குறும்படம், புதிய படம், செய்திகள் இவ்வாரம்

குறும்படம், இவ்வாரம் வெளிவந்த படங்கள், திரையின் செய்திகள்  

''அஞ்சல ''' :2.5நிமிட குறும்படம்(-video) 


கண்ணில்லாக் காதல் உறவுகளை மட்டுமல்ல, உயிரினையே பறித்ததுண்டு.அதனை இக் குறும்படம் பிடித்துக் காட்டுகிறது.

📽📽📽📽📽📽📽

இவ்வாரம் வெளிவந்த படங்கள்

படம் : சுல்தான் விமர்சனம்

நடிகர் : கார்த்தி, ராஷ்மிகா மந்தண்ணா,யோகி பாபு, நெப்போலியன், லால், சதீஷ், ஹரீஷ் பெரடி, ராமச்சந்திர ராஜு, நவாப் ஷா, சிங்கம்புலி, சென்றாயன், எம் எஸ் பாஸ்கர், மயில்சாமி, பொன்வண்ணன்.

விமர்சனம் சுருக்கம்:தெலுங்கின் தமிழ் மொழிபெயர்ப்பு. நகைச்சுவையற்ற யோகிபாபு. தாதாவுக்கு 100 ற்கு மேற்பட்ட அடியாட்கள்.பல படக்கதைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்து சேர்த்த கலவை.தந்தை தாதா இறக்க அவரின் அடியாட்களை காப்பாற்ற, தந்தையின் பொறுப்பை நிறைவேற்ற அடுத்தகிராமத்து வில்லனுடன் ஏற்படும் மோதலில் ஏற்படும் காதலும் நிறைவேறுவதே கதை.

தயாரிப்: 2.5/5

📽📽📽📽📽📽📽

சினிமா செய்திகள்:

 டைரக்டராக இருந்து நடிகர் ஆனவர்களில் முக்கியமானவர், எஸ்.ஜே.சூர்யா. இவர் கதாநாயகனாக-வில்லனாக நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதால், ராசியான நடிகராக கருதப்படுகிறார். அதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.

-----------------

நயன்தாரா கமல்ஹாசன் தவிர ஏறக்குறைய எல்லா பிரபல கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார்.

கமல்ஹாசனுடன் எப்படியாவது ஜோடி சேர்ந்துவிட வேண்டும். என் மார்க்கெட் நிலவரம் உச்சத்தில் இருக்கும்போதே அது நடக்க வேண்டும்” என்கிறார், அவர்.

-----------------

மாநகரம், இரும்புத்திரை, கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்கள் இந்தியில் தயாராகின்றன. அடுத்து விக்ரம் வேதா படமும் இந்திக்கு போகிறது. விக்ரம் வேதா 2017-ல் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. இதில் மாதவன், விஜய்சேதுபதி, ஷரத்தா ஶ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் ஆகியோர் நடித்து இருந்தனர்.

---------------------

செல்வராகவன் இயக்கத்தில் முதல் பேய் படம் திரைக்கு வந்து இருக்கிறது 'நெஞ்சம் மறப்பதில்லை'. பாதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற ‘சைகோ’ ஆசாமியாக எஸ்.ஜே.சூர்யா. பணத்துக்கும், சொத்துக்கும் ஆசைப்பட்டு நந்திதாவை திருமணம் செய்து கொண்டு , ரெஜினா மீது காமவெறி கொண்டு அவளைக் கொலை செய்தபின் ரெஜினா ஆவியாக  வந்து பழிதீர்ப்பதுவே கதை.

----------------

'ஏலே' படத்தில் ஐஸ் வியாபாரியான சமுத்திரக்கனி, இவரது தம்பியாக கிராமத்து பணம் பறிப்பது மோசடியில் இன்னொரு சமுத்திரக்கனி  என  சமுத்திரக்கனிக்கு இரட்டை வேடங்கள்.  அவரது மகனாக மணிகண்டன், ஒரு கிராமத்து இளைஞராக  ‘நாச்சியா’ என்ற பண்ணையார் மகளாக வரும் மதுமதி காதல்.காணாமல் போன இறந்த சமுத்திரக்கனியின் பிணத்தினை மகன் கன்டுபிடித்தானாமணிகண்டன் காதல் என்ன ஆனது? என்பதனை நகைச்சுவையுடன் ஜனரஞ்சகமாக  படம் கூறுகிறது.


---தொகுப்பு:செமனுவேந்தன் 




0 comments:

Post a Comment