எந்த ஊர் போனாலும் ....நம்ம ஊர் {கோயம்புத்தூர்}போலாகுமா?

கோயம்புத்தூர்(Coimbatore) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னைக்கு
அடுத்த இரண்டாவது பெரிய நகரமாகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது தொழில் வளர்ச்சியிலும் கல்வி
நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்பாரதியார் பல்கலைக்கழகம்,அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களும் கோவை மாநகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தொன்மையான கொங்குநாடு பகுதியைச் சேர்ந்த இந்த நகரம் இங்குள்ள ஆலைகளின் எண்ணிக்கையால் தென்னிந்திய மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது. நகரத்திலும் புறநகர்ப்பகுதிகளும் 2.1 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
இப்பகுதியை பண்டைக்காலத்தில் கோசர்கள் ஆண்டதால் கோசன்புத்தூர்->கோவன்புத்தூர்->கோயம்புத்தூர் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கோவன் – கோன் ஆயன் – கோபாலன் - கோவலன் இவை நான்கும் பசுமந்தைகளைப் பேணி வளர்ப்பவர் அவற்றினை காப்பவர்கள் என்ற பொருளைத் தரும் ஒரு பொருட் பன்மொழிகள் ஆகும். கோபன் ஏற்படுத்திய புத்தூரே கோபன் புத்தூர்->கோவன் புத்தூர் ஆகும்.
மற்றோர் பெயர்க் காரணமும் கூறப்படும். கோ+அம்+பத்தூர் அதாவது கோ என்றால் அரசன், அம் என்றால் அழகிய, பத்தூர் என்றால் பத்து ஊர்கள் ஒன்றாக அமைந்த இடம். ஆகவே, கோயம்பத்தூர் என பெயர் பெற்றது என்றும் கூறுவார் உண்டு. இதற்கு உதாரணமாக சென்னையில் உள்ள அம்பத்தூரின் பெயரை எடுத்துக்காட்டாகவும் சொல்வார்கள்.

