சாத்தானின் வேதங்கள்<எழுத்தாளர் -லதா , சரவணன்




இனிமே நீ சின்னப்பையன் இல்லை ரகு, ப்ளஸ் 2விலும் நல்ல மார்க் வாங்கணும். அப்பா அம்மாவின் ஆசீர்வாதத்தோடு நான் பள்ளியில் என் முதல் நாளைத் துவங்கினேன்.
 பதிமூன்றின் தொடக்கம் என் மனதில் சிறு மாறுதல்களை உண்டாகியது. ஹார்மோன்களின் கூட்டுச் சதியில் நான் சிக்கிக்கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும். குறுகியிருந்த மார்பும் தோள்களும் விரியத் துவங்கியது. என் குரல் உடைந்து எனக்கே அந்நியமாகப் பட்டது. வரட்டுமா வேண்டாமா என்பதைப் போல மீசை அரும்புவிட்டு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்க, பருவம் சில பருக்களை என் கன்னத்துக்குக் குத்தகைக்கு கொடுத்தது.
சுட்டி டீவி சன் மீயூசிக்காகவும், நிக்கும் ஹங்காமாவும், ஸடார் டீவியாகவும் மாறிட, நயன்தாராவும் திரிஷாவும் அக்கா என்ற சொல்லை அகராதியிலேயே தூக்கியெறியச் சொன்னார்கள். காம்ப்ளான் பையனைப்போல் நான் வளர்கிறேனே மம்மி என்று எனக்கு கத்தத் தோன்றவில்லை, டீன் ஏஜ் பையனின் பருவருசி ரசிக்கும் படியாகத்தான் இருந்தது. வார இறுதியில் கிரிக்கெட் மட்டையை எடுத்துக் கொண்டு படிப்புக்கு டாட்டா காட்டிச் செல்ல பழகியபோது இரண்டு முறை மெளனம் காத்த அம்மா அப்பாவின் காதில் சொல்லி முதுகு வீங்கியதால் அன்றிலிருந்து என் முதல் ஹீரோவான அப்பா முதல் எதிரியானார்.

ரகு நாளைக்கு ஒரு படத்துக்குப்போறோம். காலையிலே ஸ்கூல் கட் அடிச்சிட்டுப்போறோம். நீ வர்றீயா வெறும் 50 ரூபாய் தந்தால் போதும், சினிமாவுக்கா அதுவும் ஸ்கூல் கட்டடிச்சுட்டா, ஏதாவது பிரச்சனையாயிடப்போகுதுடா ?! நாங்கயெல்லாம் மாதத்துக்கு ஒரு தடவை போறோம் இதுவரையில் மாட்டியிருக்கோமா என்ன ? வாடா பெரிய டாக்டரோட பையன் நீ 100 ரூபாய் கிடைக்கிறது என்ன கஷ்டமா ? உன்பேரையும் சேர்த்துக்கச் சொல்லிடறேன். வேகமாய் சென்றுவிட்ட நண்பனிடம் வேண்டாம் நான் வரவில்லை என்று சொல்லிடத்தான் விரும்பினேன் ஆனால் ஆசை விட்டுத்தரவில்லைநகரத்திலே பெரிய டாக்டர் அம்மாவும் அப்பாவும், நோயாளிகளோடும், மாத்திரை மருந்துகளோடுமே போராட வேண்டியிருக்கும். இதில் நான் பள்ளிக்கு வருகிறேனா போகிறேனா என்று யாரும் கவனிக்கப் போவதில்லை ஆனால், பணம் அதற்கு எங்கே போவது ? எப்போதும் தனக்கும் பிறருக்கும் வேண்டியவற்றை தந்தையே வாங்கி வந்துவிடுவது வழக்கம், தவிர்த்து வேலைக்காரப் பெண்மணி வாங்கிவந்துவிடுவாள். அப்படியிருக்க பணத்திற்கு என்ன செய்வது ? சாப்பாட்டை அளந்தபடியே சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். அப்பாவின் சட்டையில் என்னை எடுத்துக்கொள் என்பதைப்போல ஒரு 100 ரூபாய் நோட்டு தலை நீட்டியது.
