கமலின் மூன்று படங்கள் தயாராக உள்ளன. விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், பாபநாசம். சீனியாரிட்டிப்படி பார்த்தால் இதே வரிசையில்தான் படங்கள் வெளிவர வேண்டும். ஆனால் ஒவ்வொரு படத்துக்கும் பஞ்சாயத்து இருக்கிறதே?
விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார். அவரது பூலோகம், ஐ படங்களை வெளியிட்ட பின்பே விஸ்வரூபம் 2 குறித்து அவர் யோசிக்க முடியும். ஐ படத்தை வாங்க நான் நீ என்று போட்டி போட்டும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் காலம் கடத்துகிறார். அவர் விஸ்வரூபம் 2 படத்தை எவ்வளவுதூரம் இழுத்தடிப்பார் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது.
உத்தம வில்லன் முதலில் வரலாம் என்பதே அனைவரின் கணிப்பு. இதுபற்றி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல், மூன்று படங்களில் உத்தம வில்லனும், பாபநாசமும் முழுமையாக முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்றும், விஸ்வரூபம் 2 படத்தில் மட்டும் சில வேலைகள் பாக்கி இருப்பதாகவும் கூறினார்.
அப்படியானால் உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2 என்ற வரிசைப்படி படங்கள் வெளியாகுமா?
உத்தம வில்லன் முதலில் வெளியாக வாய்ப்புள்ளது. ஆனால், தயாரிப்பாளர்கள் கூடிப்பேசி என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று தெளிவாக குழப்பியுள்ளார் கமல்.
25 வருடங்களுக்குப் பிறகு என்னுடைய மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளிவரவிருக்கின்றன என்று அவர் கூறியிருப்பதுதான் கமல் ரசிகர்களுக்கு இப்போதைய ஒரே ஆறுதல்.
No comments:
Post a Comment