வரலாறு

கோயம்புத்தூரின் துவக்க காலம்குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பழங்குடிகளானஇருளர்கள் மற்றும் பறையர்கள் முதன்மைக் குடிகளாக இருந்தனர்.
"கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளன் மலையரில் கேசன் கோன் ஆன தமிழ வேள்" என்று வருகிறது. பல வெள்ளாளர்கள் புது ஊர்களைத் தோற்றிவித்து இருக்கிறார்கள். இவர்களில் பலர் கோவன் என்ற பெயர் கொண்டவராக இருந்தனர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட புத்தூர் தான் கோவன் புத்தூர் என்பது. இப்பொழுது கோயன்புத்தூரென அழைக்கப்படும் மாநகரம் ஆகும்.
கொங்கு நாட்டு வேளாளர் குடிகளில் மேலும் சில பிரிவுகளும் உள்ளன. சேட்டர், விச்சர், உட்டமர், வகையர், என்ற பிற பெயர்களும் கல்வெட்டுகளில் கானப்படுகின்றன. வேறு சிலர் மாடை, வெள்ளெலி, முட்டை, ஊகை, கருன்தொழி என்றும் அழைக்கப்பட்டனர். கோவில் பாளையம் கல்வெட்டில் வெள்ளாளன் புல்லிகளில் கோவன் இருடன் ஆன இராஜ நாராயண காமுண்டன் என்பவன் குறிக்கப்படுகிறான். இப்பின்னணியில் வேறுசில கல்வெட்டுகளையும் இங்கு காணலாம். பையருக்குள் மற்றும் ஒரு உட்பிரிவு உண்டு. அவர்களைக் கல்வெட்டுக் கூறுகிறது. அவ்வுட்பிரிவினர் பறையர் என்று அழைக்கப்பட்டனர். இடிகரையில் வீரபாண்டியன் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டில் (14ஆம் நுற்றாண்டில்) கோயிலில் விளக்கு எரிக்கப் பத்து வராஹன் பணம் கொடுத்தவன் பெயர் "கொற்றமங்கலத்திருக்கும் வெள்ளாளன் பைய்யரில் பறையன் பறையன்" என்று உள்ளது. வெள்ளாளரில் பைய்யரில் என்ற பிரிவில் பறையர் என்ற உட்பிரிவினர் இருந்துள்ளனரென இதன் வாயிலாக அறிகிறோம். இதே ஊரில் உள்ள மற்றொரு கல்வெட்டில் "வெள்ளாளன் பைய்யரில் சடையன் நேரியான பறையன் என்பவன் கூறப்படுகிறான்.[4]
பறையர் என்போர் மற்ற குலங்களைச் சேராமல் தனித்துத் தனிச் சேரிகளில் வாழ்ந்தனர். அவர்களுக்கென்று தனிச் சுடுகாடுகள் இருந்தன. ஆனால், அவர்களுக்கென்று சொத்துரிமை, குடிமையுரிமை முதலிய யாவும் உண்டு. இவர்கள் ஆவணங்களில் கையெழுத்திட்டால்தான் அவை முழுமை பெற்றதாகும். இதுபோல் வெள்ளாளர் உட்பிரிவுகளில் புல்லி என்ற பிரிவிலும் பறையன் குறிக்கப்படுகிறான். விக்கிரம சோழன் காலத்தில் 1292ல் ஒருவன் தீபங்கொடுத்தான். "வெள்ளாளன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக்காமுண்டன்" என்பவன் குறிக்கப்பெறுகிறான். இதிலிருந்த்து 13ஆம் நூற்றாண்டு- 14ஆம் நூற்றாண்டுகளில் வெள்ளாளர்களில் பறையன் என்ற ஒரு பிரிவு இருந்துள்ளது. இவன் நாட்டுக்காமுண்டன் என்று அழைக்கப்படுவதிலிருந்து வடபரிசார நாட்டுக்கே வெள்ளாளர் குடியில் தலைவனாகவும் இருந்திருக்கிறான் என்று அறிகிறோம். ஆதலின் இவர்கள் நிலச்சுவாந்தாராகவும்,பொருளுடையோராகவும் மக்களிலே சிறந்தோராகவும் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிகிறது. 
9ஆம் நூற்றாண்டின் இடையில் எழுந்த பிற்கால சோழர் ஆட்சி கோயம்புத்தூரைத் தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியைப் பழங்குடி மக்கள், குறிப்பாகக் கோசர்கள் ஆண்டு வந்தனர். கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூரென மருவியது. கோவன் என்பவன் இங்கு வசித்ததால் இதன் பெயரான கோவன் புதூர் என்பது மருவிக் கோயம்புத்தூர் என்றானது. கொங்கு மண்டலத்தின் முதன்மை நகரமாக விளங்கியது கோயம்புத்தூர்.
1760களில் மைசூரின் சிங்காதனத்தை ஹைதர் அலி கைப்பற்றினார். அவர் பிரித்தானியருக்கு எதிராகச் செயல்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதைத் தடுத்தார். இதனை அவர்தம் வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர். 1801ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார் மற்றும் மைசூர் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848ஆம் ஆண்டு நகராட்சித் தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.உரோமர்களின் வணிகத்திற்கும் கோயம்புத்தூர் மையமாக இருந்ததாகத் தெரிகிறது. 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தில்லி சுல்தான்களின் கீழான மதுரையைச் சேர்ந்த இசுலாமியர் ஆட்சிப் புரிந்தனர். இவர்களது ஆட்சி விசயநகரப் பேரரசினால் முடிவுக்கு வந்தது. அவர்களது ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில்ஆந்திரகர்நாடக மக்கள் குடிபெயர்ந்தனர். 1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டைகள் நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.
1981ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.

