- முனைவர் பேராசிரியர் மங்கள முருகேசன்
தமிழ்நாட்டில் பிள்ளையார், கணபதி, விநாயகர் என்றும் கணபதி வழிபாடு வாதாபியிலிருந்து பல்லவர் காலத்தில் பல்லவமன்னன் நரசிம்ம வர்மனின் படைத்தளபதியாக விளங் கிய, சிறுத்தொண்டர் என்று பின்னால் ஆன மத நாயன்மார்களில் ஒருவரான, பரஞ்சோதி சாளுக்கிய மன்னன் 2ஆம் புலிகேசி-யை வென்று வெற்றிப்பரிசாக வாதாபியிலிருந்து விநாயகர் சிலையைக் கொண்டு வந்தார். அதன் பின்னரே தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு உருவாயிற்று என்று ஒரு புருடா - பொய்க்கதை நீண்ட காலமாகப் பரப்பப்பட்டு அதுவே உண்மை என்று பலரும் நம்புகின்றனர். நல்ல வேளையாகத் தமிழ்நாட்டில் சங்க காலத்தில் பிள்ளையார் வழிபாடு இல்லை என்பதை அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆரியர்கள் தமிழ் நாட்டில் புகுத்தியவற்றில் கணபதிக் கடவுள் வழிபாடும் ஒன்று.
நம் கர்நாடக இசைப்பாடகர்கள் - சொல்லி வைத்தாற்போல், பாட்டுத் தொடங்கும் முன் கணபதியை அதா வது முதற் கணபதியை வணங்குவதாக, கர்நாடக இசை மூவர்களில் ஒருவரான - தமிழ் இசை மூவர்களில் ஒருவரல்ல - முத்துச்சாமி தீட்சிதர் பாடிய வாதாபி கணபதி, பஜேம், பஜேம் என்னும் பாடலைப் பாடுகிறார்கள்.
தமிழகத்தில் திருச்செங்காட்டாங் குடிக் கணபதி கோயிலே தமிழகத் திலேயே முதல் முதலாக கட்டிய விநாயகர் கோவில் என்னும் கருத்து நிலவி வருகிறது. திருச்செங்காட்டாங் குடிக்குக் கணபதீச்சுரம் என்றும் பெயரும் இருக்கிறது.
நரசிம்ம வர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி வாதாபிப்போருக்குத் தலைமையேற்றுச் சென்று இரண்டாம் புலிகேசியைப் போரில்வென்று வாதா பியிலிருந்து இந்த விநாயகர் உரு வத்தைத் தமிழகத்திற்கு வித்தியாசமான உருவத்தைத் தம் வெற்றிப் பரிசாக நிறு வினார் என்று எந்தவிதக் கல்வெட்டு, பட்டய ஆதாரமுமில்லாமல், அடிப் படையில்லாமல் பரவி விட்டது.
வரலாற்று அறிஞர்கள் இதனை ஆய்வு செய்து வாதாபியிலிருந்து வந்த இறக்குமதிச் சரக்கு அன்று; இந்த விநாயகர் வழிபாடு என்னும், இக் கருத்துத் தவறு என்று மெய்ப்பித்தும் எப்படியோ உலவுகிறது!
பெரிய புராணத்தைப் பாடியவர் சேக்கிழார். அவர் நாயன்மார்கள் ஆகிய சிவனடியார்களைப் பாடியிருக்கிறார். அவர்களுக்கு நாயன்மார்கள் என்று பெயர். அவரால் பாடப்பெற்ற 63 நாயன்மார்களுள் சிறுத்தொண்டராக உயர்த்தப் பெற்ற பரஞ்சோதியும் ஒருவர். பெரியபுராணம் சிறப்பிக்கிறது பரஞ் சோதியை.
பெரிய புராணத்தில் சேக்கிழார் வாதாபியிலிருந்து கொண்டு வந்த பரிசுகள் இன்ன, இன்ன என்று பட்டிய லிடுகிறார். அந்தப் பட்டியலில் வாதாபி யிலிருந்து கொண்டு வந்த பரிசு என்றும் வாதாபி கணபதி இடம் பெறவில்லை. அதுமட்டுமல்ல பெரியபுராணத்தில் வாதாபி சிலையைப் பரஞ்சோதி அலைஸ் சிவத்தொண்டர் கொண்டு வந்தததாகக் கூறவில்லை.
