ஒளிர்வு:50 -தமிழ் இணைய மார்கழி இதழ் :,2014-எமது கருத்து

வாசகர்கள் அனைவருக்கும்  
நத்தார்,புத்தாண்டு
 நல்வாழ்த்துக்கள் 


தீபம் வாசகர்கள் அனைவருக்கும் குளிர்மையான மார்கழி வணக்கம்.தனி மனிதனாக இருந்தாலும் சரி, ஊடகங்களாக இருந்தாலும் சரி அவசியமற்ற விடயங்களை அலட்டிக்கொள்வது இயந்திர உலகில் வாழும் இக்கால மனிதனைப் பொறுத்த வரையில் சகித்துக்கொள்ள முடியாதவை மட்டுமல்ல அவை குப்பைகளாகவே கணிக்கப்படும்.இதனையே அன்று வாழ்ந்த திருவள்ளுவரும் கூட ,
                           ''பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
                           மக்கட் பதடி யெனல்.''
அதாவது,பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்,என்று கூறியுள்ளார்.எனவேதான் நாமும் எமது இடுகை விடையத்தில் என்றும் அவதானமாக இருந்து வருகிறோம்.


மேலும் ,வள்ளுவன் கூறியதுபோல் எவரும் பதராக வாழாது அடுத்தவனுக்குப் பயனுள்ளவனாக வாழ்வதன் மூலமே அனைவரும் இணைந்து வளரமுடியும். வாழ்க!,வளர்க! என தீபம் அனைவரையும் வாழ்த்துவதில் மகிழ்வடைகிறது.

''ஐ'' திரைப்பட விமர்சனம்

1986-ம் ஆண்டு வெளியானது தி ஃபிளை என்ற ஹாலிவுட் திரைப்படம். பொருட்களை மின்காந்த அலைகளாக மாற்றி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்புவதற்கான அறிவியல் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார், ஹீரோ. அந்த சோதனையில் தன்னையே உட்படுத்திக் கொண்ட போது, அனுப்பும் தளத்தில் ஒரு ஈயும் சேர்ந்து விட, ஹீரோ மனிதனும், ஈயும் சேர்ந்த கலப்பினமாக மாறி விடுகிறார். அதனால் அவரது உடம்பிலும், முகத்திலும் ஏற்படும் மாற்றங்கள், மீண்டும் மனிதனாக மாறுவதற்கான போராட்டங்கள், இடையில் காதலியுடனான பிரச்சனைகள் என்று படம் போகிறது
இந்தப் படம் பற்றி ஷங்கர் கேள்விப்படுகிறார். மனிதன் ஈயாக மாறுகிறான்,
முகம் விசித்திரமாக, விகாரமாக மாறுகிறது. ஓடுகிறான், பாடுகிறான். இதை
முழுமையாக காட்டாவிட்டாலும் படத்தின்  பட்ஜெட், புதுமைக்காக மினிமமாக இதை பயன்படுத்தலாம், இந்த கான்செப்ட் நல்லா இருக்கே, என்று யோசித்திருக்கிறார். அதையே தமிழ் சினிமா ரேஞ்சுக்கு கதை கட்டியிருக்கிறார். எத்தனை நாள் அப்பள வியாபாரத்தையே காட்டுவது, இப்போது ஐடி காலத்தில் எது சீசன் என்று ஆள் வைத்து யோசித்திருப்பார். இப்படித்தான் விக்ரம் ஒரு விளம்பர மாடலாக மாறுகிறார். சங்கரும் 2014-க்கு அப்கிரேட் ஆகிறார்.
ஷங்கர் இந்தப் படத்தின் கதையாக சொல்லியிருப்பது, ஆண் மாடலுக்கு வில்லன் மருந்து செலுத்தி விலங்கு மனிதனாக மாற்றுவது என்று போகிறது. அதில் கூட, குறைவு இருக்கலாம். அடிப்படையில் பல காட்சிகள் ஃபிளை படத்திலிருந்து வருகின்றன. டிரெய்லரை பாருங்கள்.
அடுத்ததாக விக்ரம்... ‘என்ன நடிகன்பா... எவ்வளவு உழைப்பு..!’ என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் மனிதர். மாடலாக வரும்போது ‘ஹாலிவுட் மாடல்’ போல இருக்கிறார், ‘ஜிம்’ மாஸ்டராக வரும்போது முறுக்கேறிய உடம்புடன் நிஜ புஜ பலம் காட்டுகிறார், கோர முகம், சிங்க முகம் என ஒவ்வொரு காட்சியிலும் விக்ரமின் உழைப்பு உச்சபட்சம். இனி ஒரு நடிகர் இதுபோல் நடிப்பாரா? என்ற சந்தேகம் எழும் அளவுக்கு இருக்கிறது விக்ரமின் பங்களிப்பு!
இணையத்தில் பார்க்க கிடைத்தவை படி இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஒரு விளம்பர மாடலாக போராடி வெற்றி பெறுகிறார். பொறுக்காத போட்டி விளம்பர வில்லன் நடிகர் வைரஸ் கிருமி மருந்தை விக்ரம் உடலில் செலுத்துகிறார். விக்ரம் உடல் மாறுகிறது. அதையே அதிகமாக காட்டினால் பெண்கள், குழந்தைகள் வரமாட்டார்கள், ஃபேமிலி சப்ஜெக்டாக மாற்ற முடியாது என்பதால் அசிங்கமான விக்ரமை வைத்து பல்வேறு ஆக்சன் காட்சிகள், கிராபிக்ஸ் பாடல்கள் என்று பேலன்ஸ் செய்து கொள்கிறார். இறுதியில் விக்ரம் தனது சிக்ஸ் பேக் உடலை திரும்பப் பெற்று வில்லனை வீழ்த்தி நாயகியை கைபிடிக்கிறார்  என்பதே கதை.
 ''தி ஃபிளை'' என்ற ஹாலிவுட் திரைப்படத்திலிருந்து பிறந்தது  ''ஐ'' என்றாலும் எம்மால் புரிந்து இரசிக்கக்கூடியதாக எம்மொழிமூலம் ஒரு வித்தியாசமான திரைப்படத்தை உருவாக்கிய ஷங்கரை பாராட்டாமல் இருக்கமுடியாது. 

