மதம் மாற்ற அலையும் மதம் மாறிகள்-:ஆக்கம்:செல்வத்துரை,சந்திரகாசன்

பல ஆண்டுகளுக்கு முன்னே, அக்காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களினிடையே ஒரு சிலர் அவ்வப்போது தோன்றி, சில நல்வார்த்தைகளைக் கூறக்கேட்டதும், அவர்களை உடனே கடவுள்களாக்கியும், கடவுளின் தூதர்களாகவும் சித்தரித்து மதங்களையும் உருவாக்கி விட்டனர். இப்படியாக உருவாகிய மதங்களில் ஒன்றான கிறீஸ்துவ சமயம், அது தோன்றிய மத்திய கிழக்கு எல்லையையும் தாண்டி, ஐரோப்பிய சமூகத்தினுள்ளும் ஊடுருவி, வேரிட்டுத் தழைத்து ஓங்கத் தொடங்கியது.

அக்கால ஐரோப்பிய நாடுகள், பல வெளி நாடுகளையும் ஆக்கிரமித்து ஆண்டு வந்திருந்ததனால், அந்நாடுகளில் இச்சமயத்தைப் பரப்பவும் இலகுவாக இருந்தது. முக்கியமாக, இந்தியப் பெரு நிலத்தில், அவர்களால் பதவி ஆசை காட்டி மதம் மாற்றப்பட்டோர் ஒரு பகுதியினர். சாதியைக் குறிவைத்து மாற்றப்பட்டோர் பெரும் பகுதியினர். ஆனால், தற்கால ஐரோப்பிய, வட அமெரிக்க, ஆஸ்திரேலிய சமுதாயம், இந்த சமய நம்பிக்கைகளை ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்துவிட்டதால் தங்கள் நாடுகளை பெரும் பொருளாதார வல்லரசுகளாக உயர்த்தி, உல்லாச வாழ்வுக்கு உகந்தனவாக ஆக்கி விட்டார்கள். சமயத்தையே இறுகக் கட்டிக்கொண்டு, கடவுள்தான் எல்லாம் தருவார் என்றும், இறந்தபின் (இல்லாத) அந்த சொர்க்கலோகம் போய்ச் சேரலாம் என்றும் நம்பி, நாள்முழுவதும் தவறாது வணங்கிக் கொண்டிருக்கும் மக்களைக் கொண்ட நாடுகள் பலவும், அரசியல் ஸ்திரம் இன்மை, பசி, பட்டினி, கொலை, கொள்ளை,கற்பழிப்பு, அடக்கு முறை, சுதந்திரம் இன்மை என்று எவ்வளவெல்லாம் அல்லல் படுகின்றன என்பது நாம் நாளாந்தம் காணும் உண்மைகள் ஆகும்.

உதாரணமாக, 2011 ஆஸ்திரேலிய குடிசன மதிப்பின்படி, 31% ஆனவர்கள்  தமக்கு எந்தவொரு மதமும் இல்லை என்று கூறி உள்ளனர். (மிகுதி 69% இல் , கடவுளே தேவை இல்லை என்று வாதிக்கும் என்னைப் போன்றவர்கள், நம் சமூக அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல், நானும் இந்துதான் என்று குறித்தவர்களும் பலர் இருக்கலாம்!) மேலும், ஓர் ஆய்வின் படி 25% மக்கள்  கடவுள் நம்பிக்கையே இல்லை என்றும் கூறி உள்ளனர். ஆனால், 'கடவுள் என்பவர் உமக்கு முக்கியமோ?' என்ற கேள்விக்கு 67% மானவர்கள் 'இல்லை' என்றுதான் பதில் கூறியுள்ளனர். (ஒப்பீடு: டென்மார்க் = 83%, பாக்கிஸ்தான் = 4%; அப்போ, பாருங்களேன் வாழ்க்கைத் தரத்தின் வேறுபாட்டை!) அத்தோடு, பொருளாதார வளர்ச்சியில் உயர்ந்துள்ள நாடுகளில் வசிப்பவர்கள் தேவாலயம் போவது என்பது மிகவும் அரிதாகி விட்டது. ஒழுங்ககாகப் போய்க் கொண்டிருப்பவர்கள், பெரும்பாலும் ஆசிய நாட்டு வந்தேறு குடிகளும், உள்ளூர் பழுத்த கிழவர்க்களும்தான்

இது இப்படி இருக்க, இப்பவும், இன்னமும் ஈழத்திலும், இந்தியாவிலும் சில மதம் மாறிகள், வெள்ளைக்காரனின் சமயம் என்றால் எதோ உசத்தி என்று எண்ணிக் கொண்டு (அது உண்மையில் யூத நாட்டினது), அவர்களுக்கு அவர்களின் சமய மேலிடம் வழங்கும் பண ஊக்கம், மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு, சைவ சமய மக்கள் பல கஷ்டங்கள் பட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்லிக் கண்ணீர் விட்டுஇவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுவதாகக் கூறிக்கொண்டுஇவர்களுக்கு அற்ப, சொற்ப வசதிகள் செய்து தருவதாக வாக்களித்து, சமய மாற்றம் செய்வதில் தீவரமாய் இறங்கி உள்ளார்கள்.

