்கு யாரால் கொல்லப்பட்டார்கள் என்றும் யாருக்கும் தெரியவில்லை.
கொலைக்கு துணை புரிந்தார்கள் என்ற சிலரையே நீதி மன்றத்திற்கு முன் நிறுத்தி தண்டனையையும் கொடுத்துள்ளார்கள். ஆனால் உண்மையிலேயே யார் இந்த சதியை தீட்டி செயலாக்கினார்கள் என்று இது வரையில் ஒரு வரும் தெரிவிக்கவே இல்லை.

சில மாதங்களுக்கு முன்னாள் குமுதம் இணையதள இதழ் டேட்டு லைன்க்கு அளித்த காணொலியில் திருச்சி சிவா சொன்ன விபரங்களை பார்க்கும் போது மனது பதறாமல் இல்லை. இராச்சீவ் காந்தியில் கொலை நிகழிருந்த மூன்று இரண்டு நாட்களில் சுப்பிரமணிசாமி தன்னிடம் சொன்ன விபரங்களாக திருச்சி சிவா குறிப்பிடும் "இந்த தேர்தல் நடந்தால் தானே பேராயக்கட்சி வெல்லும்", தொலைபேசியில் இராச்சீவ் காந்தியின் மரணம் நிகழ்ந்த சிலமணி துளிகளில் சிவா தெரிவிக்க சுப்பிரமணி சாமியை தொடர்பு கொள்ளுகையில் என்ன என்று கூட கேட்க்காமல் "அந்த மரணம் நிகழ்ந்தது எனக்கு தெரியும்" என்று சுப்பிரமணி சாமி தெரிவிக்க, காவலர்கள் கூட இன்னமும் உறுதி படுத்தாத ஒரு தகவலை இவருக்கு தெரியும் என்று சொன்னாரே என்று எழுப்பும் கேள்விகளை பார்க்கும் போது..........

இராச்சீவின் தொண்டனாக கூட வேண்டாம் சாதாரண மனிதனின் இதயமே இப்படி துடிக்கும் போது, கட்சியின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எப்படி இருந்திருக்க வேண்டும்.

மரகதம் சந்திரசேகர் என்ற ஒரு பேராய கட்சியின் மூத்த உறுப்பினர். இவர் தான் சுபாவையும், சிவராசனையும் அங்கே அழைத்துவந்தார் என்றது ஊர் அறிந்த இரகசியம். இந்த படு கொலைக்கு பிறது மருத்துவ மனையில் அந்த அம்மையாரின் பணியாளர் பெண் அப்பாவி தனமாக சொன்ன "திருச்சி சிவா வரும் வரையில் நன்றாகத்தான் இருந்தார்கள், அவர்கள் வந்ததும் தான் என்னவோ மூர்ச்சையானதை போல் இருந்தார்கள்" என்ற சொல்தொடர்கள் என்ன சொல்கிறது என்று தேடி கண்டுபிடிக்க தேவை இல்லை.

வாழப்பாடி இராமமூர்த்தி என்ற ஒரு பேராய கட்சியின் மூத்த உறுப்பினர். இவர் இராச்சீவ் தமிழகம் வரும் போதெல்லாம் அவருடனே இருக்ந்த ஒரு நபர். இராச்சீவின் தமிழக பயண படங்களி அவருக்கு அருகாமையில் இவர் இல்லாமல் படங்களையே செய்திதாள்களில் பார்க்கவே முடியாது.
இராச்சீவ் இறந்ததும் அவரது சிதறிய உடலை இவரது மேல் துண்டை கொண்டு தான் மூடினேன் என்று உருக்கமாக் எல்ல நேர்க்காணலிலும் காணொலியிலும் கண்கள் கசிய, வார்த்தை தழுதழுக்க சொல்ல இவர் தவறியதில்லை. சாதாரண பயணத்திலேயே படங்களில் ஒட்டிக்கொண்டாவது வரும் இவர், இந்த திருப்பெரும்புதூர் நிகழ்வில் மட்டும் ஒரு சிறுக்கீறல்கள் கூட இல்லாமல் மேல்துண்டை கொண்டு மூடும் அளவிற்கு பாதுகாப்பாக இருந்தது எப்படி.........பதில் சொல்ல அவர் இல்லை. இந்த கேள்வியை நாம் அவரிடம் நேரிடையாக கேட்க்கவும் முடியாது.........

