விந்தையான விடயங்கள் -07

ஓசி ஆகக் கிடைத்தால்.... [o.c.s.]
இலவசமாக எதையேனும் பெறுவதை  என்னஓசியா என்று கேலியாக கேட்பது தமிழர்  வழக்கம். இச்சொல் எப்படி நடைமுறைக்கு வந்தது ? என்பது சுவாரசியமான விஷயம்.
ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காலத்தில் அவர்களின் அரசுத்துறையை O.C.S. (The UK’s Office for Civil Societ y, part of the government’s Cabinet Office ) என்று குறிப்பிடுவார்கள். எனவே அரசாங்கம் தொடர்பான தபால்களில் ஸ்டாம்ப் ஒட்டப்படாமல்  on O.C.S. service  (இதையே On Company Service என்றும் கூறுவதுண்டு.) என்ற முத்திரை குத்தப்பட்டு இருக்கும். அப்படி வரும் தபால்களை தபால் இலாகா ஊழியர்கள்  o c s  என்று குறிப்பிடுவார்கள் அது காலப்போக்கில் மருவி  OC ஆகிவிட்டிருந்தது. அதே சொல் தபால் துறையை தாண்டி பொது வழக்கத்திலும் பயண்படுத்தபட்டு இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொல்களில் ஒன்றாக மாறிவிட்டது.

x – ray
யார் ? என்ன? என்று தெரியாதவற்றைஎக்ஸ்என்று குறிப்பிடுவது வழக்கம். ’எக்ஸ்ரேவுக்கு அப்பெயர் எப்படி வந்தது ?
எக்சு-கதிர்கள் என அழைக்கப்படும் இராண்ஜன் கதிர்கள் (Roentgen rays) 1895 நவம்பர் 8 ஆம் நாள் ஊர்சுபெர்க் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்த வில்லெம் இராண்ஜன், குறூக்சு குழாயுடன் வளியில் மின்னிறக்கம் நிகழ்வதை ஆய்ந்து கொண்டு இருக்கும் போது தற்செயலாக, அருகில் இருந்த பேரியம் பிளாட்டினோ சையனைட் பூச்சுடைய ஒரு அட்டை ஒளிர்வதைக் கண்ணுற்றார். மின்னிறக்கம் நிகழும்போது ஒளிர்வதும் இல்லாத போது ஒளிராமலும் இருக்கக் கண்டார். இதற்கு குழாயின் சுவர்களிலிருந்து வெளிப்படும் புதிரான ஒருவகை கதிர்களே காரணம் எனக் கருதினார். இக்கதிர்களை அவர் எக்சு-கதிர்கள் என அழைத்தார்.

( டிரான்ஸிஸ்டர்) ரேடியோ

ரேடியோக்கள் எனப்படும் வானொலிப்பெட்டிகள் தொடக்கத்தில் வால்வுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டன. அவை அளவில் பெரியனவாகவும், அதிக மின்சக்தி தேவைப்பட்டதாலும் அவை கையடக்கமாக வெளியில் எடுத்துச்செல்லும் வகையில் தயாரிக்க இயலவில்லை. மின்னனுவியலில் மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட டிரான்ஸிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் கைக்கு அடக்கமான சிறிய வானொலிப்பெட்டிகள் புழக்கத்திற்கு வந்தன.  டிரான்ஸிஸடர்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட வானொலிப்பெட்டிகள் டிரான்ஸிஸ்டர் ரேடியோக்கள் எனப்பட்டன. அவை காலபோக்கில் டிரான்ஸிஸ்டர் என்று மட்டும் அழைக்கப்பட்டு டிரான்ஸிஸடர் என்றால் சிறிய அளவுள்ள வானொலிப்பெட்டிகளின் பெயரேட்ரான்ஸிஸ்டர்கள்என்றாகிவிட்டது !.
நன்றி:விஞ்ஞானக்கல்வி


0 comments:

Post a Comment