தீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆவணி மாத வணக்கம்.
நேரம் பொன்னானது பழம் பழமொழி..அதுவும் மாறிவரும் இவ் இயந்திர உலகில் பொன்னுக்குமேல் நேரம் மதிப்பாகியுள்ளது.இப்படியான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டு தேவையற்ற அலட்டல்களை விடுத்து வாசகர்கள் விருப்பினை பயனுள்ள தகவல்களுடன் நேரத்தினை செலவழிக்க கூடிய விதத்தில் படைப்புகளை வழங்குவதில் என்றும் கவனமாக இருக்கிறோம்.வாசகர்களின் தொகையான வரவுகள் எமது வளர்ச்சிக்கு மேலும் உரம் சேர்ப்பதுடன் புதிய சிந்தனைகளுக்கு வழிவகுத்துள்ளமை குறித்து வாசகர்களை தீபம் நன்றியுடன் எதிர்கொள்கிறது.
வாழ்க உங்கள் நட்பு,தமிழுடன் கூடவே!
No comments:
Post a Comment