வயோதிப வயதுப் பார்வை இழப்புக்கு பார்வை கிடைக்க புதிய கண்டிபிடிப்பு!


உல­­ளா­விய ரீதியில் வயோ­திபம் கார­­மாக கண் பார்­வையை இழந்து வரும் மில்­லி­யன்­­ணக்­கான மக்­­ளுக்கு உதவக் கூடிய புரட்­சி­கர சிகிச்சைத் தொழில்­நுட்­­மொன்றை பிரித்­தா­னிய மருத்­துவ நிபு­ணர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.
இந்த 45 நிமி­டத்­திலும் குறைந்த நேரத்தை எடுத்துக் கொள்ளும் சிகிச்சை முறை­யா­னது வயோ­திபம் கார­­மாக தசைகள் சிதை­வடைவதால் பார்­வையை இழந்து வரும் மக்­­ளுக்கு மீண்டும் பார்­வையைப் பெற்றுக் கொள்ள உத­வு­­தாக அமையும் தெரி­விக்­கப்­­டு­கி­றது.
பார்­வையை இழந்த பெண்­ணொ­ரு­­ருக்கு (60 வயதுஅவ­ரது விழித்­தி­ரையில் இணைக்­கப்­பட்ட மூல­வு­யிர்க்­­லங்­களை உட்­செ­லுத்தி லண்டன் பல்­­லைக்­­ழக கல்­லூரி மருத்­து­வர்­களால் மேற்­படி புரட்­சி­கர சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
இந்த சிகிச்­சை­யை­­டுத்து உட­­டி­யாக அந்தப் பெண்­ணுக்கு பார்வை கிடைக்­­வில்லை என்ற போதும்அவர் எதிர்­வரும் டிசம்பர் மாதத்திற்குள் பார்வையை மீளப் பெற்று விடுவார் என நம்புவதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.



No comments:

Post a Comment