செம்மொழி - குறும் படம் & புதிய திரைப்படங்கள்


செம்மொழி - குறும் படம்

அனைத்து தமிழர்களும் பார்க்கவேண்டியதும், பகிர வேண்டியதுமான காணொளி. இந்த படத்தை உருவாக்கிய குழுவினருக்கு எமது பாராட்டுகளும் நன்றிகளும்.


 இவ்வாரம்  வெளியான புதிய திரைப்படங்கள் 

படம்: கர்ணன்

நடிகர்கள்: தனுஷ், ராஜீஷா விஜயன், யோகி பாபு, லால், நட்டி நடராஜன், கெளரி கிஷான் , ஜி எம் குமார்

இயக்கம்: மாரி செல்வராஜ்

விமர்சனம் சுருக்கம்: சாதிய வேறுபாடுகளும் ,மோதல்களும் இரத்த வெள்ளமும் நிறைந்த படம்.உரிமைக்காகப் வாளேந்திய ஒரு நாயகன் , இறந்துபோகும் தங்கை, காதலுக்கு ஏங்கும் நாயகி, கடமை தவறாத போலீஸ்  அவற்றையும் கடந்து , அசுர பலத்துடன் போராடும் ஒரு நாயகனின் கதை.

 வெளியீடு : :09 ஏப்ர.  2021

  மதிப்பீடு: 3.5/5

📽📽📽📽📽📽📽 

படம்: மண்டேலா

 நடிகர்கள்: யோகி பாபு, சங்கிலி முருகன், ஜி.எம். சுந்தர், ஷீலா

இயக்கம்: மடோன்னே அஸ்வின்

விமர்சனம் சுருக்கம்: உள்ளாட்சித் தேர்தலில், பதவியைப் பிடிப்பதற்காக இரண்டு ஜாதியினர் மோதிக்கொள்கிறார்கள். வாக்குகள் இரு தரப்புக்கும் இடையில் சரிசமமாகப் பிரியும் நிலையில், வெற்றிபெறுவதற்கு ஒரு ஓட்டு தேவைப்படுகிறது.

ஆகவே, அந்த ஊரில் உள்ள முடிதிருத்துபவரான யோகிபாபுவின் வாக்கு மிக முக்கியமானதாக உருவெடுக்கிறது. அவரது வாக்கைப் பெற, இரு தரப்பும் இலவசங்களை அள்ளிக்கொடுக்கிறார்கள். யோகிபாபு யாருக்கு வாக்களித்தார் என்பது மீதிக் கதை.

வெளியீடு : 04 ஏப்ர.  2021

  மதிப்பீடு: 3.5/5

 📽📽📽📽📽📽📽 

படம்: சுல்தான்   

நடிகர்கள்:  கார்த்தி, ராஷ்மிகா மந்தண்ணா,யோகி பாபு, நெப்போலியன், லால், சதீஷ், ஹரீஷ் பெரடி, ராமச்சந்திர ராஜு, நவாப் ஷா, சிங்கம்புலி, சென்றாயன், எம் எஸ் பாஸ்கர், மயில்சாமி, பொன்வண்ணன்.

விமர்சனம் சுருக்கம்:தெலுங்கின் தமிழ் மொழிபெயர்ப்பு. நகைச்சுவையற்ற யோகிபாபு. தாதாவுக்கு 100 ற்கு மேற்பட்ட அடியாட்கள்.பல படக்கதைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்து சேர்த்த கலவை.தந்தை தாதா இறக்க அவரின் அடியாட்களை காப்பாற்ற, தந்தையின் பொறுப்பை நிறைவேற்ற அடுத்தகிராமத்து வில்லனுடன் ஏற்படும் மோதலில் ஏற்படும் காதலும் நிறைவேறுவதே கதை.

இயக்கம்: பாக்கியராஜ் கண்ணன்

வெளியீடு: 02 ஏப்ர.  2021

 மதிப்பீடு: 2.5/5

தொகுப்பு:செ.மனுவேந்தன் 


No comments:

Post a Comment