தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடுத்த மாதம் கொண்டாட்டம்தான்.
ஏனெனில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா’ படம் அவரது பிறந்த நாள் அன்று வெளியாக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது.
வாலி, குஷி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.ஜே. சூர்யா இயக்கி, இசையமைத்து நடிக்கும் ‘இசை’ படமும் டிசம்பரில்தான் வெளியாகிறது.
இத்துடன் லாரன்சின் ‘முனி-3’, பிரபு சாலமோன் இயக்கியுள்ள கயல், சிம்புவின் வாலு ஆகிய படமும் வெளியாக இருக்கிறது.
கடும் போட்டிக்கு மத்தியில் சித்தார்த் நடித்துள்ள ''எனக்குள் ஒருவன்'' என்ற படமும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் தெலுங்கில் வெற்றி பெற்ற ‘லூசியா’ என்ற படத்தின் ரீமேக் ஆகும்.
12-ந்தேதி ரஜினியின் லிங்கா ரிலீஸ் ஆவதால் அந்த வாரத்தில் மற்ற படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது கடினம். மேலும், லிங்கா சூப்பர் ஹிட் ஆனால் அடுத்த வாரம் வரை முன்னணி தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டமாக இருக்கும்.
No comments:
Post a Comment