தமிழ்நாடு உருவான வரலாறு
மெட்ராஸ் மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டக் கோரி உண்ணா விரதமிருந்து உயிர் நீத்தவர். க.பெ. சங்கரலிங்கனார்.

இதையடுத்து 1956 – செப்டம்பர் ஆறாம் தேதி இந்த மசோதா பாராளுமன்றத்தில் சட்டமானது. 1956 நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து இது அமலுக்கு வரும் என அறிவிக்கபட்டது.
நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டையும் திருவிதாங்கூர் – கொச்சி சமஸ்தானத்திலிருந்து பிரிக்கப்பட்டு தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. இவ்வாறு தமிழ்மொழி பேசும் மாநிலமாக 1956 நவம்பர் ஒன்றாம் தேதி ‘புதிய மெட்ராஸ் மாநிலம்’ பிறந்தது.
1967 ஜூலை 18-இல் மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றும் மசோதா மாநில சட்டபேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. [Madras State (Alevation of name) Act, 1968 (Central Act 53 of 1968)]
1969 ஜனவரி 14-ஆம் தேதி ‘தமிழ்நாடு என்னும் பெயர் அதிகாரப்பூர்வமாக நிலவில்(நடைமுறைக்கு) வந்தது.
0 comments:
Post a Comment