ஆசிட் வீச்சிலும், ஆக்கிரமிப்புப் போர்களிலும் அங்கங்களை இழக்கும் மனிதர்களை இப்படம் எப்படி பார்க்கிறது? யானைக்கால் வியாதி கொண்டோர், இதர  நோய்களால்விகாரத்தோற்றம் கொண்டோரெல்லாம் ஏழைகளின் பகுதியில் இயல்பாகத்தான் வாழ்கிறார்கள். ஆனால் மயிலாப்பூர் பகுதிகளில் அந்த உணர்வு எப்படி இருக்கும்? விடை வேண்டுவோர் படம் பார்க்கலாம்.


-தொகுப்பு :கன்னன் 







Origins of Tamils?[Where are Tamil people from?]PART :44

Compiled by: Kandiah Thillaivinayagalingam
As we said earlier,Sumer was a region located on the southern Mesopotamian plains. It was settleed around  5000~4000 B.C. by Mesopotamians who were later known as Sumerians. Sumer extended over 10,000 square miles and consisted of various powerful city-states, such as Lagash, Ur, and Uruk. The Sumerian environment had a number of disadvantages - hot summers, a lack of rainfall, and rivers that flooded unpredictably. Historians believe the Sumerians' struggles with this harsh environment inspired some of their greatest achievements. Many inventions, such as writing, the plow, and the sailboat, were adapted by other civilizations, and some are still in use today. For these reasons, some historians refer to Sumer as the "cradle of civilization." Now I  briefly  outlining their achievements below,which were already mentioned or not mentioned in other chapters earlier:

The Arch:

Sumerian arches were inverted U- or V-shaped openings built above doorways. Because the Mesopotamian architects didn't have easy access to wood or stone,generally speaking,they couldn't use wood beams or stone supports to span the tops of doorways. The arch was invented to solve this problem, allowing the Mesopotamians to work around their lack of other local buildings materials.The Mesopotamian arches are made of the same mud brick as the walls. Sumerians built arches by stacking bricks one on
top of the other The bricks rose in steps from the wall and met in the center Arches added both strength and beauty to Sumerian architecture Also we found as shown above a pointed arch made of stone as part of a house at Ur and dates to approximately 2160 B.C.  
City-States/Kings:
The Stele of Naram-Sin, a rounded stone slab depicting King Naram-Sin and his soldiers on the battlefield. It was found at Susa in Iran and dates to the second half of the third millennium B.C.Naram-Sin was the grandson of Sargon and the first to unify the whole of Mesopotamia around 2350 BC.This monument depicts the Akkadian victory over the Lullubi Mountain people.Naram-Sin expanded the territory of Akkad, improved administration by standardizing accounting, and increased the religious prominence of Akkad by installing several daughters as high priestesses Naram-Sin traded with Meluhha (almost certainly corresponding to the Indus Valley civilization) Also Naram-Sin's aunt was the High Priestess En-hedu-ana.Except for the period 2370-2230 B.C, when the Sumerian city-states were subdued by the rulers of Akkad , the region immediately to the north, the Sumerians remained prosperous and powerful until the beginning of the second millennium B. C.
Cuneiform Writing
 A circular cuneiform tablet from Lagash in Iraq, dating to approximately 1980 B.C.This Cuneiform writing was most probably invented in Uruk in southern Mesopotamia (modern Iraq) about 3400 - 3300 BC. It was invented to keep records of goods and services, and the language that was recorded was, as far as we can tell, Sumerian.Humans had been speaking for a couple hundred thousand years before they got the inspiration or nerve to mark their ideas down for posterity.But when a Mesopotamian people called the Sumerians finally did scratch out a few bookkeeping symbols on clay tablets 5,000 years ago, they unknowingly started a whole new era in history.In about 3200 BC temple officials in Sumer develop a reliable and lasting method of keeping track of the animals and other goods which are the temple's wealth.On lumps of wet clay the scribes draw a simpified picture of the item in question. They then make a similar mark in the clay for the number counted and recorded. When allowed to bake hard in the sun, the clay tablet becomes a permanent document.Before the invention of a much simpler alphabet, only a small group of men had the time to learn how to read and write a system using some 700 symbols. These men were known as scribes.Fully qualified scribes could look forward to a promising career working for the king, temple, or rich merchants. They had high status in society, since their skills were so specialized.The importance of writing to history is hard to overestimate. Without it, kings, priests, and businessmen would not be able to keep track of anything beyond their immediate surroundings. With it, trade routes could expand and kings could keep the tax and census records necessary for expanding their city-states into empires.
PART::45 WILL FOLLOW IN NEXT WEEK

சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகை உணவுகள்!

இன்றைய வாழ்க்கை முறையில் நாம் பார்க்கும் முக்கிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோய் இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தி வருகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும்.ஆனால் இதனை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
சர்க்கரை நோய் இல்லையென்றாலும் சரி அல்லது சர்க்கரையின் அளவு எல்லையில் இருந்தாலும் சரி அல்லது பரம்பரை வியாதி என்றாலும் சரி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதோடு தவிர்க்கவும் செய்யலாம்.
இந்தியர்களுக்கு அதற்கான உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் 60:20:20 விகிதம் இருக்க வேண்டும். இப்போது சர்க்கரை நோய்க்கான மருத்துவர் மற்றும் உணவியல் வல்லுநர்கள், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பரிந்துரைக்கும் முதன்மையான 15 வகை உணவுகளை பற்றி பார்ப்போம்.
1.வெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
2.தக்காளி: நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்
3.பாதாம்: தினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.
4.தானிய வகைகள்: தானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங் கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட தோன்றினால், அதனு டன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள் ளவும்.
5.பால்: பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது.
6.காய்கறிகள்: அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
7.பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் ரத்த குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது.
8.ஒமேகா3: ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பினி போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது. கனோலா எண்ணெய், சணல் எண்ணெய், கொழுப்பு மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் இயற்கையாகவே இந்த கொழுப்புகள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கொழுப்பு அளவு குறைவாகவே இருக்கும்.
9.பழங்கள்: அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் இதை அதிகமாக உண்ணக் கூடாது.
10.உணவு முறை: அதிகமாக உண்ணுவதால் ஒருவரின் உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சிறிய அளவு உணவை போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சர்க்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்துள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
11.முக்கியமான உணவுகள்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட், அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம், வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவை உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள பண்டங்களை உண்ணக் கூடாது. போதிய இடைவேளையில் (5 வேளை) சிறிய அளவில் உணவை உட்கொள்ள வேண்டும்.
12.இயற்கை இனிப்பு: சர்க்கரை நோயாளிகள், கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனை கலந்து கொள்ளலாம்.
13.தண்ணீர் மற்றும் மதுபானம்: நிறைய தண்ணீர், காய்கறி மற்றும் பழச்சாறுகளை பருகவும். மேலும் மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
14.அசைவ உணவு: அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆனால் ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும்.
15.உணவு பழக்கம்: இந்தியர்களுக்கான சர்க்கரை நோய் கட்டுப்பாடு உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக நிற்கும்.
மேற்காணும் உணவுப் பழக்கத்தை தொடர்ந்து கையாண்டு வந்தாலே சர்க்கரை நோயின் பிடியில் இருந்து 100 சதவீதம் தப்பலாம். சர்க்கரை நோய் கண்டவர்கள் தாங்களாகவே மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை தவிர்த்து முறையான சிகிச்சையினை டாக்டரிடம் மட்டுமே எடுத்துக்கொள்வது சாலச் சிறந்தது. சர்க்கரை நோயற்ற வாழ்வை பெற முயன்ற அளவு முயற்சிப்போம்.

பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ?

 வாகனங்களில் அதிகப்படியாக பயன்படுத்தும் எரிபொருள்களில் பெட்ரோல் மற்றும் டீசல் முன்னிலை வகிக்கின்றது. மேலும் தற் பொழுது மாற்று ரிபொருள் பயன்பாடும் அதிகரித்தே வருகின்றது. மாற்று எரிபொருள்கள் சிஎன்ஜி, எல் பிஜி, மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்க ள் மேலும் எதிர்காலத்தில் ஹைட்ர ஜன் பயன்படுத்தப்படும் வாகனங்களு ம் வரவுள்ளன.
பெட்ரோல் vs டீசல் எது சிறந்தது
பெட்ரோல் சிறந்ததா ? டீசல் சிறந்ததா ? என கேள்வி கார் வாங்கும் அனைவருக்குமே இருக்கும். இந்த சந்தேகத்தினை முழுமையாக பல விவரங்களை கொண்டு மிக தெளிவான முடிவினை எடுக்க லாம்வாருங்கள்… 
கார் விலை
பெட்ரோல் கார் ஆனது டீசல் காரை விட விலை குறைவாக இருக் கும். இது பற்றி சிறிய விளக்கத்திற்க்காக மட்டும் செவ்ரலே பீட் காரை பயன் படுத்தலாம். பேஸ் மாடல்கள்
பீட் பெட்ரோல் கார் விலை 3.90 இலட்சம். (சென்னை விலை)
பீட்  டீசல் கார் விலை 4.75 இலட்சம்.(சென்னை விலை)
பெட்ரோல் காரை விட டீசல் கார் குறைந்தபட்சம் 1 இலட்சம் விலை அதிகமாகத்தான் இருக்கும். இது ஆரம்ப கட்ட முதலீடு மட்டுமே..

