எதை செய்தாலும் ஜோதிடரை கேட்டு செய்த இலங்கை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே, நான் இனியும் ஜோதிடத்தை நம்பப்போவதில்லை' என்று கூறியுள்ளார். உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்டே என்று நம் ஊர் பக்கம் ஒரு சொல்வடை சொல்வார்கள். ஆனால் ஜோதிடத்தால் கெட்டது யார் என்றால் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே என்று யாரைக்கேட்டாலும் கரெக்டாக சொல்வார்கள்.
டங்காமாரி டெடிகேசன்
தேர்தலில் தோற்றுப்போன அன்றைக்கு சரியாக டங்காமாரி ஊதாரி பாடலை டெடிகேட் செய்து புண்ணியம் கட்டிக்கொண்டனர் நம்ம ஆட்கள்.
அது பழைய ராஜபக்சே
அதுபழைய விசயம். தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து, வேட்புமனு தாக்கல் செய்தது வரை ஜோதிடரை கேட்டு காய் நகர்த்திய ராஜபக்சேவோ, இப்போது ஜோதிடம் என்றாலே அலறுகிறார். கைவிட்டுட்டாங்க
பாகிஸ்தான் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அதிபர் தேர்தலின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம் மக்கள் தன்னை கைவிட்டதால் தான் பலவிதமான சர்வதேச தாக்கங்களுக்குள்ளாகியதாக குறிப்பிட்டுள்ளார்.
செழிப்படையுமே
மேலும், பாகிஸ்தானில் உள்ள கலகங்களை நிறுத்திக்கொண்டால் நாடு செழிப்படையும் என ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
நான் நம்பமாட்டேன்
இன்னமும் ஜோதிடத்தை நம்புகிறீர்களா என்று கேள்விக்கு பதில் அளித்துள்ள ராஜபக்சே, நான் இனியும் ஜோதிடத்தை நம்பப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.
ஜோதிடர் புண்ணியத்தில்
ஆட்சி முடிய 2 ஆண்டுகள் இருந்த நிலையில், ஜோதிடர்களின் சொல்லைக் கேட்டு ஆட்சியை கலைத்த ராஜபக்சே, அதிபர் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார் இப்போதோ வழக்குகளை சந்திக்க இருக்கிறார் ராஜபக்சே.
நாடாளுமன்றத் தேர்தல்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 17-ந் தேதியன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் சுதந்திர கட்சி சார்பாக குருநாகல் மாவட்டத்தில் மகிந்த ராஜபக்சே போட்டியிட உள்ளார். அவருக்கு ஆளும் கட்சியில் அதிபர் சிறிசேன உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் வடக்கு மாகாண சபை கவுன்சிலரான சிவாஜிலிங்கம் சுயேட்சையாக போட்டியிட உள்ளார். இதற்கான வேட்புமனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.

No comments:
Post a Comment