ஒளிர்வு:57: - ஆடி த்திங்கள் - தமிழ் இணையஇதழ்.;2015

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
பொதுவாக எமது  கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்து கூறுபவர்களைப் பார்த்தால் எமக்குப் பிடிப்பது இல்லை. உண்மை என்னவெனில் நாம் சொல்வதற்கெல்லாம் ஓமுங்கோ,போடுற ஆமாம் சாமிகளாலேயோ அல்லது ஜால்ரா போடும் நண்பர்களாலேயோ,நமக்கு ஒரு பிரயோசனமில்லை.
ஆனால் நாம் பேசுவதற்கு மாற்றுக்கருத்து பேசுவர்களிடமிருந்தும், விமர்சனம் செய்பவர்களிடமிருந்தும் எமது முன்னேற்றத்துக்குரிய ஆரோக்கியமான கருத்துக்களை அறிந்து நாம் வளர்ச்சிப்பாதையில் மேலும், மேலும்  முன்னேற முடியும்.
எனவே,இனிமேலும் குறையோ விமர்சனங்களோ  உங்கள் காதிலே எட்டும்போது கூ றியவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.
  • மேலும்,தீபம் மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள்   ஆரம்பிக்கப்பட்டதுதீபம்சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய

    கட்டுரைகள்,
    கவிதைகள்,
    நகைச்சுவை(சிரிப்பு),
    திரைப் பட விமர்சனங்கள்(திரை),
    திரைச்செய்திகள்(திரை),
    தொழில்நுட்பம்,
    உடல்நலம்(உணவு),
    ஆன்மீகம்
    * பாடல் 
    * நடனம் 
    என்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள்தொடர்பாக  சுவைபடக் கூறும்

    பறுவதம் பாட்டி",(நடப்பு)
    "கனடாவிலிருந்து ஒரு கடிதம் "(நடப்பு)
     கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,செல்வத்துரை சந்திரகாசன் அவர்களின் புதுமைகள்கூறும்  ஆய்வுக்கட்டுரைகள்  என்பன விசேட இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டுஇருக்கின்றன.
    எமது பக்கத்தின் மேல் வரிசையில் காணப்படும் தெரிவுகளில் ''LINKS'' என்பதனை அழுத்துவதன் மூலம் ஏனைய நட்பு இணையங்களை வாசித்து மகிழலாம்.
    தீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்களுக்கும்தீபத்தின்எழுத்தாளார்களுக்கும்வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறதுஉங்கள்ஆக்கங்களுக்கு:- s.manuventhan@hotmail.com
    தமிழில் எழுதுவதற்கு:   click  http://www.typetamil.in  then Type in English and press space(add space) to get converted to tamil.
    உங்கள் வருகைக்கு நன்றி.


இன்று காலை சுதந்திரதின விழா கொண்டாட்டம்

 ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றுகிறார்; அப்துல்கலாம் பெயரில் விருது வழங்குகிறார்
சென்னை,

இந்தியாவின் சுதந்திரதின விழா இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

கோட்டையில் சுதந்திர தின விழா

டெல்லி செங்கோட்டையில் இன்று காலை நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

மாநில தலைநகரங்களில் நடைபெறும் சுதந்திர தின விழாக்களில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் தேசிய கொடி ஏற்றுகிறார்கள்.

தமிழக அரசின் சார்பில் சென்னை கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

போர் நினைவுச் சின்னம்

இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தனது போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து காலை 8.20 மணிக்கு காரில் புறப்படுகிறார்.

கோட்டைக்கு வரும் வழியில் போர் நினைவுச்சின்னத்திற்கு செல்கிறார். அங்கு, போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்டு, மலர் வளையம் வைத்து, போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

அதிகாரிகள் அறிமுகம்

பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் புடைசூழ முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை புனித ஜார்ஜ் கோட்டைக்கு காவல்துறையினர் அழைத்து வருவார்கள். அவரை தலைமைச் செயலாளர் கு.ஞான தேசிகன், வரவேற்பார்.

அங்கிருக்கும் தலைமை ராணுவப்படை தலைவர், கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைதள அதிகாரி, கடலோர காவல் படை கிழக்கு மண்டல ஐ.ஜி, தமிழக டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மரபுப்படி தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் அறிமுகம் செய்து வைப்பார்.

அணிவகுப்புமரியாதை

அதன்பிறகு, அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலாளர் அழைத்துச் செல்வார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொள்வார்.