மனதிற்குள் ஒரு சின்ன போராட்டம் அப்பா காலை தேடினால், தேடட்டும் எப்படியும் நான் பள்ளிக்குப் போன பிறகுதானே தேடுவார் , அவன் வேகமாக பணத்தை எடுத்து தன் அரைடவுசரின் பாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டேன். முதல் தவறு, உள்ளங்கை பயத்தில் பிசுபிசுத்தது. காலையில் பணம் காணோம் என்று அப்பா பார்த்து கண்டுபிடித்து பள்ளி விட்டு வந்ததும் மறுபடியும் பெல்ட்டைத் தூக்குவாரோ என்று மனம் பயந்தது.

ஆமாம்.... அப்படியே திட்டுவாங்கினாலும் தைரியமாக சொல்லிவிடவேண்டும். இவர்கள் இருவரும் ஆஸ்பத்திரிக்கு போயிடறாங்க. எத்தனை நாளைக்குத்தான் வேலைக்காரன் கிட்டேயே எல்லாம் கேட்பது. பெற்ற பிள்ளை என்று யாரும் கவனிப்பதில்லை, என்ன படிக்கிறாய் எப்படிப் படிக்கிறாய் என்று கேட்பதில்லை, மார்க் கம்மியானால் மட்டும் பெல்ட்டைத் தூக்கத் தெரிந்த பெற்றோர்கள். இவர்களிடம் இத்தனை நாள் உண்மை பேசியதே தவறுதான் என்று மனம் கோணியது. என்னை உதாசீனப்படுத்தியவர்களுக்கு நான் மட்டும் ஏன் உண்மையாக இருக்க வேண்டும். இனிமேல் அப்படி ஒரு போதும் இருக்கப் போவதில்லை ஆனால், முழுவதுமாகவா உன்னை நாங்கள் உதாசீனப்படுத்தியிருக்கிறோம் என்று பெற்றோர்கள் கேள்வி கேட்பதைப் போல் இருந்ததுஅவர்களை மறந்தேன்...நினைவின் எல்லைக் கோட்டிற்குள் நிற்க வைத்துவிட்டு நண்பனுடன் போகத் தீர்மானித்தேன். கூட்டத்தில் அம்மாவின் கைபற்றி, தங்கையை சீண்டிக்கொண்டு, இன்டர்வெலில் தந்தையுடன் சென்று சமோசாவும், பாப்கானும் கொறித்தபடியே ஏதோ ஒரு பாடாவதியான படத்தை பார்த்தையும், இப்போது நண்பர்களுடன் எல்லாவற்றையும் ரசித்து, சிணுங்கலுக்கும் கூட சிரித்துக்கொண்டு ஆர்ப்பாட்டமாய் படம் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. தியேட்டரே வித்தியாசமாய் இருந்தது. அங்காங்கே ஜோடிஜோடியாய் சில இளசுகள், அத்தனை நெருக்கமாய் .... இன்டர்வெல் மணி அடித்ததும், ஒட்டியிருந்த தலைகள் எல்லாம் பிரிய ஆரம்பித்தன. இப்படி நாங்கள் குடும்பபமாய் வரும்போதும் இருந்ததுண்டு ஆனால் அம்மா அந்தப்பக்கம் பார்க்காதே என்று முகத்தை திருப்பிவிட்டுவிடுவார். ரகசியமாய் பார்க்க ஆவல் இருந்தாலும் அம்மாவிற்கு பயந்திருந்து இயந்திரத்தைப்போல அசையாமல் படம் பார்த்தது அநியாயத்திற்கு நினைவு வந்தது
 நான் கையிலிருந்த சில்லரை காசுக்கு பாப்கார்னும், கோக்கும் வாங்க எழுந்தேன். எங்கேடா போறே ? இங்கே வா, அருண் என்னை வேகமாய் ஒரு மறைவான பகுதிக்கு கூட்டிச் சென்றான். அங்கே ரயில் வண்டியைப் போல் புசுபுசுவென்று புகைவிட்டுக்கொண்டு இருந்தார்கள். என்னடா இது ? சிகரெட் இந்தா அடி.... அய்யய்யோ வேண்டாம் பழக்கமில்லை, நாங்கயெல்லாம் என்ன பழகிகிட்டேவா இருக்கும், இதெல்லாம் பழகப் பழகத்தான் வரும் மச்சி, மீசை முளைச்சாச்சு, ஒரு தம் அடிக்கலைன்னா நீயென்னடா ஆம்பிளை..... உசுப்பேற்றினார்கள்.
அந்த வெள்ளைநிற பஞ்சு என்னை கட்டியணைக்கச் சொல்லியது. விரல்களில் பற்றி மெல்ல இழுத்தேன்....! சென்ற காட்சியில் இது போலவே ஒரு சீன். ஆனால் அந்தக் கதாநாயகனைப் போல் எனக்கு இருமல் வரவில்லை, மாறாக ஒரு பெரியமனுஷத்தனம் என்னை ஆட்கொண்டதைப் போல் இருந்தது. ஒரு சிகரெட் முடித்ததும், அடுத்ததற்கு மனம் ஏங்கியது. சாக்லேட் மென்னுக்கோடா ஸ்மெல் வராது, நாங்கள் மறுபடியும் எங்கள் இருக்கைகளுக்கு வந்து அமர்ந்தோம். முன்பைப்போலவே ஆங்காங்கே தலைகள் ஒட்டிக்கொண்டு இருந்தது. புகையின் சுவை ரசித்தபடியே படத்தை தொடர்ந்தேன்

அம்மா நாங்க ஒரு பத்துபேர் ஒண்ணா படிக்கப்போகிறோம். செலவுக்கு காசு இருந்தா தாயேன்.
படிக்கக் காசு எதுக்குடா ?
என்னம்மா நம்ம வீட்டுலே கம்ப்யூட்டர் இருந்தும், நெட் கனெக்ஷன் இல்லை, இப்போயெல்லாம் ஒண்ணாவது படிக்கிற பிள்ளைகளுக்கே புரோஜெக்ட்ங்கிற பேர்ல கம்ப்யூட்டரில் சர்ச் பண்றாங்க. அப்பாகிட்டே சொல்லி நெட் கனெக்ட் பண்ணச் சொல்லுங்க ?! நான் எங்கேயும் படிக்கப்போகலை, போற இடத்திலே ஏதோ சாப்பிடத்தான் கொடுப்பாங்க, படிப்பு சம்பந்தமா ஜெராக்ஸ் எல்லாம் எடுக்க வேண்டாமா அதுக்கு நான் எங்கே போவேன் ? அவனின் நீண்ட பேச்சுக்கு பலன் இருந்தது. பணம் தரப்பட்டது. வெற்றிக் களிப்புடன் நானா இத்தனை சரளமாக பொய் பேசினேன்
 வாடா வாடா உனக்காகத்தான் இத்தனை லேட்டு பேக்குலே என்னது ?!
புக்கு படிக்கணும் இல்லை இந்தா நீ கேட்ட காசு ?!
 இவன் வேற வாடா உள்ளே சென்று பார்த்த ரகுவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அருணைப் போல பள்ளி நண்பர்கள் ஐந்தாறுபேர் இருந்தனர். அவர்கள் முன்பு பீயர் பாட்டில்களும், சிப்ஸ் வகையறாக்களும் இருந்தது, பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு அவனுக்கும் ஒரு பங்கு தம்ளர் தரப்பட்டது. கண்ணாடி டம்ளரில் பொங்கிய திரவத்தை கண்டதும் அலைபாய்ந்தான் ரகு.
என்னடா மச்சான் தயங்குறே ? இதெல்லாம் அனுபவிக்கிற வயசுடா நமக்கு, ஒண்ணாங்கிளாஸ் படிக்கிற அடுத்து இரண்டு மூணு, டிகிரி முடிக்கமாட்டியா ? அதேமாதிரி இதுவும், நம்மோட வயதின் மாற்றம் தான். யோசிக்காம அடி... இதுக்கே பயந்தா இன்னும் எத்தனையோ நீ கத்துக்க வேண்டியிருக்கு ?! அவன் குடித்தான் இலேசான கசப்பு தொண்டையில் ஊறியது. பிறகு அந்த ருசி நாக்குக்குப் பழக ஆரம்பித்தது?!
டேய் ஐயிட்டம் ரெடியா ? என்றான் அருண்.. ரெடிதாண்டா முருகன் எடுத்துவைச்சிருக்கான். மெமரி கார்ட்டை கொண்டு வருவான் இரு.... பணம் தந்து இருக்கேன்டா ? யாரு இல்லைன்னா ? அவர்கள் பேசுவது என்னவென்று எனக்குப் புரியவில்லை ஆனாலும் இன்னொரு புது அனுபவம் எனக்கு கிடைக்கப் போகிறது என்று நினைத்துக் காத்திருக்க ஆரம்பித்தேன். மெமரிகார்டு போல்டரில் அடைத்து விசிஆரை இயக்கினான். கதவு தாளிட்டு இருக்கான்னு பாருடா, ஜன்னல் எல்லாம் மூடிடுங்க ?! பரபரப்பான நிமிடங்கள் 45 முழு நிமிடம் முடிந்தபோது இதெல்லாம் ...........! ச்சீ என்று ஒதுக்க வேண்டிய விஷயங்களாக எனக்குத் தோன்றவில்லை, அவனும் சிலதை பார்த்திருக்கான் பக்கத்து வீட்டு ராதிகா அக்காவும் அவள் கணவனும், வண்டியில் இடித்துக்கொண்டு செல்லவதை, மொட்டைமாடியில் மோட்டர் போடப்போன போது, எதிர்வீட்டு ராஜீ அண்ணன் சர்மிளா அக்காவை கட்டிப்பிடித்தை என்று ஆனால் இதுதான் உச்சம் எல்லை என்று புரியாத வயது அது.
மனதிற்குள் மிகையாய் சாத்தான் வந்து உட்கார்ந்து கொண்டான். போகலான்டா நேரமாகுது.
மறுபடியும் போட மாட்டாங்காளா ?
ம்கூம், அவங்க வீட்டுலே ஆளு வந்திடுவாங்க, அடுத்த வாரம் எங்கவீட்டுலே அம்மா வெளியே போறாங்கடா மச்சான் அன்னிக்கு கச்சேரி இருக்கு. பணத்தோட வா ?! அருண் எதையோ போதிப்பதைப் போல் சொன்னாலும் சற்று மனதிற்கு உறுத்தலாகவே இருந்தது?
இதெல்லாம் தப்பில்லையாடா அருண்... என் வீட்டில் என்னை இறக்கிவிட்டுப் போனவனை கேட்டேன். தப்புன்னா எல்லாமே தப்புதான். அப்படி நினைச்சிருந்தா நீயும் நானும் பிறந்திருக்க முடியுமா ? போ படிச்சியான்னு கேட்டா படிச்சிட்டேன்னு சொல்லு... எதையும் உளறி வைக்காதே ? அப்புறம் சிக்கலாயிடும்... எனக்கு போதனைகளை சொல்லிவிட்டு சீட்டியோடு கிளம்பினான். உள்ளே நுழைந்தேன் நான்.
என் தங்கையின் தோழி அபர்ணா நின்றுகொண்டு இருந்தாள்.
நல்லாயிருக்கீங்களா ?
ம்... நீ யெப்படி இருக்கே என்ன இந்தப் பக்கம் ?!
மறந்திட்டீங்க இல்லை நாளைக்கு உங்க பிறந்த நாள் இல்லை அதனால் வாழ்த்து சொல்லிட்டுப்போகலான்னு வந்தேன். இந்தாங்க என் பிரசண்ட். கையில் சிறு பொட்டலத்தை திணித்துவிட்டு என் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாய் வாழ்த்தினாள். எனக்கு என்னவோ போலிருந்தது. செய்துவிட்ட வந்த காரியம் அபர்ணாவை தவறாய் பார்க்கச் செய்தது. தங்கை வரவும் நான் பார்வையைத் திருப்பிக்கொண்டேன்.
 பார்த்தியா அண்ணா எனக்கு கூட கிப்ட் தரமாட்டாள். உனக்கு தந்திருக்கிறாள். அவங்க அம்மா செலக்ட் பண்ணதாம். தங்கை தோள்களில் சாய்ந்து கொண்டு சிரித்தாள். ம்.... உங்க அண்ணனை எங்க வீட்டுலே எல்லாருக்கும் ரொம்பவும் பிடிக்கும் , அவரை மாதிரி நல்ல ஒழுக்கமான பையனா இருக்கணும் என்று என் தம்பியிடம் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அபர்ணாவின் குரல் எனக்குள் ஒரு திடுக்கிடலை ஏற்படச் செய்தது.
 அம்மாவும், அபர்ணா அம்மாவும் வெளியே போயிருக்காங்க நாங்களும் லைப்ரரி போறோம், சாப்பாடு டைனிங் டேபிளில் இருக்கு எடுத்துப் போட்டு சாப்பிடு என்று கூறிவிட்டு வெளியேறினார்கள்.
நான் டீவியை உயிர்ப்பித்தேன். எல்லாச் சேனலிலும், ஏதாவது ஒரு கதாநாயகன் கதாநாயகியை விரட்டி விரட்டி கட்டிப்பிடித்தான். பச்சைப் பச்சையான பாடல் வரிகளோடு ஒரு மூன்றாம் தர பெண் உடலை காட்டியபடி ஆடிக்கொண்டு இருந்தாள்.

சேனலை மாற்றினேன். நண்பனின் வீட்டில் நடந்தவற்றை அசைபோட்டுக்கொண்டே இருந்த மனதை அடக்கினேன். இத்தனை நாள் குழந்தையாய் சந்தோஷமாக இருந்த போது இருந்த நிம்மதி தற்போது பெரிய மனிதத்தனமாய் செய்யும் சில காரியங்களால் அடிபட்டுப் போவதைப் போல் இருந்தது. வேண்டாம் நான் திருடியிருக்கிறேன். அம்மாவிடம் பொய் சொல்லியிருக்கிறேன். என்னை நம்பி அருகில் நின்ற பெண்ணைத் தவறாகப் பார்த்திருக்கிறேன் சே என்ன முட்டாள்தனம் இனி நான் தவறான பாதைக்குப் போக மாட்டேன். மனதிற்குள் டென்ஷன் ஏறியது. கைகால்கள் எல்லாம் செய்த தவறை எண்ணி நடுங்கத் துவங்கின. மீண்டும் சேனலை மாற்றினேன்.
அது ஒரு கார்ட்டூன் ஷோ....! 7வயதுப்பையனின் கதை ஐந்து நிமிடத்தில் ஒரு குட்டிப்பெண் வந்தது, அந்தப்பெண்ணின் மனதைக் கவர்வது எப்படி என்று அவன் யோசித்துக் கொண்டு இருப்பதைப்போல் ஷோ,,, ச்சீ....மறுபடியும் சேனலை நகர்த்தினேன். விளம்பரம்அசிங்கமான ஒருவன் பெண்கள் யாரும் அவனைத் திரும்பிப் பார்ப்பது இல்லை, ஆனால் ஒரு கம்பெனி டியோஸ்பரே இரண்டு மூன்று முறை அடித்ததும் ரோடு என்று கூட பாராமல் சில பெண்கள் அவனை மோகித்து ஓடிவருகிறாள். அவன் சந்தோஷமா கட்டை விரலை உயர்த்துகிறான். இதெல்லாம் சரிப்பட்டு வராது இப்படியே போனால் சற்றுமுன்பு தவறு செய்யமாட்டேன் என்று எடுத்த விரதம் கெட்டுப்போகும் நான் கிளம்பிவிட்டேன். டீவியை அணைத்துவிட்டுப் படுத்தேன்.