 நானும் தெரியாமல்தான் கேட்கின்றேன்; அந்த மதம் மாறிகளில் ஒருவர் எனக்காக இறைவனிடம் மன்றாடும் போது, இறைவன் திடீர் என்று முன்னே தோன்றி "பக்தா உன் வேண்டுகோளைச் செவி மடுத்தேன். இந்தா! ஒரு ஒரு மில்லியன் டொலர். நீ அவரிடம்கொண்டு போய்க் கொடு!" என்று கொடுத்தால் அதில் ஒரு ரூபாதன்னும் என்னிடம் தருவாரா? சுத்த புலுடா! கடவுள் என்று சொல்லப்படுபவர் ஒருபோதும் கொடுக்கவே மாட்டார் என்று நிச்சயமாகத் தெரியும் என்பதால்தான் அவரும் துணிந்து கேட்கின்றார், எங்களுக்காக!.

ஒன்று மட்டும் ஒரு பெரிய உண்மை; உலகத்தில் எவரும் மற்றவர்கள் நன்றாய் இருக்கவேண்டும் என்று ஓடித் அலைவது இல்லை! எல்லாம் தங்கள், தங்கள் சுய நலத்தோடுதான் செயற்படுவார்கள். அச்சுயநலம் பொருளீட்டலாகவோ, புகழீட்டலாகவோ இருக்கலாம்.

சமய மாற்றிகளே! இங்கு சைவச் சனம் கடவுள் பற்றாக் குறையினால் ஒன்றும் கஷ்டப் படவில்லை. ஏற்கனவே பலவிதமான நம்பிக்கைகளில் புதைந்து கிடக்கின்றனர். அவரவர் மனப் பக்குவத்திற்கேற்ப கடவுள் நம்பிக்கைகள் பலவற்றைப் பின்பற்றுகின்றனர். இவர்களுக்கு  வணங்குவதற்கென்று பிறப்பிறப்பு என்று இல்லாத கடவுளும், பிறந்து, பிறந்து, இறக்கும் கடவுள்மார் என்றும் ஏற்கனவே நிறைந்து உள்ளனர். நீங்கள் சில காரணங்களுக்காக மாறினீர்கள். அதை உங்களோடேயே வைத்துக் கொள்ளுங்கள். இவர்களையும் சமயம் மாற்றி, இவர்களுக்கு இனி, புளிச்சுப்போன பழைய பொய்கள் பலவற்றை அவிழ்த்துவிட்டுப் பயமுறுத்தவேண்டாம். ஒழுங்காகக் கோவில் செல்லாவிட்டால் அவலச் சாவு, பாவ மன்னிப்பு இன்மை, புதைகுழிப் பேறின்மை, நரக வாழ்வு, அது, இது என்று இனிப் புதுப் புதுப் பூச்சாண்டிக் கதைகள் ஒன்றும் இவர்களுக்குத் தேவை இல்லை.
 கொண்டு வந்து புகுத்தியவனே அதைக் கைவிட்டபின் உங்களுக்கு ஏன் இந்த அர்த்தமற்ற வீண் வேலை?.
 சும்மா விடுங்கள்! -அதுவே போதும் இவர்கள் நிம்மதியாக வாழ!
 -மிகவும் நன்றி!

4 comments:

  1. ரவிமோகன் கனடாTuesday, December 23, 2014

    மதம் என்பது மனிதனால் தன் சமுகத்திற்கு கட்டுபாடுகளை ஏற்படுத்தவும் ஒழுக்கமான சமுகத்தை ஏற்படுத்த அவனுக்கு மீறிய சக்தியை கடவுளாக கொண்டு அவர்களின் புவியியல்அமைப்பு ,மொழி அடிப்படையில் உருவாக்க பட்டதுதான் மதம்!(எல்லா மதங்களும் ஒரு சக்தியைத்தான் மையப்படுத்தி காணப்படுகின்றன.)
    ............. ஏதோ மத எதிர்ப்புதான் அடிப்படை காரணம் கொண்டு உருவாக்க பட்டது. ஆனாலும் பணிப்புலத்தில் உள்ள மூன்றுபெரும் கோயில்களை அவர்களின் ஊடகங்களை பார்த்தல் புரியும்.