அதைத் தொடர்ந்து அவர் திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிடுவார். அவருடன் ஜீப்பில் அணிவகுப்பு தலைவர் செல்வார்.

ஜெயலலிதாகொடி ஏற்றுகிறார்

பின்னர் கோட்டை கொத்தளத்திற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா செல்வார். அங்கு 8.50 மணிக்கு மூவர்ண தேசிய கொடியை அவர் ஏற்றி, சல்யூட் அடித்து வணக்கம் செலுத்துவார்.

அப்போது போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை வாத்தியத்தில் இசைப்பார்கள். அதன்பிறகு, ஜெயலலிதா சுதந்திர தின உரை நிகழ்த்துவார். சுமார் 10 நிமிடங்கள் அவரது உரை நீடிக்கும் என்று தெரிகிறது. அவர், தனது உரையின் போது சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

அப்துல் கலாம் விருது

அதைத்தொடர்ந்து, விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, சிறந்த சேவை புரிந்தோருக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் சுதந்திர தின விழாவில், மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்பட உள்ளது. விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலனுக்காக பாடுபட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது பெறுபவருக்கு 8 கிராம் தங்கப்பதக்கம், ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்குவார்.

பின்னர், விருது பெற்றவர்களுடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார். அதன்பிறகு, கோட்டை கொத்தளத்தில் குழந்தைகளுக்கு ஜெயலலிதா இனிப்புகளை வழங்குவார்.

பலத்த பாதுகாப்பு

விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

சுதந்திர தின விழாவை யொட்டி சென்னை கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோட்டை கொத்தளத்தில் ஏ.சி. மற்றும் நவீன மேடை உள்பட புதிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. 

திரை விமர்சனம்: 36 வயதினிலே

திருமணத்துக்குப்பிறகு, தனக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கையே இல்லாமல், குடும்ப வட்டத்துக்குள் முடங்கும் ஒரு பெண், ஒரு காலகட்டத்துக்குப் பின் அதே குடும்பத்தினரால் ஒதுக்கப்படும்போது எப்படி மீண்டும் தன் சுயத்தைக் கண்டடைகிறாள் என்பதே ‘36 வயதினிலே’. ‘ஹவ் ஓல்டு ஆர் யூமலையாளப் படத்தின் ரீமேக். அதை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இதையும் இயக்கியிருக்கிறார்.
பணம் சம்பாதிக்க அயர்லாந்துக்குப் போகவேண்டும் என்பது ரகுமானின் கனவு. மனைவி ஜோதிகாவின் 36 வயது அதற்குத் தடையாகிறது. கணவனும் மகளும் இதனால் எரிச்சல் அடைகிறார்கள். ரகுமான் ஒரு விபத்து நிகழ்த்திவிட, விசா கிடைக்கும் நேரத்தில் தன் மீது வழக்கு வந்துவிடக் கூடாது என்பதால் ஜோதிகாவை விபத்துக்குப் பொறுப்பேற்க சொல்கிறார். சட்டப்படி அதிலும் சிக்கல் வர, ரகுமானின் எரிச்சல் உச்சத்தை அடைகிறது.
ஜோதிகாவின் மகளுடைய பள்ளிக்கு விஜயம் செய்யும் குடியரசுத் தலைவர், அவள் கேட்கும் கேள்வியைக் கண்டு அசந்துபோகிறார். அதை சொல்லிக்கொடுத்தது அவளது அம்மா என்று தெரிந்ததும் அவரைப் பார்க்க வேண்டும் என்கிறார். ஒரே நாளில் ஜோதிகாவின் அந்தஸ்து கிடுகிடுவென்று உயர்கிறது. வீட்டிலும் அலுவலகத்திலும் இளக்காரமாக நினைத்தவர்கள் வாயைப் பிளக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புக் கெடுபிடி களால் திணறும் ஜோதிகா, குடியரசுத் தலைவரைச் சந்தித்ததும் மயக்கம்போட்டு விழ, ஊரே அவரைப் பார்த்துச் சிரிக்கிறது. இந்த நேரத்தில் கணவரும் மகளும் வெளிநாட்டுக்குக் கிளம்பிவிடுகின்றனர். வயதான மாமனார், மாமியாருடன் வசிக்கும் ஜோதிகாவைக் கழிவிரக்கம் கவ்வுகிறது.
தனக்கென ஒரு அடையாளமோ, மரியா தையோ இல்லாத வாழ்வில் ஜோதிகாவால் தன் அடையாளத்தை மீட்டுக்கொள்ள முடிந்ததா?
இரண்டு முக்கியமான பிரச்சினைகளை இந்தப் படம் தொடுகிறது. 1. நம் சமூக அமைப் பில் திருமணத்துக்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் அடையாளச் சிக்கல். 2. இயற்கை வேளாண்மை. இந்த இரண்டையும் பொருத்த மான கதையில் இணைத்து விறுவிறுப்பாகச் சொல்லியிருந்தால் குறிப்பிடத்தகுந்த படங் களில் ஒன்றாகியிருக்கக்கூடும்.
பாத்திர வார்ப்புகள், சம்பவங்களில் நாடக தொனி! ஜோதிகாவின் மேல் அனு தாபம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவரது அலுவலக சகாக்கள், கண வன், மகள் என எல் லோரையும் கிட்டத்தட்ட வில்லன்களாகக் காட்டுவது அத்தனை இயல்பாக இல்லை.
கல்லூரிப் பருவத் தோழி அபிராமியின் மூலம் ஜோதிகாவுக்கு உத்வேகம் கிடைப்பது, பேஸ்புக், மாரத்தான் என்று புதிய அத்தியாயம் தொடங்குவது, காய்கறி விற்பனை மூலம் திருப்பம் வருவது என்று எதை எடுத்தாலும் அதிரடி அவசர திருப்பம்தான். ஜோதிகாவின் உரையைக் கேட்டுவிட்டுச் சட்டசபையில் எல்லா உறுப்பினர்களுக்கும் இயற்கை வேளாண்மை பாடம் எடுப்பதாக அமைச்சர் சொல்வதும் குடியரசுத் தலைவரிடம் இருந்து வரும் இரண்டாவது அழைப்பும் நம்ப வைக்கிற அழுத்தத்துடன் சொல்லப்படவில்லை.

மனதைத் தொடும் சில காட்சிகளும் படத்தில் உள்ளன. தன்னைச் சம்பளம் இல்லாத வேலைக்காரப் பெண்ணாக வெளிநாட்டுக்குக் கூப்பிடுகிறார்கள் என்பதை ஜோதிகா உணரும் இடம் அழுத்தமானது. பெரிய கடையில் வேலை பார்க்கும் மூதாட்டியை அவரது வீட்டுக்குச் சென்று ஜோதிகா சந்திக்கும் இடமும் குறிப்பிடத்தக்கது. பாசத்தை வைத்து தன் குடும்பம் விரிக்கும் வலையில் விழாமல் ஜோதிகா உறுதியாக நின்று சாதிப்பது முக்கியமான தருணம்.
திரைக்கதை நைந்து தொங்கும் நேரங்களில் படத்தைத் தாங்கிப் பிடிப்பது வசனகர்த்தா விஜி. நடுத்தர வயதை நெருங்கும் பெண்களின் நிலையைப் பொட்டில் அறைந்ததுபோல் சொல்லும் வசனங்கள் படத்தின் மதிப்பைக் கூட்டுகின்றன.
சந்தோஷ் நாராயணனின் இசையில் வாடி ராசாத்தி பாடல் திரும்பக் கேட்கத் தூண்டுகிறது. 
ஜோதிகாவுக்கு அட்டகாசமான மறுபிரவேசம். படத்தை முழுவதுமாகத் தாங்குகிறார். கணவன் தன்னை இழிவுபடுத்தும்போது அவர் வெளிப்படுத்தும் முக பாவனை இன்றைய பெண்களின் துயரத்தின் அடையாளமாக நம் மனதில் தங்கிவிடுகிறது.
குடும்பத்துக்காகத் தன் அடையாளத்தையும் கனவையும் தொலைத்துவிட்ட பெண்கள், குடும்பச் சுமையில் சிக்கி இயந்திரமயமான வாழ்வை வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். குடும்பத்துக்காகவே பல விஷயங்களை இழக்கிறார்கள்.

அவர்களது உழைப்பை உறிஞ்சிக் கொண்டு போதாமைகளைச் சுட்டிக் காட்டிக் குடும்பமே அவர்களை இழிவுபடுத்துகிறது. இவற்றை பொறுத்துக் கொண்டுபோகும் பெண்களின் வலியைச் சொன்னவிதம் சரிதான். ஆனால் அதை இன்னும் யதார்த்தமாகச் சொல்லியிருக்கலாம்.