எரிபொருள் விலை
எரிபொருள் விலை இதுபற்றி சொல்ல வே தேவையில்லை இன்னை க்கு ஒரு விலை நாளைக்கு ஒரு விலை என தங்க விலை நிலவரம் போல ஆகி விட்டது. பெட்ரோல் விலை எப்பொழு துமே அதிகமாகத் தான் இருக்கும். குறைந்தபட்ச ரூ.20/- வித்தியாசம் இருக் கத்தான் செய்யகின்றது
1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 72.17
1 லிட்டர் டீசல் விலை ரூ 51.23..
ஒரு சின்ன கணக்கு..
பெட்ரோல் காரின் சராசரி மைலேஜ் 12- 15kmplஆகும். நாம் 14 கீமிமைலேஜ் வைத்துக்கொள்ளலாம். 1000 லிட்டர் பெட்ரோல் வாங்கு வதாக வைத்துக் கொள்ளலாம்.
14x 1000லி = 14000 கீமி பயணி க்கலாம். மொத்தம் ரூ 72,170
சராசரியாக 1 லிட்டருக்கு செலவு செய்ய  ரூ 5.15 ஆகும்.
டீசல் காரின் சராசரி மைலேஜ் 18-24 kmpl ஆகும். நாம் 20 கீமி மை லேஜ் வைத்துக்கொள்ளலாம். 1000 லிட்டர் டீசல் வாங்குவதாக வைத்துக் கொள்ளலாம்.
20x 1000லி = 20000 கீமி பயணிக்கலாம். மொத்தம் ரூ 51,230
சராசரியாக 1 லிட்டருக்கு செலவு செய்ய  ரூ 2.56 ஆகும்.
பெட்ரோல் காரில் சிக்கன நடவடிக்கை இவ்வாறு எடுக்கலாம்..
 பெட்ரோல் கார்களில் ஒரு கூடுதல் வசதி உள்ளது ரூ 50,000 – 60,000 செலவு செய்து சிஎன்ஜி கிட்  அல்லது  எல்பிஜி கிட் இனைத்து க்கொள்ளலாம். பயன்படுத்தி கிட்கள் 25000-30000 த்திற்க்குள் கிடைக்கும். இதன் மூலம் எரிபொருள் செலவினை குறைக்கலாம்.
எல்பிஜி எரிபொருள் செலவு 1 கீமி- ரூ 1.50 ஆகும்.
சிஎன்ஜி எரிபொருள் செலவு 1 கீமி- ரூ 1 ஆகும்.
நாடு முழுவதும் பரவலாக கேஸ் ஃபில்லிங் நிலையங்கள் தொடங்கப்பட்டு வருகின்ற .
கேஸ் இனைப்புகளை டீசல் காரில் பயன் படுத்த இயலாது.
பராமரிப்பு செலவு
பராமரிப்பு மிக அவசியமான ஒன்று வாகனங்களின் செயல்திறன், தேவையற்ற பழுதுகள் என பல பிரச்சனைகளுக்கு நிவாரனமாக இருக்கும். பெட்ரோல் காரை விட டீசல் கார் பராமரிப்பு செலவுகள் சில ஆயிரம் கூடுதாக இருக்கும். பெட்ரோல் கார்களில் தற்பொழுது ஜீரோ பராமரிப்பு நுட்பங்கள் கூட வர தொடங்கியுள்ளது. டீசல் கார்கள் பரா மரிப்பு செலவுகளை குறைக்கவும் பல நவீன நுட்பங்களை புகுத்தி வருகின் றனர்.
கார் பயன்பாடு
பயன்பாட்டின் சில காரணிகளை வை த்தும் எரிபொருள் வகையி னை தேர்ந்தேடுக்கலாம். தினந்தோறும் பயனிப்பவர்கள் அதாவது சராசரியாக வாரத்தில் 1000 கீமி பயன் படுத்தபவராக இருந்தால் பெட்ரோல் காரை தேர்ந்தேடுக்கலாம். எதனால் என்றால் பராமரிப்பு செவுகளில் உங்களை அதிகம் பதம்பார்க்காது. வாரத்திற்க்கு 250 கீமி பயன்படுத்துபவராக இருந்தால்  டீசல் காரை தேர்ந்தேடுக்கலா ம். நெடுஞ்சாலை பயணம் அதிகம் செய்பவர்கள் டீசல் கார் வாங்க லாம். நகரங்களில் அதிகம் பயன் படுத்துபவர்கள் பெட்ரோல் காரை முயற்சிக்கலாம்.
விளக்கம்(1000 கீமி பொதுவாக எடுத்துக் கொள்ளப்பட்டள்ளது)
பெட்ரோல் கார் என்றால் சராசரியாக 70 லிட்டர் (மைலேஜ் 14கீமி) தேவைப்படும். பெட்ரோல் செலவு 5000, பராமரிப்பு செலவு 3000 வரலாம்.
டீசல் கார் என்றால் சராசரியாக 50 லிட்டர் (மைலேஜ் 20கீமி) தேவைப் படும். டீசல் செலவு 2600, பராமரிப்பு செலவு 4500 வரலாம்.
சராசரியாக இரண்டுமே ஒரளவு சமா மாகத்தான் வர முயற்சி செய்யும் ஆனால் டீசல் கார் பயன்பாடு கூடும் பொழுது பராமரிப்பு செலவு கூடும்.
பெர்பாமன்ஸ்
பெட்ரோல் கார் ஆனது டீசல் காரைவிட வேகம் கூடுதலாக இருக் கும்ஆனால்
டீசல் காரில் மிகுந்த டார்க் கிடைக்கும். பெட்ரோல் காரில் டார்க் குறைவாக கிடைக்கும்.
மறு விற்பனை விலை
பயன்படுத்தப்பட்ட காராக விற்கும் பொழுது பெட்ரோல் கார்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். டீசல் கார் சற்று குறைவா கத்தான இருக்கும்.
5 வருடங்களுக்கு மேல் டீசல் பயன்படுத்தப்பட்ட கார்கள் தொல்லைகள் அதிகம் இருக்கும். ஆனால் பெட்ரோல் காரில் குறைவாக இருக் கும்.
 மேலும் சில . . .
 பெட்ரோல் காரில் குறைவான சத்தம் வெளிப்படுத்தும்,டீசல் காரில் சற்று அதிகமான சத்தம் வரும்.
பரிந்துரை
பெட்ரோல் அல்லது டீசல் எதுவாக இருந்தாலும் சராசரியாக இறுதி யில் சமாமாகத்தான் முயற்சிக்கும். அதன் இயல்புதன்மைக்கு ஏற்ப சிலவற்றை கூடுதலாக தரும்.
இவற்றையும் கடந்த மாற்று எரி பொருளுக்கு முக்கியத்துவம் கொடு த்தால் நன்றாக இருக்கும்.

*இக்கட்டுரைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மைலேஜ், விலை விபர ங்கள், கணக்கீடுகள் அனைத்தும் தோராயமாக எடுத்துக் கொள்ளப் பட்டது.
 thanks to automobiletamilian