ஏரிகளும் குளங்களும்,பறவைகளும் மிருகங்களும்  


பல ஏரிகளும் குளங்களும் அந்நாட்களில் வெட்டப்பட்டிருக்கின்றன. கோவை நகரில் ஒன்பது ஏரிகள் உள்ளன. சில:சிங்காநல்லூர் (குளம்) ஏரி, குறிச்சி (குளம்) ஏரி, வாலாங்குளம் (குளம்) ஏரி, கிருஷ்ணாம்பதி (குளம்) ஏரி, முத்தண்ணன் (குளம்) ஏரி, செல்வசிந்தாமணி (குளம்) ஏரி, பெரியகுளம் (இது உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது). இந்த நீர்நிலைகள் நொய்யல் ஆற்றிலிருந்து நீர் பெறுகின்றன.
பறவைகள்விலங்குகள், ஊர்வன, நிலநீர் வாழிகள், மீன்கள் எனப் பல்லுயிர் ஓம்பலுக்கு நகரமைப்பின் ஆதாரமாக இந்த நீரிடங்கள் அமைகின்றன. கோவையின் இந்த நீர்நிலைகள் 125 வகையான பறவைகளின் இருப்பிடமாக உள்ளன. நாடோடிப் பறவைகள் மிகவும் கூடுதலாக ஆகத்து - அக்டோபர் மாதங்களில் வருகின்றன. கூழைக்கடா, நீர்க்காகம், பாம்புத்தாரா, நீலவண்ண தாழைக்கோழி, நாமக்கோழி முதலிய பறவைகளை இந்த ஏரிகளில் காணலாம்.
தவிர, காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள்சிறுத்தைகள்புலிகள்எருமைகள், பலவகை மான்கள் போன்ற விலங்குகளைக் காணலாம். சுற்றியுள்ள வனப்பகுதிகளில் தேக்குசந்தனமரம், ரோசுவுட் மரம், மூங்கில்கள்முதலியன வளர்கின்றன.

பூங்காக்கள்

நகரில் பல பூங்காக்கள் உள்ளன. வ. உ. சி. பூங்கா இவற்றில் முதன்மையானதொன்றாகும். குறிப்பிடத்தக்க பிற பூங்காக்கள்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தாவரவியல் பூங்கா, பந்தய சாலை பூங்கா, பாரதி பூங்கா, காந்தி பூங்கா, இராமாயணப் பூங்காவிவேகானந்தர் பூங்கா. .





மக்கள்தொகை

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கோவை நகராட்சி எல்லைக்குள் மக்கள்தொகை 930,882  .அண்மைய மதிப்பீடுகள் 15 இலக்கமாக (1.5 மில்லியன்) மதிப்பிடுகின்றன. ஆண்கள் 52% பெண்கள் 48% உள்ளனர். கல்வியறிவு பெற்றோர் 78% ஆகத் தேசிய சராசரி 59.5%ஐவிடக் கூடுதலாக உள்ளது. ஆண்களின் கல்வியறிவு விழுக்காடு 81% ஆகவும் பெண்களின் விழுக்காடு 74%ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குக் குறைந்தவர் தொகை 11% ஆகும். இங்கு பேசப்படும் தமிழ் கொங்குதமிழ் என்ற தொன்மையான வழக்கு மொழியாகும்.
நகரின் பெரும்பான்மை மதத்தினராக இந்துக்கள் உள்ளனர். குறிப்பிடத்தக்க தொகையில் இசுலாமியரும்கிறித்தவர்களும் உள்ளனர். குறைந்த அளவில் சமணரும் சீக்கியரும் அண்மைக்காலத்தில்குடிபெயர்ந்துள்ளனர். கொங்குவேளாளர் கவுண்டர்கள்நாயக்கர்கள் பெரும்பான்மையான இனத்தவர் ஆகும். பிற இனத்தவர்களில் விஜயநகரப் பேரரசு காலத்தில் குடிபெயர்ந்த நாயக்கர்கள் (நாயுடுக்கள்), செட்டியார்கள் முக்கியமானவர்களாவர். கேரளத்தின் பாலக்காடு மாவட்ட மலையாளிகளும் வட இந்திய மார்வாரிகளும் கணிசமான அளவில் வாழ்கின்றனர்.

