உலகளாவிய ரீதியில் வயோதிபம் காரணமாக கண் பார்வையை இழந்து வரும் மில்லியன்கணக்கான மக்களுக்கு உதவக் கூடிய புரட்சிகர சிகிச்சைத் தொழில்நுட்பமொன்றை பிரித்தானிய மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த 45 நிமிடத்திலும் குறைந்த நேரத்தை எடுத்துக் கொள்ளும் சிகிச்சை முறையானது வயோதிபம் காரணமாக தசைகள் சிதைவடைவதால் பார்வையை இழந்து வரும் மக்களுக்கு மீண்டும் பார்வையைப் பெற்றுக் கொள்ள உதவுவதாக அமையும் தெரிவிக்கப்படுகிறது.
பார்வையை இழந்த பெண்ணொருவருக்கு (60 வயது) அவரது விழித்திரையில் இணைக்கப்பட்ட மூலவுயிர்க்கலங்களை உட்செலுத்தி லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவர்களால் மேற்படி புரட்சிகர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சையையடுத்து உடனடியாக அந்தப் பெண்ணுக்கு பார்வை கிடைக்கவில்லை என்ற போதும், அவர் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பார்வையை மீளப் பெற்று விடுவார் என நம்புவதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment