மதுவை ஒழிக்க பாரதி கண்ட புதுமை பெண்களாக மாறி களம் காண்பார்களா தமிழக பெண்கள் ? - .மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம். ஆங்கிலேய அரசை எதிர்த்து புதுவையிலே தங்கி சுதந்திரத்திற்கு உயிரூட்டிய பாரதியார் கண்டகனவு புதுமை பெண்களாக மாறி ,பாண்டிச்சேரியில் உள்ள கவுண்டம்பாளை யம் வழுதாவூர் சாலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக,மக்கள் நடமாட்டமும், போக்குவரத்து நெரிசலும் நிறைந்த இப்பகுதியில் உள்ள சாராயக்கடைக்குள் புகுந்த பெண்கள், அங்கிருந்த சாராய பேரல்கள், பாட்டில்களை தூக்கி வீசி உடைத்தனர். சாராயத்தை ரோட்டில் கொட்டி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டது என்பது மிகவும் பாராட்டுக்குரியது. சாராயக்கடையால் அடிக்கடி விபத்துகளும், பொது மக்களுக்கு இடையூறும்,சொல்லொணாத துயரமும் ஏற்படுவதால் இந்த கடையை மூடக்கோரியும், கடையை மீண்டும் ஏலம் விட கூடாது என்பதை வலியுறுத்தியும் பெண்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். ஆனால்,செவிடன் காதில் ஊதிய சங்காக நினைத்து புதுவை அரசு அந்த சாராயக் கடையை அகற்றாததால், வீறுகொண்டு எழுந்த பெண்கள் கூட்டம் சாராய கடையை அகற்றும் போராட்டத்தில் குதித்தனர். அறப்போராட்டங்கள் நடத்தியே பழக்கப்பட்ட பெண்கள் முறத்தால் புலியை அடித்து விரட்டிய தமிழ் பெண்ணாக கோபமுற்று ,சாராயக் கடைக்குள் புகுந்த பெண்கள், சோடா, குளிர்பான பாட்டில்களை கீழே தூக்கி போட்டு உடைத்தனர். கேஸ் அடைக்கப்பட்டு இருந்ததால் பாட்டில்கள் வெடித்து சிதறின. சாராய பேரல்களை அப்படியே தூக்கி வீசி எறிந்ததால் சாராயம் கீழே கொட்டி ஆறு போல் ஓடியது. சாராய கேன்களை ரோட்டுக்கு கொண்டு வந்து சாராயத்தை கொட்டியும் மறியலில் ஈடுபட்ட னர். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல பாண்டிச்சேரி பெண்களிடம் உருவாகியுள்ள இந்த மாற்றம்,வேகம்,எழுச்சி தமிழகத்திலும் விரைவில் ஏற்படும்.அப்படி தொடர்ந்தால் தமிழக அரசின் டாஸ்மாக் என்னும் மது பீடை யை துரத்தினால் நம் தமிழ் நாட்டின் உயர்வை யாராலும் ஆட்டவோ. அசைக்கவோ முடியாது. பெரும்பாலும் ,அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் களம் காண்பார்களா தமிழக பெண்கள் ?
மதுவை ஒழிக்க பாரதி கண்ட புதுமை பெண்களாக மாறி களம் காண்பார்களா தமிழக பெண்கள் ? - .மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம்.
ReplyDeleteஆங்கிலேய அரசை எதிர்த்து புதுவையிலே தங்கி சுதந்திரத்திற்கு உயிரூட்டிய பாரதியார் கண்டகனவு புதுமை பெண்களாக மாறி ,பாண்டிச்சேரியில் உள்ள கவுண்டம்பாளை யம் வழுதாவூர் சாலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக,மக்கள் நடமாட்டமும், போக்குவரத்து நெரிசலும் நிறைந்த இப்பகுதியில் உள்ள சாராயக்கடைக்குள் புகுந்த பெண்கள், அங்கிருந்த சாராய பேரல்கள், பாட்டில்களை தூக்கி வீசி உடைத்தனர். சாராயத்தை ரோட்டில் கொட்டி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டது என்பது மிகவும் பாராட்டுக்குரியது. சாராயக்கடையால் அடிக்கடி விபத்துகளும், பொது மக்களுக்கு இடையூறும்,சொல்லொணாத துயரமும் ஏற்படுவதால் இந்த கடையை மூடக்கோரியும், கடையை மீண்டும் ஏலம் விட கூடாது என்பதை வலியுறுத்தியும் பெண்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். ஆனால்,செவிடன் காதில் ஊதிய சங்காக நினைத்து புதுவை அரசு அந்த சாராயக் கடையை அகற்றாததால், வீறுகொண்டு எழுந்த பெண்கள் கூட்டம் சாராய கடையை அகற்றும் போராட்டத்தில் குதித்தனர். அறப்போராட்டங்கள் நடத்தியே பழக்கப்பட்ட பெண்கள் முறத்தால் புலியை அடித்து விரட்டிய தமிழ் பெண்ணாக கோபமுற்று ,சாராயக் கடைக்குள் புகுந்த பெண்கள், சோடா, குளிர்பான பாட்டில்களை கீழே தூக்கி போட்டு உடைத்தனர். கேஸ் அடைக்கப்பட்டு இருந்ததால் பாட்டில்கள் வெடித்து சிதறின. சாராய பேரல்களை அப்படியே தூக்கி வீசி எறிந்ததால் சாராயம் கீழே கொட்டி ஆறு போல் ஓடியது. சாராய கேன்களை ரோட்டுக்கு கொண்டு வந்து சாராயத்தை கொட்டியும் மறியலில் ஈடுபட்ட னர். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல பாண்டிச்சேரி பெண்களிடம் உருவாகியுள்ள இந்த மாற்றம்,வேகம்,எழுச்சி தமிழகத்திலும் விரைவில் ஏற்படும்.அப்படி தொடர்ந்தால் தமிழக அரசின் டாஸ்மாக் என்னும் மது பீடை யை துரத்தினால் நம் தமிழ் நாட்டின் உயர்வை யாராலும் ஆட்டவோ. அசைக்கவோ முடியாது. பெரும்பாலும் ,அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் களம் காண்பார்களா தமிழக பெண்கள் ?