 அன்றிரவு அம்மா தட்டில் சோற்றை பிசைந்து எனக்கு ஊட்டினாள், என்ன பிள்ளைடா நீ குதிரு மாதிரி வளர்ந்திருக்க ஒரு நாள் ஒருவேளை ஆளிள்லைன்னா உன்னால ஒரு சாப்பாடு போட்டு சாப்பிடத் தெரியாதா ? அப்பா தண்ணி கொண்டு வந்து தந்தார். போதும்மா.... தட்டை நகர்த்தினேன். அன்னையின் அருகில் இருக்கும் போதுதான் எத்தனை பாதுகாப்பு என் மனதில் எத்தனை நல்லெண்ணங்கள். நான் மாறிவிட்டேன். தவறிய பாதையில் இருந்து திரும்பிவிட்டேன். சந்தோஷமாக இருந்தது. சாப்பிட்ட பாத்திரத்தை எடுத்துவிட்டு அம்மாவும் அப்பாவும் சென்றுவிட்டார்கள். தண்ணீர் வேண்டும் என்று வெளியே வந்தேன்.
சமையலறையில் அம்மாவைச் சீண்டியபடி அப்பா..... விடுங்க இப்பத்தான் கல்யாணமாணா மாதிரி நமக்கு பெரிய பிள்ளைங்க இருக்காங்க அவங்க கண்ணு முன்னாடி இப்படியெல்லாம் நடக்கக்கூடாது. போங்க அம்மா அப்பாவை விரட்டுவது கேட்டது. தங்களின் சின்ன செயல் கூட பிள்ளைகளை காயப்படுத்திவிடக்கூடாது என்று நினைக்கும் அப்பா அம்மாவை நான் எத்தனை ஏமாற்றியிருக்கிறேன் என்று மனதிற்குள் நொந்தபடியே உறங்கப்போனேன். தூக்கம் எட்டிப் போனது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா காலையில் இருந்து இனிப்புகளும் வாழ்த்துக்களும் சில நாள் முன்பு நடந்த நிகழ்வுகளையும், கசப்புகளையும் தள்ளிப்போனது. எல்லா கொண்டாட்டங்களும் முடிந்தது. அப்பா எனக்கு ஆன்ட்ராய்டு மொபைல் போன் வாங்கிக் கொடுத்தார். எத்தனை சந்தோஷமான உலகம் இது, நண்பர்கள் எல்லாருக்கும் போன் நம்பர் தந்துவிட்டேன். என்னுடைய பேட்சில் நான்தான் கடைசியாக மொபைல் வாங்கியிருக்கிறேன். மற்ற எல்லாருக்கும் முன்பே இருந்தது.

டேய் நாளைக்கு எங்க வீட்டுலே நண்பர்கள் எல்லாரும் ஒண்ணா படிக்கப்போகிறோம். நீ வர்றே இல்லை. உனக்கும் சேர்த்து நான் காசு கொடுத்திட்டேன்னு அருண் சொன்னதும் நான் வேகமாய் மறுத்தேன்
இல்லைடா இதெல்லாம் தப்புன்னு என் மனசுக்குப் படறது. நான் வரலை, எனக்கே நான் அந்நியமா படறேன் அருண்... நீ போ...
 அட அத்தனை சீக்கிரம் நல்லவனாயிட்டியாடா ? நீ எப்படியோ போ நடந்த எதையும் வெளியில் சொல்லாதே,,, அப்புறம் நான் உனக்கு காசு கொடுத்திட்டேன் அதைக் கொடுத்திடு
காசு என்கிட்டே இல்லைடா....?!
