மீன், மீன், மீன் ...

surgeon fish

அசைவ உணவுகளில் மீனுக்கு ஒரு சிறந்த இடமுண்டு. பொதுவாக உணவுக்கு பயன்படும் மீன்களை அறிந்திருக்கும் நாம் மிகவும் ஆபத்தான மீன்களைப்பற்றி இங்கு பார்க்கலாம். விஞ்ஞானிகள் கருத்துப்படி சுமார் 1,200 வகையான மீன் விஷத்தன்மையுள்ளதாகவும், இவற்றால் வருடத்திற்கு சுமார் 50,000 மனிதர்கள் பாதிக்கப் படுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இவ்விஷமீன்களால் ஒரு சில நன்மைகளும் இருப்பதாகவும் அவ்விஷத்தை கொண்டு பல்வேறு மருந்துகள் தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கண்ணை கவரும் வண்ணத்திலான கோடுகளை உடைய இந்த மீன் சர்ஜியான் மீன் (surgeon fish) என்று அழைக்கப்படும் இவ்வகை மீன் இந்தோ-பசிபிக் கடலில் வாழ்கின்றன். இம்மீன்களை எச்சரிக்கையுடன் கையாளவில்லையானால் அதன் வால் பகுதியில் அமைந்துள்ள கொடுக்கின் மூலம் விஷத்தை பாய்ச்சிவிடும்.

Moray eel

மொராய் ஈல் (Moray eel)எனப்படும் ஒருவகை விலாங்கு மீன் ஹவாய் தீவுகளிலுள்ள கோனா எனப்படும் நீர்நிலைகளில் வசிக்கின்றன. மற்ற மீன்களைப்போலன்றி இவற்றிற்கு ரம்பம் போன்ற கூர்மையான இரண்டடுக்கு பற்கள் இருக்கின்றன. ஒன்று வாய்ப்பகுதியிலும் மற்றொன்று இதன் தொண்டையின் உட்புறத்திலும் இருக்கின்றன.


Oyster Toad fish

 Oyster Toad fish எனப்படும் இவ்வகை மீன்கள் நீரின் அடிப்பாகத்தில் பாசிச்செடிகளின் நிறத்தோடு, வலிமையான தாடைகளையும் பற்களையும் கொண்ட இம்மீன் சிப்பிகள், நண்டுகள், இறால், மீன், மீன் மற்றும் பிற கடல் உயிரினங்களை ஒரே அமுக்கில் நசுக்கி ஸ்வாகா செய்து விடுகிறது.


sea-anemone

கடல் அனிமோன் எனப்படும் இது மீனினம் அல்ல கடலுக்கு அடியில் வளரும் ஒரு வகை தாவரமாகும். பார்ப்பதற்கு அதன் பெயருக்கேற்ப அழகாக தோன்றினாலும், இது தன்னை கடந்து செல்லும் உயிரினங்கள் மீது ஒரு வகை அமிலத்தை உமிழ்ந்து அவற்றின் நரம்புகளை செய்லிலக்கச்செய்து அவற்றை ஈர்த்து உணவாக்கிக்கொள்கின்றன.

needlefish

ஊசிமுனை மீன்கள் (Needlefish) பொதுவாக வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல கடல் மேற்பரப்பில் அருகே கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன. இம்மீன்கள் அதி வேகத்தில் நீரின் மேற்ப்பரப்புக்கு வரக்கூடியவை. அப்படி அவை மேற்பரப்பில் பறக்க ஆரம்பிக்கும் போது மிகவும் ஆபத்தானவையாக மாறுகின்றன. இவை அரிதாகவே நடந்தாலும் அவற்றின் கூர்மையான முனைகள் மனிதர்களுக்கு தீவிரமான காயத்தையும் சில நேரங்களில் மரணத்தையும் உண்டுபண்ணுகின்றன. முக்கியமாக இரவில் மீன் பிடிக்கும் மீன்வர்களுக்கு இது பெரிய சவாலகவே இருக்கிறது. விளக்கு வெளிச்சத்திற்கு இவை கவரப்படுவதும் ஒரு காரணமாகும்.

நன்றி: நேஷனல் ஜியாகரபிக்

No comments:

Post a Comment