எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் { கீழப்பூங்குடி } போலாகுமா?


சிவகங்கை  மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் கீழப்பூங்குடி. சிவகங்கை இல் இருந்து சுமார் 10km  தொலைவில்  உள்ளது.இதன் வரலாற்று பின்னணியை பார்க்கும்  போது இக்கிராமம் பாண்டிய நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்தது,பிறகு நாயகர்களின் ஆட்சி இன்  கீழும் அதன் பிறகு சிவகங்கை சமஸ்தானத்தின் கீழும் இருந்து வந்தது.வெள்ளையர்களின் கோட்டம் அடக்கிய வீர மங்கை வேலு நாச்சியார் ஆட்சி இன்   கீழும் இருந்து வந்தது,அப்போது நாலுகோட்டை படை பிரிவின் தலைமை இடமாகவும்  ஒரு பகுதியாகவும் இக்கிராமம் விளங்கியது.இங்கு செட்டியார்,பிராமணர் ,கள்ளர் ,யாதவர் ,நாடார்  என பல பிரிவினரும் வசிகின்றனர்.பேரணிபட்டி,வீரப்பட்டி ,குருந்தம்பட்டி ஆகிய கிராம்களை அடக்கிய  பஞ்சாயத்தகா உள்ளது.இங்கு அரசு பொது மருத்துவ மனை ,தபால் அலுவலகம் , ஊராய்ச்சி  ஒன்றிய ஆரம்ப பள்ளி ,அரசு மேல் நிலை பள்ளி ,மற்றும் தனியார் பள்ளிகள்  உள்ளன,மாநில அரசின் நிதி உதவியின் கீழ் இயங்கும்  நூலகமும் உள்ளது .கிராம நிவாக
அலுவலகம் ,பஞ்சாயத்து அலுவலகம், பாண்டியன் கிராம வங்கி ஆகியவை சிறப்பான முறையில் இயங்குகின்றன,ஊருக்கு  அழகு சேர்க்கும் வகையில் பழமையான சிவன் கோவில் உள்ளது ,இங்கு வருடத்தில் பனிரெண்டு மாதங்குளும் விழாக்கள் நடை பெறுகின்றன.மேலும் திரு விழாக்களாக மிளகாய் சுவாமி குருபூஜை ,மாரியம்மன் கோவில் திருவிழா ,புரவி எடுப்பு ,எருது கட்டு ,முளைப்பாரி என வருடம் முழுவதும் விழாக்கள் நடை பெரும் அழகு கிராமமாக கீழப்பூங்குடி உள்ளது.மதுரை 49km  தொலைவிலும் காரைக்குடி 48 km  தொலைவிலும் இவ்வூர் அமைய பெற்று உள்ளது .இங்கு விவசாய பொருட்களாக நெல் ,கரும்பு ,வாழை ,தென்னை ,பருப்பு ,மற்றும் காய்கறிகள் விளைவிக்க படுகின்றன ,வார சந்தை ஞாயிற்று கிழமை கூடுகிரது. இவ்வூரின் அஞ்சல் என் 630552 .
தொழில்
இங்கு உழவே முதன்மைத் தொழில் ஆகும். வேளாண் பொருட்களான நெல், கரும்பு, வாழை, தென்னை, பருப்பு மற்றும் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. இங்கு விளயும் காய்கறிகளை உழவர்களிடம் மக்கள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். இதற்காக வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது.
அனுப்பியவர்:ஆரூரன் 




No comments:

Post a Comment