பெரிய புராணத்தில் சேக்கிழார் வாதாபியிலிருந்து கொண்டு வந்த பரிசுகள் இன்ன, இன்ன என்று பட்டிய லிடுகிறார். அந்தப் பட்டியலில் வாதாபி யிலிருந்து கொண்டு வந்த பரிசு என்றும் வாதாபி கணபதி இடம் பெறவில்லை. அதுமட்டுமல்ல பெரியபுராணத்தில் வாதாபி சிலையைப் பரஞ்சோதி அலைஸ் சிவத்தொண்டர் கொண்டு வந்தததாகக் கூறவில்லை.
பெரிய புராணத்தில் தான் இல்லை, கல்வெட்டு, பட்டயம் ஆகிய இவற்றில் ஏதேனும் இருக்கிறதா? துடைத்துப் பார்த்தாலும் சரி, தோண்டிப் பார்த் தாலும் சரி ஆதாரம் எதுவுமில்லை. தமிழகத்தில் இதுவரை கிடைத்த எந்தக் கல்வெட்டிலும், கணபதீச்சுரம் கல்வெட் டிலும் இல்லை. தோல்வியடைந்தானே புலிகேசி அவனுடைய கல்வெட்டு அவனுடைய சாளுக்கிய மரபுக் கல்வெட்டு எதிலும் இல்லவே இல்லை.
கி.பி.ஏழாம் நூற்றாண்டுக் காலத்துத் தேவார மூவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் பாடலிலோ, அப்பர் பாடலிலோ வாதாபி கணபதி பற்றிக் கூறவில்லை.
சேக்கிழார்தான் என்ன கூறுகிறார்? கணபதி கோயிலை வாதாபியிலிருந்து கொண்டு வந்து பரஞ்சோதி கட்டினார் என்றாவது கூறினாரா? இல்லையே!
சேக்கிழாரின் பாடல் வரிகளில் பொடி நுகரும் சிறுத்தொண்டர்க்கருள் செய்யும் பொருட்டாகக் கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச்சுரத்தானே அதாவது சிவத் தொண்டருக்கு அருள் புரிய கணபதீச்சுரத்தில் விநாயகர் வீற்றிருந்தார் என்று கூறுகிறார். இதை வைத்துக் கொண்டு எப்படிக் கூற முடியும்?
பரஞ்சோதி போரிடப் போனவர் பரிசுப்பொருட்களைக் கொண்டு வந்து அரசரிடம் ஒப்படைப்பார். அப்படி ஒப்படைக்கிறவர் மற்றப்பரிசுப் பொருட்களையெல்லாம் மன்னரிடம் கொடுத்துவிட்டு, கணபதி சிலையை மட்டும் தான் வைத்துக்கொண்டு தம் சொந்த ஊரில் வைத்துக்கோயில் கட்டினார் என்பது பொருத்தமாகவா இருக்கிறது? இல்லையே!
திருச்செங்காட்டாங் குடியில் வாதாபி கணபதி கோயில் சிறப்பாக எழுப்பப்பட்டிருக்கிறது. உயர்வானது என்று கூறலாமா என்று பார்த்தால் அதுவும் சரியில்லை. திருச்செங்காட் டாங்குடியில் மங்கள கணபதி, சித்தி கணபதி, சூரிய கணபதி, சம்பந்த கணபதி ஸ்தம்ப முகூர்த்த கணபதி என ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் 23-ஆம்! 23 கணபதிகள் வாதாபி கணபதிக் கென்று உயர்வோ, சிறப்போ இல் லையே.
சரி, இந்த விநாயகர் உருவம்தான் சிறப்பு என்று ஏதேனும் சிறப்பு வழிபாடு உண்டா? அதுவும் இல்லை. வழக்கமாகக் கோயில்களில் வழிபாடு நடத்துபவர்கள், முதலில் விநாயகர், முருகன் முதலியோருக்குப் பூசையை முடித்து இறுதியாகக் கருவறையில் உள்ள ஈசனுக்கு நடத்துவர். திருச் செங்காட்டாங்குடியில் அது கூட இல்லை சிவனுக்கு வழிபாடு நிகழ்த்திய பின்னர் தான் விநாயகருக்குப் பூசை.
தமிழ்நாட்டில் தான் இப்படி என்றால் வாதாபியில் நிலைமை எப்படி?
விநாயகர் வழிபாட்டில் சிறந்தோங் கிய வாதாபி நகரில் விநாயகர் வழி பாட்டில் சிறப்பு மிக்க உருவங்கள் இருக்கலாம் அல்லவா?
