ஆரோக்கியமான வாழ்வுக்கு....

தேவையானப் பொருள்கள்:
Image result for குரக்கன்கேழ்வரகு(குரக்கன்)மாவு_ஒரு கப்
தண்ணீர்_4 கப்
உப்பு_தேவையான அளவு
செய்முறை:
 ஒரு பாத்திரத்தில் ஒரு பங்குக்கு 4 பங்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு மூடி அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.கேழ்வரகு மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.தண்ணீர் கொதி வந்ததும் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கையால் ஊற்றிக் கொண்டே மற்றொரு கையில் ஒரு    egg beater  ன் உதவியால் விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.அப்போதுதான் கட்டி தட்டாமல் இருக்கும்.தீ மிதமாக இருக்கட்டும்.சிறிது நேரம் மூடி வைத்திருக்கவும். இடையிடையே திறந்து கிண்டி விடவும்.கொஞ்ச நேரத்தில் மாவின் நிறம் மாறி வாசம் வந்ததும் உப்பு சேர்த்து இறக்கவும்.

இக் கஞ்சியை சிறு பௌளில்  ஊற்றி ஸ்பூனைப் பயன்படுத்தி சாப்பிடலாம். கொஞ்சம் நீர்க்க வேண்டுமானால் தேவையான தண்ணிர் ஊற்றி ஸ்பூனால் கலக்கிக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment