இந்தியாவில் இராமாயணத்தை மையமாக வைத்து அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. இராமர் இலங்கைக்கு உண்மையில் பாலம் கட்டிச் சென்றாரா? இல்லையா? என்பது விவாதத்திற்கு உரியதாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இராமாயணக் கதை நிகழ்ச்சியை அறிஞர்கள் ஆய்வு வழியில் நின்று உண் மையை காண வேண்டியது காலத்தின் தேவை.
இராமாயணக் கதை உண்மையில் நடந்த வரலாற்று நிகழ்ச்சியா என்பது பற்றி ஆய்வு வரலாற்று அறிஞர் கள், அது பழமையான கதையாகும், அந்த பொருளில் தான் சமஸ்கிருத மொழியில் “இதிகாசம்’’ என்று குறிப் பிடப்படுகிறது என்கிறார்கள். பேராசிரியர் கே.ஏ.நீல கண்ட சாஸ்திரியார் தனது History of India Vol.I நூலில் பக்கம் 34இல் குறிப்பிடுவதை ‘சங்க கால வாழ்வியல்’ என்ற நூலில் பக்கம் 519இல் பேராசிரியர் என்.சுப்பிர மணியன் மேற்கோளாகத் தந்துள்ளார். “சமய நம்பிக் கைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால், இராமாயணம் தத்துவப் பொருள் பொதிந்த கதையுமன்று, வரலாறு மன்று. புராணக் கதையடிப்படையில் எழுந்த கவிதை யேயாம்’’ என்று இராமாயணம் வரலாறு அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
பேராசிரியர் ஏ.எல்.பாஷம் அவர்களின் The Wonder that was India நூல்
மக்களிடம் வழங்கி வந்த ஒரு கதை பின்னர் பெருங்காப்பியமாக ஆக்கப்பட்டது.
வால்மீகி, இராமாயணம் எழுதுவதற்கு முன்பு ஜாதக கதைகள் என்ற பெயரில் இராமா யண கதை வழங்கப்பட்டு வந்தது. இதனை வரலாற்று பேராசிரியை சுவிரா ஜெயஸீவால் “தசரத ஜாதகக் கதையில் வரும் இராம கதை கிடைத்துள்ள கதைகளில் மிகப் பழமையானது. அது வால்மீகியின் இராமய ணத்தி லிருந்து சில முக்கிய நிகழ்ச்சி குறிப்புகளில் மாறுபடு கிறது. தசரதன் அயோத்தி அரசன் அல்லன். வாரணாசி மன்னன் என்று கூறுவதுடன் இராமன், இலக்குமணன், பரதன், சீதை ஆகியோரையும் குறிப்பிடுகிறது.
இராமன்,
இலக்குமணன்,
சீதை ஆகியோர் தசரதருடைய முதல் மனைவிக்கு பிறந்தவர்கள். பரதன் அவர்களுக்கு மாற்றாந்தாயின் மகன் என்று குறிப்பிடுகிறது.
மாற் றாந்தாயின் தீய சதித்திட்டங்களிலி ருந்து தப்புவிக்கும் பொருட்டு தசரதன் இராமனையும், இலக்குவ னையும், இமயமலைப் பகுதிக்கு நாடு கடத்துகிறான். சீதை உடன் பிறந்த வரோடு தானும் செல்லவேண்டு மென்று வற்புறுத்துகிறாள்.
அவர் கள் நாடு கடத்தப் பட்டது வால்மீகி இராமாயணம் கூறுவது போல பதினான்கு ஆண்டுகள் அல்ல. பன்னிரண்டு ஆண்டுகளே. நாடு கடத்தப்பட்ட காலக்கெடு முடிந்த பின் தன் சகோதரியான சீதையை இராமன் மணம் புரிந்து கொண்டு பட்டத்தரசியாக ஆக்குகிறான். சீதை கவர்ந்து செல்லப்பட்டதோ. இலங்கைப் படையெடுப்போ அதில் சொல்லப் படவில்லை.’’ (வைணவத் தின் தோற்றமும், வளர்ச்சியும் பக்கம் 203-204).
வால்மீகி தனக்கு முந்தி வழங்கி வந்த இராமன் பற்றிய கதைகளை மாற்றியும், திருத்தியும் தன் கற்பனை திறத்தால் ஒரு காவியம் புனைந் துள்ளார். இராமாயணத்தில் கூறப் படும் லங்கா (Lanka) என்பது இலங்கை அல்ல. அது மத்திய பிர தேச மாநிலத்தில் உள்ள ஒரு இடம் என்று பல வரலாற்று, தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட் டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த டி.பரமசிவம் ஐயர் Ramayana and Lanka என்ற நூலை 1940இல் எழுதி யுள்ளார். இதற்கு முன்பு எம்.வி. கிப்வே, Ravana’s Lanka Located in
Central India (1928) என்ற கட்டுரையும், பேராசிரியர் ஹிராலால் “The Situation of Ravana’s
Lanka” (1932) என்ற கட்டுரையும் எழுதியுள்ளார். தொல் லியல் பேராசிரியர் எச்.டி. சங்காலி யாவின் நூல் Ramay ana : Myth or Reality
(1973) விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது.
பேராசிரியர் எச்.டி.சங்காலியா “வால்மீகி விந்தியமலைக்கு தெற்கே உள்ள இந்தியாவின் தென்பகுதி யைப் பற்றி ஏதும் அறியாதவர். தென்பகுதி மக்களின் பழக்க வழக் கங்கள் பற்றி வால்மீகிக்கு ஏதும் தெரியாது’’. (பக்கம்.17) என்று குறிப்பிடுகின்றார்.
அதற்கு உதாரணமாக “வாலி இறந்தபின் அவன் உடல் எரிக்கப்படுகிறது என்று வால்மீகி குறிப்பிடுகிறார்.
ஆனால் இறந்தவர் உடலை எரிப்பது ஆரியர் வழக்கம். மிகப் பழங்காலத் தில் தென்னிந்தியாவில் வடக்கே கோதாவரி நதியிலிருந்து தெற்கே தாமிரபரணி வரையான பகுதியில் இறந்தவர் உடலை எரிக்கும் பழக்கம் கிடையாது.’’ (பக்கம்.17) என்று குறிப்பிடுகிறார்.
பேராசிரியர் எச்.டி.சங்காலியா “சீதையை தேட அனுமனுக்கு சுக்ரீவன் விவரம் தெரிவிக்கும் பொழுது கூறும் இடங்களை ஆய்வு செய்த ஹிராலால், முனைவர் ராமதாஸ், சர்தார் கிப், பரமசிவ ஐயர் ஆகியோர் செய்த முடிவு “லங்கா” என்பது சித்திர கூட மலைக்கு தெற்கே நர்மதா நதிக்கு வடக்கே உள்ள இடமாகும் என்று கூறுகிறார்.’’ மேலும் அவர் இந்த பகுதி சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதியாகும் என்றும், இதுகிழக்கு மத்திய பிரதேசம், மேற்கு ஒரிசா, மேற்கு வங்கம், தெற்கு பீகார் பகுதியில் உள்ளது என்றும் தெளி வாகக் குறிப்பிட்டுள்ளார்
(பக்கம்.
46).
வால்மீகி இராமாயணம் பல அறிஞர்களால் ஆய்வு செய்யப் பட்டு, ஒரு செம்பதிப்பு பரோடா நகரில் உள்ள ஓரியண்டல் இன் ஸ்ட்டியூட்டால் 1960 முதல் 1969ஆம் ஆண்டு வரை ஆறு காண்டங்களும் வெளியிடப்பட் டன. எச்.டி.சங்காலியா தனது ஆய் வுக்கு இந்தப் பதிப்பையே பயன் படுத்தியதாக குறிப்பிடுகிறார்.
இந்த பதிப்பு இராமாயணத்தில் இடைச் செருகலாக சேர்க்கப்பட்ட பாடல் களை நீக்கி பதிப்பிக்கப்பட்டது.
இந்த பதிப்பில் வால்மீகியின் வருணனை இயல்பாக இருப்பதாக குறிப்பிடுகிறார்.
எச்.டி.சங்காலியா இராவணன் மத்தியபிரதேசத்தில் உள்ள கோன்ட் (Gond) பழங்குடி மக்களின் அரசன். அந்த மக்களிடம் இரா வணன் இன்றும் மிகச்சிறப்பாக மதிக்கப்படுகிறான் என்றும், லங்கா என்பது உயர்ந்தப் பகுதி தீவு என்றும் குறிக்கப்படுகிறது.
வானரர்கள் என்போர் சரவர் (Saravars) மற்றும் கோர்குஸ் (Korkus) என்ற பழங்குடி இனத்தவர் என்றும் குறிப்பிடுகிறார்.
(பக்கம்
47)
இலங்கையின் பழைய பெயர் களில் லங்கா (Lanka) என்பது காணப்படவில்லை இலங்கையின் பழைய பெயராக சிங்களா தீபா என்று கல்வெட்டுகளிலும்,
இலக்கியத்திலும் குறிப் பிடப்படுகிறது. வெளிநாட்டார் தப்ரபோன் (Taprobane) தாமிரபரணி என்று குறிப்பிடுகின்றனர் என்கி றார், எச்.டி.சங்காலியா (பக்கம்.49). வால்மீகி இராமாயணத்தில் வான ரங்கள் சண்டையிடும் போதும், சேது பாலம் கட்டும் போதும் பயன்படும் சாலா மரம் சோட்டா, நாக்பூர் பீடபூமியில் மட்டும் காணப்படும் ஒன்றாகும். (பக்கம் 48). லங்கா (Lanka) மற்றும் ராவணா (Ravana) என்ற சொற்கள் முன்டா மொழிச் சொல்லாகும். (பக்கம். 49) என்றும் குறிப்பிடுகிறார்.
நன்றி:கீற்று
No comments:
Post a Comment