பொருளாதாரம்

நகரின் முதன்மையான தொழில்துறைகள் பொறியியலும் நெசவும் ஆகும். தமிழ்நாட்டிலேயே மிகக் கூடுதலாக வருவாய் ஈட்டும் மாவட்டமாகக் கோவை உள்ளது. சுற்றுப்புற பருத்தி வேளாண்மையை ஒட்டி இங்கு அமைந்துள்ள நெசவாலைகளின் கூடுதலான எண்ணிக்கை இதற்குத்தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற சுட்டுப்பெயரினைப் பெற்றுத் தந்திருக்கிறது. இம்மாவட்டத்தில் பல பின்னலாடைத் தறிகளும் கோழிப்பண்ணைகளும் கூடுதலாக உள்ளன. பெரும்பாலான தொழிற்சாலைகளைக் குடும்ப நிதி அல்லது சமூக ஒருங்கிணைப்பு உதவியுடன் சிறு தொழில்முனைவோர் நடத்துகின்றனர். 1920களில் துவங்கிய தொழில் துறை, இந்திய விடுதலைக்குப் பின்னர் வளர்ச்சி கண்டு அரசு அரவணைப்போ பெரும் வணிகக் குழாம்களின் வரவோ இன்றி தன்னிறைவுடன் ஏற்றம் கண்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னணித் தொழிலதிபர்களின் பட்டியலில் பெரும்பான்மையான முதலிடங்களை கோவைத் தொழில்முனைவோர் பிடித்துள்ளனர். தற்போது தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பிறநாட்டு உள்ளலுவலகப் பணிகளை மேலாண்மையிடும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