ஏன் இல்லை உங்கப்பா என்ன பாக்கெட் வைச்சு சட்டை போடறதை நிறுத்திட்டாரா என்ன? போனமுறை மாதிரி எடுடா ?! காசு கிடைக்கலைன்னா நீதான் இந்த மாதிரி படம் காமிக்க கூப்பிட்டேன்னு சொல்லிடுவேன்
ஏண்டா இப்படி மிரட்டுறே ? நான் தர்றேன். ம்...
 என்னாச்சு அருண். ரகு என்ன சொல்றான். பெரிய இடத்துப் பையன் அவனைப் பிடிச்சிப்போட்டு இதையெல்லாம் ருசி காட்டிட்டா நிறைய பணம் கிடைக்கும் அவனை வைச்சு குளிர் காயலான்னு பார்த்தேன். இவன் பாதியிலேயே போயிடுவான் போலயே ?! அட நீ வேற,,,,,, பாலைக் குடிக்கிற வரைக்கும்தான் பூனையின் விரதம், அவன் ஏற்கனவே ருசி பார்த்தாச்சு. அவனை வழிக்கு ஈசியா கொண்டு வந்திடலாம் இந்தா இந்த க்ளிப்பிங்ஸ் போட்டோ எல்லாம் அவனுக்கு அனுப்பு..... சொல்றேன்..... கிடைத்த நிம்மதியை அனுபவிக்க முடியவில்லையே என்று ரகு தவித்துக் கொண்டு இருந்தான்.
முன்பைப் போல் மனம் அவன்பேச்சைக் கேட்பதில்லை, அருணிடம் வீராப்பாக பேசி விட்டாலும், மனம் மறைக்க முடியவில்லை, வாசலில் காலிங்பெல் சப்தம் கதவைத்திறந்த ரகு அபர்ணாவை கண்டு திகைத்தான். இன்னைக்கு பேர்வல் அதான் புடவைகட்டினோம். பட் ரொம்ப நேரம் இருக்க முடியலை நான் ரதி ரூமில் டிரஸ்மாத்திக்கிறேன். என்று அவனைக் கடந்து சென்றாள். ரகு தன்னறைக்குச் சென்றான்.
அருண் அனுப்பிய காட்சிகளில் அவன் பார்வை நிலைத்தது. என்ன ரகு போட்டோ எல்லாம் எப்படி ? இதுதான் நாளைக்குப் பார்க்கப்போறது. நான் கூட கொஞ்சம் கோபமாக பேசிட்டேன். இதெல்லாம் இப்போ சகஜம்டா கோவப்படாதே உனக்கு நான் கெடுதல் செய்வேனாடூ நான் யர் கிட்டேயும் சொல்ல மாட்டேன். நாளைக்கு வந்திடு.... தப்பு இல்லைடா சிலருக்கு சந்தர்ப்பம் கிடைக்காது உனக்கு கிடைச்சிருக்கு. எடுத்துப்பியா ? வாய்ப்பைத் தவற விடாதேடா ?!

அருண் ஓதிய சாத்தானின் வேதங்கள் நன்றாக வேலை செய்யத் தொடங்கியது ரகுவிற்கு. வெளியே செல்ல கிளம்பினான். தன்னையும் அறியாமல் பக்கத்து அறையின் மேல் பார்வை ஓடியது. அபர்ணாவின் பின்புறம் தெரிந்தது? அறையின் பாதி இருட்டு வேறு சாவகாசமாய் பட வேகமாய் அவள் புறம் சென்றான். உடைகள் பாதி கலைந்திருந்த நிலையில் தன் கண்முன் கூனி குறுகி நிற்பது தன் தங்கை என்று அறிந்ததும் அவன் தலையில் அடித்தபடியே அழத் தொடங்கினான்.
-----முற்றும்--------

1 comment:

  1. இது நெற்றியில் அடியல்ல.நெஞ்சில் அடி

    ReplyDelete