மனிதன் அறிவுக்கு எட்டியவரை கெட்டுப்போகாத ஒரே உணவு தேன் மட்டுமே. எகிப்திய ஃபரோஸ் கல்லறைகளில் கிடைத்த தேனை சாப்பிட்டு பார்த்து இதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளார்கள்.
1880 ல் தாய்லாந்து நாட்டின் ராணி தண்ணீரில் மூழ்கிகொண்டிருந்த போது பாதுகாவலளர்கள் பார்த்துக்கொண்டே நின்றார்களே தவிர யாரும் காப்பாற்றவில்லையாம். ஏனெனில் ராணியை அவர்கள் தொடுவது தடுக்கபட்டிருந்ததாம்.
பண்டைய ரோமர்கள் கி.மு. 25 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடித்த் நீருக்கடியில் பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவையின் அடிப்படை ஃபார்முலாதான் இன்றும் நீருக்கடியில் பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவை உருவாக்கப்படுகிறது
ராம் பகதூர் பொம்ஜன், என்கிற ஒரு இளம் புத்த துறவி, ஒரு மரப்பொந்தில் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் 10 மாதங்கள் தவம் இருந்த்தாக நம்பப்படுகிறது. இந்த நம்பமுடியாத கூற்றை பரிசோதிக்க, டிஸ்கவரி சேனல் 4 நாட்கள் நேரடியாக பகல் மற்றும் இரவு முழுவதும் படமாக்கப்பட்டது. அதில் அவர் அந்த நான்கு நாட்களில் எவ்வித அசைவும் இன்றியும் வேறு எவ்விதமான தொடர்பும் இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
0 comments:
Post a Comment