ஒளிர்வு:59-புரட்டாதி த்திங்கள் - தமிழ் இணையசஞ்சிகை .;2015.

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நாம் வாழ்வில் முன்னேறாததற்கு முக்கிய காரணம் உடல் துன்பத்தை பெரிது படுத்துவதுதான்.
சோம்பல். விடா முயற்சியின்மை. தள்ளிப் போடுதல் போன்ற அனைத்து கெட்ட குணங்களுக்கும் ஆணி வேர் எது என்று பார்த்தால், உடல் படும் துன்பத்தை பொறுக்காமல் இருப்பது.
*இப்போது களைப்பாக இருக்கு. நாளைக்கு படிக்கிறேன்.
*அசதியா இருக்கு, அப்புறம் செய்யலாம்.
*முதுகு வலிக்குது, கண் எரியுது, கழுத்தெல்லாம் ஒரே வலி...வேலை மிகுதியால்  கையே உடைஞ்சிடும் போல இருக்கு, தலை வலிக்குது.........என்று உடல் துன்பத்தை பொறுக்காமல் இருப்பது தான் வெற்றிக்கும் உங்களுக்கும் இடையில் இருக்கும் தடைக் கல்.
நிறைய பேர் உடல் பயிற்சி செய்வது கிடையாது.  காரணம், உடல் வலிக்கும்.
காலையில் எழுந்திருக்க சோம்பேறித்தனம்.  இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே தூங்குவோமே என்ற உடல் சுகம்.
சான்றோர்கள், பெரியவர்கள் அப்படி இருப்பது இல்லை.
நீங்களும் மேலோனாக வேண்டும் என்றால், உடல் துன்பத்தை பொருட்படுத்தாதீர்கள்.
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை 
கையாறாக் கொள்ளாதா மேல் 
-திருக்குறள் 
பொருள்:உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள்உடம்பிற்கு வந்த துன்பத்தைப்துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.
கொஞ்சம் வலி பொறுங்கள்.
கொஞ்சம் அசௌகரியம் பொறுங்கள்.
கொஞ்சம் உடல் சுகத்தை குறையுங்கள்.
அன்றாட உங்கள் கடமைகளை அன்றைக்கே முடியுங்கள்.
வெற்றி உங்களது. 
.................................

0 comments:

Post a Comment