வீட்டிற்கு வரும் முன்னரே Ac யை இயக்கி வீட்டை குளிரச் செய்வது, தானாக திறக்கும் கதவு, கை தட்டினால் அணையும் விளக்கு, குழந்தைகளை கண்காணிக்கும் சிறிய வெப் கேமரா , வீட்டின் wifi இணைப்பு என மேலை நாடுகளில் இதுபோன்ற உபகரணங்கள் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளது.
சமீபத்தில்,
குழந்தைகளை கண்காணிக்க வீடுகளில் , பொம்மைகளில் வைக்கப்பட்ட வெப் காமிராக்களை ரசிய நாட்டு ஹேக்கர்கள் ஊடுருவி Live Streaming செய்து ஒரு பொதுவான வீடியோ தளத்தில் தெரியுமாறு செய்துவிட்டனர்.
வீட்டினுள் நடக்கும் விஷயங்கள் கிரிகெட் மேட்ச் மாதிரி live ஆ வெளியே தெரிந்தால் என்ன ஆவது? இந்த ஊடுருவலை மக்கள் விழிப்புணர்வு பெறவே தாங்கள் நடத்தியதாகவும். பலரும் தங்கள் மோடமின் Default Password ஐ மாற்றுவதில்லை., அல்லது யுகிக்ககூடிய எளிமையான கடவுச்சொல்லை வைக்கிறார்கள். இதே தகவலை பிரபல ஆன்ட்டி-வைரஸ் avast நிறுவன அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
இணையத்துடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் வீட்டுக் கருவிகள் புதிது புதிதாக தினமும் கிக் ஸ்டார்ட்டர் (KickStarter) இணைய தளத்தில் கண்டுபிடித்து வெளியிடுகிறார்கள்.
அதிகமாக டிஜிட்டல் வீட்டுக் கருவிகள் வரும் போது அதை பாதுக்காக்கும் நடவடிக்கையும் நாம் எடுக்க வேண்டும்.
0 comments:
Post a Comment