துணித்துறை
கோவையில் சிறுதும் பெரிதுமாகப் பல துணி தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இவற்றின் மேம்பாட்டினை வழிநடத்த மத்திய பருத்தி ஆய்வு மையம் மற்றும் தென்னிந்திய துணித்துறை தொழில்முனைவோர் சங்க ஆய்வகம் (SITRA) போன்றவை உள்ளன. அண்மை நகரான திருப்பூர் ஆண்டுக்கு ரூ.50,000 மில்லியன் மதிப்பளவு ஏற்றுமதியுடன் ஆசியாவிலேயே மிகப்பரந்த பின்னலாடை ஏற்றுமதி மையமாகப் விளங்குகிறது.
தகவல் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில் மென்பொருள் ஏற்றுமதியில் சென்னைக்கு அடுத்தபடியாகக் கோவை உள்ளது. கோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றுகோவை மருத்துவக் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ளது. கோவை வணிகச் செயலாக்க அயலாக்கமையமாகவும் வளர்ந்து வருகிறது. உலகளவில் அயலாக்க நகரங்களில் 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கனரக தயாரிப்பு
பூ.சா.கோ. தொழிலகங்கள், சக்தி குழுமம் ஆகியன கோவையின் தயாரிப்புத் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. தற்போது மூடப்பட்டுள்ள சௌத் இந்தியா விசுகோசு வேலை வாய்ப்புகளைக் கூடுதலாக்குவதில் பங்கு வகித்தது. லார்சன் டூப்ரோ நிறுவனத்திற்கு 300 ஏக்கரா பரப்பளவுள்ள வளாகம் கோவையின் அடுத்துள்ள மலுமிச்சம்பட்டியில் உள்ளது. இங்கு அந்நிறுவனம் 2009ஆம் ஆண்டு வார்ப்படம் தயாரிக்கும் அமைப்பை இயக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. இலட்சுமி மெசின் வொர்க்ஸ், பிரீமியர் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (PRICOL),எல்ஜி எக்யுப்மென்ட்ஸ், சாந்தி கியர்ஸ், ரூட்ஸ் ஆகியன இங்கு இயங்கும் மேலும் சில தொழிலகங்கள்.
தானி பாகங்கள்
டெக்ஸ்டூல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசின் இராணுவத்திற்கு துப்பாக்கிகளின் முன்வடிவை அளித்திருந்தது. அவர்கள் 1960களில் முதல் உள்நாட்டிலேயே வடிவமைத்த தானுந்தியை தயாரித்தாலும் அப்போது நிலவிய அரசுக் கட்டுப்பாடுகளால் வெளிக்கொணர முடியாது போயிற்று. 1990 வரை பல முன்வரைவுகளை மேம்படுத்தினர். 1972ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக உள்நாட்டுத் தயாரிப்பாகத் தானுந்து தீசல் இயந்திரத்தினை வடிவமைத்தனர். 1982ஆம் ஆண்டு தங்களுக்கான எண்ணிம கட்டுப்பாட்டு இயந்திரங்களையும் லேத்துகளையும் தாங்களே தயாரித்துக் கொண்டனர். அவர்களிடமிருந்து பிரிந்த ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ் இன்று மகிந்திரா, டாட்டா மோட்டார்ஸ், இந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆகிய தானுந்து தொழிலகங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சேவைகளைக் கொடுத்து வருகிறது.
மாருதி சுசூக்கி மற்றும் டாட்டா மோட்டார்ஸ் கோவையிலிருந்தே அவர்களின் தேவைகளில் 30% தானுந்து பாகங்களைப் பெறுகின்றன. நகரத்தில் பல நகை ஏற்றுமதியில் ஈடுபடும் நகை தயாரிப்பாளர்களும் உள்ளனர். காற்றாலை மின் உற்பத்தியில் பெயர்பெற்ற சுசுலான் நிறுவனம் இங்கு தனது வார்ப்பாலை மற்றும் பட்டறையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. கூடவே, காற்றாலைகளுக்கான பற்சக்கர மாற்றியைத் தயாரிக்கும் பெல்ஜியநிறுவனம் ஹான்சென் டிரான்ஸ்மிசன் ரூ.940 கோடி திட்டச் செலவில் தனது தயாரிப்பு வசதியைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது.
ஈரமாவு அரவைப்பொறிகள்
கோவை நகரில் 700 ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பாளர்கள் மாதமொன்றிற்கு (மார்ச்,2005 படி) 75,000 பொறிகளைத் தயாரித்து வருகின்றனர். 2006ஆம் ஆண்டு கோவையிலும் அடுத்துள்ள ஈரோட்டிலும் தயாராகும் அரவைப்பொறிகளுக்கு கோயம்புத்தூர் ஈரரவைப்பொறி என்ற புவியியல் அடையாளம் வழங்கப்பட்டது. இங்கு அரவைப்பொறி தயாரிப்பாளர்களுக்கான பொது கட்டமைப்பும் உள்ளது.
நீரேற்றிகள் தயாரிப்பு
இந்தியாவில் தயாரிக்கப்படும் 60 சதவீத நீரேற்றிகள் கோவைப் பகுதியிலேயேத் தயாரிக்கப்படுகின்றன.  நகரத்தில் ஏராளமான சிறுதொழில் முனைவோர் முனைப்பில் நீரேற்றிகள் தயாரிக்கப்படுகின்றன. ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பில் கிட்டத்தட்ட முழுநிறை உரிமை கொண்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளைப் போலவே வேளாண்மை மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொது வணிகம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் பலரை கவர்கிறது.கோவை நகரின் முதன்மை நீரேற்றி தயாரிப்பாளர்கள் சிலர்: ஷார்ப் தொழிலகங்கள், சிஆர்ஐ பம்ப்ஸ், டெக்ஸ்மோ தொழிலகங்கள், டெக்கன் பம்ப்ஸ், கேஎஸ்பி பம்ப்ஸ்.