    அடிப்படையில் இந்துக்கள் மதத்தை எதிர்ப்பதற்கு ஒரு காரணம் சாதி.சாதி என்பது எந்த மதத்திலும் இல்லை

    இலங்கையில் யுத்த காலத்தில் இடபெயர்வின் போது(உள்நாட்டு) சாதி இல்லை மதம் இருந்தது.(அனுபவம்)இது எப்படி சாத்தியமானது உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடும் போது எல்லோரும் ஒன்றாகத்தான் காணப்படுவர் அகதி என்ற சாதி! ஆனால் மதம் இருந்தது ஒவ்வொரு எறிகணை சத்தத்திற்கும் எத்தனை கடவுள்கள் அழைக்க படுவார்கள் தெரியுமமா? கந்தா...! ஜெசப்பா! மாரி அம்மா...! மேரியம்மா! அம்மா! அப்பா! இன்னும் எத்தனையோ கூக்குரல்கள்! எனக்கு தெரிந்த நாத்திகர்கள் சொன்னது யாரவது எங்களா காப்பத்த மாட்டாங்களா? அவர்கள் தங்களை மீறிய ஒரு சக்தியை எதிர்பார்த்தார்கள்! அங்கு உருவாக்கபட்டது அதே எண்ணம்தான்( கந்தா! ஜெசப்பா !) என்ன கொஞ்சம் வித்தியாசமாக!
    எந்த மதமாகினும் மத அடிப்படையில் எந்த சாதியும் இல்லை.ஆனாலும் பிரிவுகள் இல்லாத மதங்களும் இல்லை.ஏன் இந்த மதங்களுக்குள் பிரிவு???(நான் சாதிப்பிரிவை குறிப்பிடவில்லை).

    இந்த மதங்களை பின்பற்றுவோர் சிலர் ஒரு தங்களுக்கு ஏற்படும் வித்தியாசமான சிந்தனையால் மதக்களில் சில மாற்றங்களை செய்து ஒரு மதபிரிவாக ஏற்படுத்தி விடுகின்றனர். இது ஒரு விதண்டாவாதமாகவும் சுயநல செயலாகவும் இருக்கலாம். இது சில மதங்களில் மூடநம்பிக்கைகள் வளர்வதற்கு காரணமாக அமைகின்றன.
    ஆனாலும் குறிப்பாக சில மதப்பிரிவுகள் தங்கள் மதத்தை பரப்புவதற்கான முனைப்புகளில் இடுபடுகின்றன! இது ஒரு மூடத்தனமான செயல். ஏன் என்றால் எல்லாம் மதங்களும் அன்பைத்தான் அடிப்படியாக போதிக்கின்றன! எல்லா மதங்களும் ஒரே விடையத்தைதான் சொல்கின்றன சொன்ன விதம்தான் வித்தியாசமானது. தன் மதத்தின் அடிப்படைகளை கூட புரிந்து கொள்ளாதவர்கள்தான் மத மாற்றத்திற்கு உட்படுவார்கள்.
    எந்த மதத்தவரும் தங்கள் மதம் சொன்னவற்றை 100% பின்பற்றி நடந்து இருக்க முடியாது !நடக்கவும் முடியாது! இது மாற்று கருத்து இல்லாத உண்மை. ஆனாலும் தங்கள் மதத்தின் படி வாழ்தால் உலகத்தில் பிரச்சினை இருக்காது!

    ReplyDelete
  2. இவர்கள் கடவுள் என்றால் என்னவென்று அறியாதவர்கள்.அதனால் தான் காசுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு தம்மை அழித்துக்கொல்பவர்கள்.இவர்கள் எதனையும் சாதிக்கமுடியாதவர்கள்.னவே எதையாவது புதிதாக செய்வதாக எண்ணி பழைய பஞ்சாங்கத்தையே காவித்திரிபவர்கள்.வெள்ளைக்காரன் கைவிட்ட கழுதையில் ஏறி சவாரி செய்து பார்க்கிறார்கள்.செய்து தங்கள் பெயருக்கே களங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

    ReplyDelete
  3. மதங்கள் மனிதத்தை காக்கவில்லை எனில் ,மதங்கள் அடுத்தவர் உணர்வுகளை மதித்ததில்லைஎனில்,மதங்கள் உறவுகளை பிரித்தது எனில்.ஊரைக் குழப்பியது எனில், மதங்கள் யாருக்காக?

    ReplyDelete
  4. அன்னியர் ஆட்சியில் சமயங்களை பரப்பும் நோக்கத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் அமெரிக்க மிஷன் பாடசாலைகளை அமைத்து அருகில் ஏற்கனவே மதம் மாறிய தமிழர்களை குடியமர்த்தினர்.ஆனால் அவர்கள் நோக்கம் எம்மூர் போன்ற ஊர்களில் கைகூடவில்லை.மாறாக குடியேறியவர்களின் கல்விநிலை பூச்சியமானது.அதேவேளை அமெரிக்கமிஷன் பாடசாலையில் பணியமர்த்தப்பட்ட எமது ஊர் ஆசிரியர்கள் இருவர்களுக்கு மதம் மாறினால் தலைமை வாத்தியார் உத்தியோகம் தரலாம் என ஆசை காட்டினர்.அதுவும் நடக்கவில்லை.

    ReplyDelete