எத்தணையோ முகம் தெரியாத பொதுமக்களும் காவலர்களும் உயிரிழந்த அந்த படுகொலையிலே எந்த ஒரு பேராயகட்ச்சியின் தலைவர்களும் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பது ஆச்சர்யம் தராமல் இல்லை. அதோடு மட்டும் அல்லாது, அது வரையில் மா நில கட்சியின் தலைவராக இல்லாத வாழப்பாடி இராமமூர்த்தி அதற்கு பிறகு கட்சியை தொடங்கியதும் தொடர்ந்து அந்த கட்சியினை நடத்தியதும் எப்படி என்று மக்கள் கேட்க்காமல் இல்லை. மிகவும் ஆடம்பரமாக செய்தியாளர்களது கூட்டங்களை அவரால் எப்படி நடத்தமுடிந்தது என்றும் கூட கேட்க்காமல் இல்லை. அப்படியே தேர்தல் செலவுக்கு என்று இராச்சீவ் கொண்டு வந்த அந்த பண பெட்டிகள் என்ன ஆனது என்றும் கேட்க்காமல் இல்லை.

பிறகு அந்த கொலை வழக்கில் சம்பந்த பட்ட சந்திராசாமியை விசாரிக்க வேண்டும் என்ற தருணத்தில் இருந்து விசாரணையில் தகராறுகள் ஆரம்பித்தது உலகம் அறிந்த உண்மை.

பேராயக்கட்சிக்கும் சுப்பிரமணிய சாமிக்கும் என்ன சம்பந்தம். எந்த வகையிலும் சம்பந்தமே இல்லாத சுசாமி எப்படி 5 ஆண்டு காலம் பெட்ரோலிய துறை அமைச்சகத்தில் இருந்தார், ஆட்சியில் அவ்வளவு முக்கியத்துவம் பெற்றார் என்று மக்கள் கேட்க்காமல் இல்லை.

இவை எல்லா கேள்விகளுக்கும் சிகரம் வைத்தாற்போல் இப்போது இன்று குமுதம் ரிப்போர்டரில் அந்த இரங்க நாதன் நேர்காணல் வழங்கியுள்ளார். அதிலே எனது கட்டுரையில் சொன்ன அனைத்து செய்திகளையும் உறுதி படுத்தியுள்ளார். திருச்சி சிவாவை பற்றிய செய்திகளுக்கு அவரது நேர்காணலை குமுதம் இணைய தளத்தில் பார்க்கவும்.

இவ்வளவு குழப்பங்கள் நிறைந்த இராச்சீவ் காந்தியின் கொலைவழக்கில் உண்மையை கண்டு பிடிக்க பேராய கட்சியின் தலைவர்கள் முற்படவில்லை. அதை விடுத்து சீமானை கைத்து செய், பிரபாகரனை கொண்டுவா, தமிழர்களை அழித்து ஒழி என்ற பரப்புரை வேறு.

இன்றைக்கு மார்தட்டும் அணைத்து பேராயகட்சியின் தலைவர்களுக்கும் சவாலாக சொல்கிறேன், அந்த படுகொலை நிகழ்ந்த போது நீங்கள் எல்லாம் எங்கே என்ன செய்துகொண்டு இருந்தீர்கள் என்று சொல்லமுடியுமா நெஞ்சில் உரம் இருந்தால் சொல்லிப்பாருங்கள் உங்களது அழகு உங்களுக்கே தெரியும்.


இவர்களாவது பரவாயில்லை, உலகுக்கே தைரியம் வழங்கும் அந்த தைரிய லெட்சுமி அன்றைக்கு கூட்டதிற்கு வருவதாக இருந்த போதும் அந்த ஊர்ப்பக்கமே தலைவைத்து கூட படுக்கவில்லையே அந்த தைரிய லெட்சுமி ஏன் என்று சொல்வாரா அந்த தைரிய லெட்சுமியாவது............[நன்றி:பனிமலர்}

No comments:

Post a Comment