விளையாட்டும் மனமகிழ்வும்


தானுந்து விளையாட்டுக்கள் நகரத்தின் முதன்மை இடம்பெற்ற விளையாட்டாக விளங்குகிறது. கோவையை இந்தியாவின் தானுந்து விளையாட்டுப்போட்டித் தலைநகரம்என்றும் இந்திய தானுந்துவிளையாட்டு புறக்கடை என்றும் விளிப்பர். கோவையின் தொழிலதிபர்கள் சிலர்,கரிவரதன் போன்றோர், தங்கள் தானுந்து வடிவமைப்பை மாற்றுவதில் ஈடுபாடு கொண்டு பின்னர் தானுந்துப் பந்தயங்களில் பங்கெடுத்தனர். அவர்களது ஆர்வத்தினால் கோவையை நாட்டின் தானுந்துப் பந்தய மையமாக ஆக்கினர். நகரத்தில் ஃபார்முலா 3 பகுப்பைச் சேர்ந்த பந்தயச்சாலையும் மூன்று கோகார்ட் பந்தயச் சாலைகளும் உள்ளன. பார்முலா பந்தயம்விசையுந்துப் பந்தயம்கார்ட்டு பந்தயம்ஆகியவற்றிற்குத் தேசியச் சாதனைப் பந்தயங்கள் இங்குள்ள கரி தானுந்து விரைவுச்சாலையில் நடைபெறுகின்றன. நெடுஞ்சாலைப் பந்தயங்களிலும் கோவை அணிகள் முதன்மை வகிக்கின்றன. ஃபார்முலா ஒன்று பந்தயத்தில் 2005ஆம் ஆண்டு பங்கெடுத்த கோவையின் நாராயண் கார்த்திகேயன் இவ்விளையாட்டில் பங்கெடுத்த முதல் இந்தியர். தொன்மையான தானுந்துகளைச் சேகரிப்பதும் கோவை தொழிலதிபர்களின் பொழுதுபோக்காகும்.நேரு விளையாட்டரங்கம் கால்பந்து போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட போதும் இங்கு தடகள விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன. தற்போது செயற்கை தடங்களுடன் நடுவில் கொரிய புல்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தவிர பல விளையாட்டு மன்றங்களும் உள்ளன. புகழ்பெற்ற டென்னிஸ்வீராங்கனை நிருபமா வைத்தியநாதன் கோவையைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் குழிப்பந்தாட்ட மன்றம் ஒர் 18 குழிகள் கொண்ட மைதானத்தைக் கொண்டுள்ளது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயம்புத்தூர் காஸ்மாபாலிட்டன் மன்றம், இந்தியர்களுக்கு மட்டுமே உறுப்பினராக உரிமை வழங்கியது.
தானுந்து விளையாட்டுக்கள் நகரத்தின் முதன்மை இடம்பெற்ற விளையாட்டாக விளங்குகிறது. கோவையை இந்தியாவின் தானுந்து விளையாட்டுப்போட்டித் தலைநகரம்என்றும் இந்திய தானுந்துவிளையாட்டு புறக்கடை என்றும் விளிப்பர். கோவையின் தொழிலதிபர்கள் சிலர்,கரிவரதன் போன்றோர், தங்கள் தானுந்து வடிவமைப்பை மாற்றுவதில் ஈடுபாடு கொண்டு பின்னர் தானுந்துப் பந்தயங்களில் பங்கெடுத்தனர். அவர்களது ஆர்வத்தினால் கோவையை நாட்டின் தானுந்துப் பந்தய மையமாக ஆக்கினர். நகரத்தில் ஃபார்முலா 3 பகுப்பைச் சேர்ந்த பந்தயச்சாலையும் மூன்று கோகார்ட் பந்தயச் சாலைகளும் உள்ளன. பார்முலா பந்தயம்விசையுந்துப் பந்தயம்கார்ட்டு பந்தயம்ஆகியவற்றிற்குத் தேசியச் சாதனைப் பந்தயங்கள் இங்குள்ள கரி தானுந்து விரைவுச்சாலையில் நடைபெறுகின்றன. நெடுஞ்சாலைப் பந்தயங்களிலும் கோவை அணிகள் முதன்மை வகிக்கின்றன. ஃபார்முலா ஒன்று பந்தயத்தில் 2005ஆம் ஆண்டு பங்கெடுத்த கோவையின் நாராயண் கார்த்திகேயன் இவ்விளையாட்டில் பங்கெடுத்த முதல் இந்தியர். தொன்மையான தானுந்துகளைச் சேகரிப்பதும் கோவை தொழிலதிபர்களின் பொழுதுபோக்காகும்.
மனமகிழ்விற்குப் பல புதிய தலைமுறை பொழுதுபோக்கு மையங்கள் மலர்ந்தாலும் நகரத்தின் பரவலான அரவணைப்பு திரையரங்குகளுக்கே ஆகும்.

No comments:

Post a Comment