அந்தக் கண்ணோட்டத்தில் வாதாபியிலும் விநாயகர் நிலை எப்படி என்பதைக் கண்ணுறுகையில் சிறப்பான கணபதி வணக்கத்திற்குரிய சான்றுகள் உள்ளனவா எனில், கணபதி சிலை யேதும் வாதாபியில் உயர்வாகவோ, சிறப்பாகவோ வைத்து எண்ணப் பெறவில்லை. ஒரே ஒரு விநாயகர் உருவம் மட்டும் எல்லா ஊர்களிலும் ஒரு விநாயகர் உருவம் இருப்பது போல் அங்கும் இருக்கிறது.
வாதாபி எனும் அரக்கனைக் கொல்ல உதவியவர் வாதாபி கணபதி என வால்மீகி இராமாயணம் கூறுகிறது. கஜமுக அரக்கனைக் கொன்றதால் விநாயகருக்கு எப்படி கஜானன் என்று பெயர் வந்ததோ அதுபோல் வாதாபி என்ற அரக்கனைக் கொன்றவர் வாதாபி கணபதி எனப்பட்டார் எனலாம்.
எனவே கணபதியைச் சிறுத் தொண்டர் கொண்டு வந்து நிறுவிய பிறகே விநாயகர் வழிபாடு என்பதில் முடிகிறது உண்மை.
எனவே கணபதியைச் சிறுத் தொண்டர் கொண்டு வந்து நிறுவிய பிறகே விநாயகர் வழிபாடு என்பதில் முடிகிறது உண்மை.
இதில் ஒரு வேடிக்கை திருச்செங் காட்டாங்குடிக் கணபதிக்கும், சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள கணபதிக்கும் யானைத் தலையெல்லாம் கிடையாது. மிருக முகமே கிடையாது; மனித முகம்தான்.
கி.பி. ஆறாம் நூற்றாண்டு அல்லது அய்ந்தாம் நூற்றாண்டுக்கு முன் எந்த இலக்கியத்திலும் விநாயகர் பற்றிய குறிப்பு இல்லை. நாம் காணுவன எல் லாம் அதற்குப் பிற்பட்டவை. சிற்ப அமைதியிலும் ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட விநாயகர் சிலை ஏதும் இல்லை.
தமிழகத்தில் சங்க காலத்திற்குப் பின் சங்க காலத்தில் பத்து விழுக்காடு அளவு இருந்த ஆரியம் பல்கிப் பெருகி, வடக் கும், தெற்கும் பல் வகையில் இணைந் தன. சேது இமாச்சலம் எனச் சேது தென் எல்லையாகவும், இமயம் வட எல்லையுமாயின. தீபாவளி, நவராத்திரி, விநாயக சதுர்த்தி, ராம நவமி கிருஷ்ண ஜெயந்தி இறக்குமதியாயிற்று.
குணம், குறி, உருவம் அற்ற பரம் பொருள் என்று இயற்கைக்கு உருவம் கொடுக்காத தமிழர் மத்தியில் வெவ் வேறு வடிவங்களைக் கற்பித்த ஆரியர் சிவன், திருமால், சக்தி, கணபதி, முருகன் சூரியன் என்று கூறி ஷண்மத வழிபாடு என்று பெயரிட்டு வழிபடும் நெறி முறைகளை வகுத்தனர்.
இந்த அறுவகைப் பிரிவில் பிரம்மா, திருமாலின் உந்தியில் உதித்தவராத லால், படைப்புக் கடவுள் என்று பிரம்மாவிற்கு என படைப்பு டிபார்ட் மெண்ட் ஒதுக்கிய போதிலும், அது சமயத்தில் இடமில்லை.
அறு சமய வழிபாடு வடநாட்டில் தோன்றித் தென்னாட்டில் பரவியது. தமிழர்களின் கடவுளான இந்திரன், வருணன் வடநாட்டு வழிபாட்டு முறையில் அறு சமயப் பிரிவில் இடம் பெறவில்லை. சங்கரர் அறு சமய நிறுவனர் எனும் பொருளில் ஷண்மத ஸ்தாபனாச்சாரியர் என்றனர். கி.பி.5ஆம் நூற்றாண்டிற்குப் பின் விநாயகர் தேவ கணங்களின் தலைவனாக உயர்த்தப் பெற்றார். ஏனென்றால் கி.பி. அய்ந்தாம் நூற்றாண்டில் யாக்ஞவல்கியர் தாம் இயற்றிய நீதி நூலில் விநாயகரைப் பிரம்மாவாலும், ருத்திரனாலும் நியமிக்கப் பெற்ற கணநாதர் எனக் கூறுகிறார். இப்படிப் பரவியதுதான் கணபதி வழிபாடு. வாதாபிக் கணபதிக் கும் இதற்கும் சம்பந்தமில்லை.
0 comments:
Post a Comment