ஒட்டகச்சிவிங்கியின் சராசரி எடை சுமார் 1400 கிலோவாகும். அதாவது கிட்டத்தட்ட ஒரு மினி லாரியின் எடை !
பூனைகளின் கூட்டம் க்ளவுடர் (clowder) என்றும்; ஆண் பூனைகள டாம் (tom) என்றும்; பெண் பூனைகள் மோல்லி அல்லது க்வீன் (molly or queen) என்றும்; பூனைக்குட்டிகள் கிட்டன்கள் (kittens) என்றும் அழைக்கப்படுகினறன.
யானைக்கு இயற்கை எதிரிகள் கிடையாது. சிங்கங்கள் அவ்வப்போது பலவீனமான, சிறிய யானைகளை தாக்கும். அதே வேளையில் அவற்றிற்கு மனிதனே மிகப்பெரிய எதிரியாக இருக்கின்றான். யானையின் தந்தம் போன்ற பொருட்களுக்காக அதிகமான யானைகள் மனிதர்களால் கொல்லப்படுகின்றன.
சிங்கத்தையும் , புலியையும் இணைத்து உருவாக்கப்படும் கலப்பினங்களுக்கு (tigons and ligers) டைகன்ஸ் மற்றும் லைகர்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.
விலங்கினங்களில் புத்திசாலியானதாக கொரில்லாகள் கருதப்படுகின்றன. அவை பலவிதமான கருவிகள் உபயோகிப்பதிலும், சைகைகள் செய்வதிலும் சிறந்து விளங்குகின்றனவாம். மேலும், போக்குவரத்து குறியீடுகளை கண்டுகொள்வதிலும் சிறந்து விளங்குகின்றவாம் !
No comments:
Post a Comment