கமல்ஹாசன்
நடித்துள்ள
பாபநாசம்
திரைப்படம்
ஜூலை
17-ல்
வெளியாகிறது.
மோகன்லால்,
மீனா
உள்ளிட்ட
பலர்
நடிக்க
ஜீத்து
ஜோசப்
இயக்கத்தில்
வெளியான
மலையாள
படம்
'த்ரிஷ்யம்'.
விமர்சகர்கள்
மத்தியிலும்,
வசூலிலும்
பெரும்
வரவேற்பைப்
பெற்றது.
இப்படத்தின்
தமிழ்,
தெலுங்கு,
கன்னடம்,
இந்தி
என
அனைத்து
மொழி
ரீமேக்
உரிமையையும்
ராஜ்குமார்
தியேட்டர்ஸ்
நிறுவனம்
பெற்றது.
தெலுங்கு,
கன்னடம்
ஆகிய
மொழிகளில்
இப்படம்
ரீமேக்காகி
விட்டது.
தமிழில்
கமல்,
கெளதமி,
சார்லி,
கலாபவன்
மணி
உள்ளிட்ட
பலர்
நடிக்க
ஜீத்து
ஜோசப்
இயக்கி
இருக்கிறார்.
'பாபநாசம்'
என
பெயரிடப்பட்ட
இப்படத்துக்கு
ஜிப்ரான்
இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம்
அடுத்த
மாதம்
17-ம்
தேதி
திரைக்கு
வரும்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை
இறுதியில்
அஜய்
தேவ்கன்
நடிப்பில்
தயாராகியுள்ள
இப்படத்தின்
இந்தி
ரீமேக்
ரிலீஸாகிறது
என்பது
குறிப்பிடத்தக்கது.
ஜூலை
17-ஐ
ஒட்டி
ரம்ஜான்
விடுமுறை
வருவதால்
படத்தை
அந்த
தேதியில்
வெளியிடுவது
சரியாக
இருக்கும்
என
முடிவு
செய்யப்பட்டதாக
தயாரிப்பாளர்
தரப்பு
ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம்
தெரிவித்துள்ளது.
மே
மாதத்தில்
'உத்தம
வில்லன்'
வெளியானது,
தற்போது
ஜூலை
17-ல்
'பாபநாசம்'
வெளியாகவுள்ளது.
அதனைத்
தொடர்ந்து
'விஸ்வரூபம்
2' படமும்
வெளியாகும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment