குண்டாகும் குழந்தைகளே ஜாக்கிரதை!

கொழுகொழு குழந்தைகள் எப்போதும் கொஞ்சலுக்கு உரியவர்கள். கொழுகொழு குழந்தைகள்தான் ஆரோக்கியமானவர்கள் என்கிற எண்ணம் பலருக்கும் இன்றும் இருக்கிறது. குழந்தைப் பருவத்தில் அவர்களைக் கொஞ்சி, செல்லப் பெயர்கள் வைத்து ஆராதிக்கிற பெற்றோர், குழந்தைகள் 10 வயதைக் கடக்கும்போது கலங்கிப் போகிறார்கள்.

பள்ளி விட்டு  வீட்டுக்கு சந்தோஷமாக வரவேண்டிய குழந்தை... கண்ணீர் மல்க, கவலையோடு, மனஉளைச்சலுடன் வீடு திரும்புவதையும், தன்னை எல்லோரும்குண்டு கத்தரிக்கா, தர்பூசணி, நீர்யானைஎன பல பட்டப் பெயர்கள் வைத்து கூப்பிடுவதையும் சொல்லி அழும். பள்ளி செல்ல அடம்பிடிக்கும். அது, பெற்றோராகிய நீங்கள் துடிதுடித்துப் போவது நீங்கள் மட்டுமே உணரக்கூடிய மாபெரும் வலி.

சரி! இதை ஆரம்பத்திலேயே பெற்றோர் எப்படி தடுத்து நிறுத்த முடியும்? அதற்கு என்ன வழிகளை பின்பற்ற வேண்டும்? இதற்காக விஞ்ஞான கூடத்திற்கோ அல்லது டாக்டரிடமோ சென்று BMI (Body Mass Index) பார்த்து, நம்பர்களை கூட்டிக் கழிக்க வேண்டிய அவசியமெல்லாம் தேவையில்லை. குழந்தைகளைக் கூர்ந்து கண்காணிப்பதே முக்கியம்.

உங்கள் குழந்தை...
பம்பரம்  போல சுழன்று, துறுதுறுவெனசுறுசுறுப்பாக இல்லையா?
 சிறிய தூரத்தைக்கூட ஓட முடியாமல் அவதிப்படுகிறதா?
 நடந்து வரும் போது உருண்டு வருவது போல உள்ளதா?
  துள்ளி விளையாடி, குதிக்க முடியவில்லையா?
இதையெல்லாம் தினமும் கவனித்த பிறகாவது முதலில் கூறியபடிசெல்லக்குட்டி, ஆப்பிள், ஜாங்கிரி, பூந்தி, என் கொழுகொழு செல்லமேஎனக் கொஞ்சு வதை நிறுத்துங்கள். உங்கள் குழந்தை குண்டாகிக்கொண்டு  டைப் 2 நீரிழிவை யும் ஒபிசிட்டி எனப்படுகிற பருமன் பிரச்னையையும் ஏற்றுக் கொள்ளும் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கிவிட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். குழந்தைப் பருவத்தில் உடல் எடையை குறைப்பது சற்று சுலபம். வயதான பிறகு அதிக எடையைக் குறைக்க என்னவெல்லாமோ செய்து, தினசரி வாழ்க்கையை ஒரு யுத்த களமாக ஆக்கிக்கொள்ளும் அநேக நண்பர்களை, குடும்பத்தினரை கண்கூடாகக் காண்கிறோம்.

ஆரம்பத்திலேயே (OBESITY) குண்டாவதை தடுத்து நிறுத்த ஒருசில நல்ல யோசனைகள் இதோ...

1. குழந்தைகளின் உடல் உழைப்புக்கு (Physical Activity) முக்கியத்துவம் அளியுங்கள். தினமும் சில மணி நேரமாவது அவர்கள் ஓடி, ஆடி விளையாடுகிறார்களா அல்லது ஏதாவது உடல் உழைப்பில் ஈடுபடுகிறார்களா என்பதை கவனித்துக்கொண்டே இருங்கள்.

2. குடும்பத்துக்காகச் சமைக்கும்போது, குழந்தைகள் உடல்நலத்தை முதலில் மனதில் வைத்து அவர்களின் உடல் தேவை, சக்தியின் தேவை, வளர்ச்சி யின் தேவை, உழைப்பின் தேவை, வயதின் தேவை என பாகுபடுத்தி, அதன்பின் சமைத்து, குழந்தைகளுக்கு பரிமாற வேண்டியது மிகமிக முக்கிய மானதாகும். மேலே  கூறப்பட்ட தேவைகளுக்கும் அதிகமாக (Over - eating) குழந்தைகள் சாப்பிடும்போது... எவ்வளவு ருசித்து குழந்தை சாப்பிடு கிறது என அன்பாய் பூரித்து, தினமும் அளவுக்கு அதிகமாக உணவு, இனிப்பு மற்றும் தின்பண்ட வகைகளைக் கொடுக்காமல் அளவோடு சாப்பிட கற்றுக் கொடுத்து, அவர்கள் அதை மீறும் சமயங்களில் கண்டிக்க வேண்டியதும் அவசியமாகிறது.

3.  நல்ல சுவையான உணவு வகைகளை அதிகம் சமைத்து, அதை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வேண்டி, குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சூடாக்கி சாப்பிடுவதை தயவு செய்து அறவே நிறுத்துங்கள். மேலும் தேவைக்கு அதிகமாக தின்பண்டங்கள் அல்லது நொறுக்குத் தீனி வகைகளை வீட்டில் வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒருமுறை சேமித்து வைப்பதை இன்றோடு விட்டுவிடுங்கள்குழந்தைகளுக்கு சரிவிகித உணவின் (Balanced Diet) முக்கியத்துவத்தை அடிக்கடி விளக்கி, உண்மையை உணரச் செய்யுங்கள்.

4. குழந்தைகள் படிக்கும்போதோ, வீட்டு வேலைகள் செய்யும்போதோ, ஓடியாடி விளையாடி விட்டு அல்லது உடற்பயிற்சி செய்துவிட்டு களைப்படையும் போதே அவர்களுக்கு நல்ல ஓய்வு தேவை. குழந்தைகளின் நல்ல ஓய்வுக்கு உற்ற நண்பன்நல்ல தூக்கமே’. அப்படி ஓய்வு எடுத்து தூங்காத குழந்தைகள், தங்களின் வயிறை ஒரு குப்பைத் தொட்டியாக்கி பலதரப்பட்ட உணவு வகைகள், இனிப்புகள், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகளுக்கு அடிமையாகி விடுவார்கள்.


5. சிறு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் டி.விமற்றும் கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் செலவு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டியது நமது கடமையாகும். அதன் திரையில் இருந்து வரும் நீல ஒளியின் (Blue light) தாக்கம் குழந்தைகளின் உடலுக்கு உகந்ததே அல்ல. அதை இந்த இளம் வயதில் அவர்களால் தாங்க முடியாது. இதனால் குழந்தைகளின் உடலுக்கு தீமையே உண்டாகும். இதன் மறுபக்கம் என்னவெனில் அதன் காரணமாக குழந்தைகளுக்கு அதிக பசி (Increase in appetite) எடுத்து, தேவைக்கு அதிகமான உணவு உட்செல்ல ஏதுவாகிறது.

No comments:

Post a Comment