ஒளிர்வு:50 -தமிழ் இணைய மார்கழி இதழ் :,2014-எமது கருத்து

வாசகர்கள் அனைவருக்கும்  
நத்தார்,புத்தாண்டு
 நல்வாழ்த்துக்கள் 


தீபம் வாசகர்கள் அனைவருக்கும் குளிர்மையான மார்கழி வணக்கம்.தனி மனிதனாக இருந்தாலும் சரி, ஊடகங்களாக இருந்தாலும் சரி அவசியமற்ற விடயங்களை அலட்டிக்கொள்வது இயந்திர உலகில் வாழும் இக்கால மனிதனைப் பொறுத்த வரையில் சகித்துக்கொள்ள முடியாதவை மட்டுமல்ல அவை குப்பைகளாகவே கணிக்கப்படும்.இதனையே அன்று வாழ்ந்த திருவள்ளுவரும் கூட ,
                           ''பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
                           மக்கட் பதடி யெனல்.''
அதாவது,பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்,என்று கூறியுள்ளார்.எனவேதான் நாமும் எமது இடுகை விடையத்தில் என்றும் அவதானமாக இருந்து வருகிறோம்.


மேலும் ,வள்ளுவன் கூறியதுபோல் எவரும் பதராக வாழாது அடுத்தவனுக்குப் பயனுள்ளவனாக வாழ்வதன் மூலமே அனைவரும் இணைந்து வளரமுடியும். வாழ்க!,வளர்க! என தீபம் அனைவரையும் வாழ்த்துவதில் மகிழ்வடைகிறது.

No comments:

Post a Comment